Subscribe:

Pages

Monday, December 7, 2009

இதமாக...ஒரு பயணம்!

          சாதாரனமாகவே என்னைச் சுற்றி இருக்கும் அனைத்திலும் அழகு என்ற ஒன்றை தேடுபவள்… அதை கண்டு ரசித்து மகிழ்பவள். அதிலும் தானாகவே இயற்கையை கண்டுகளிக்க ஒரு வாய்ப்பு வந்தால்... அப்படி ஒரு நாள், எனக்கு நேற்று கிடைத்தது. அதுவும் ஆல்ப்ஸ் மலைகளை காண்பதற்கு.


மிக உயரமான மலைத்தொடர்கள்…ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக… சறுக்கலான பாறைகள்… பயங்கரமான பள்ளத்தாக்குகள்… அதன், ஒரு பக்கமாகவே தொடர்ந்த வந்த (பச்சையும் நீல நிறமுமாக) அழகிய ஏரி… குறுகிய சாலைகள், நடுங்க வைத்த குளிர் என்று நேற்றிய பயணம் மனதிற்கு இதமாக இருந்தது.


ஒவ்வொரு மலைகளையும் கடக்கும்போது இடையிடையே சின்ன சின்ன கிராமங்களைப் பார்க்க முடிந்தது. அவற்றிர்க்கென்று இருக்கின்ற தனித்தன்மையை இன்னும் இழக்காமல் இருப்பதை பார்க்க சந்தோஷமாக இருந்தது.


மலையடிவாரத்தில் இருந்து ஆரம்பிக்கும் சாலை வளைந்து வளைந்து, மலைகளைச் சுற்றியபடி உயரத்தில் செல்ல, சொல்ல முடியாத ஒரு பயம் மனதிற்குள் வந்து சென்றது. அதிலும் ஒவ்வொரு மலையாக கடக்கும்போதும் கீழிருந்து மேலே, மேலிருந்து கீழேவென்று சென்ற சாலையில் பயணிக்கும்போது ஏற்பட்ட உணர்வை என்னவென்று சொல்வது...அப்படி ஒரு த்ரில்.




மலைகளின் உச்சுக்கு சென்றபோது கண்ணுக்கு எட்டியவரை மனித நடமாட்டமே இன்றி, சுற்றிலும் மலைகள்... மலைகள்… மலைகளை தவிர எதுவுமில்லை. என்னவோ இந்த உலகத்தில் யாருமே(என்னையும், என்னவரையும் தவிர) இல்லாததை போன்ற ஒரு த்ரில்லான அனுபவமாக இருந்தது.






இன்னும் சில நாட்களில் குளிர்க்காலம் ஆரம்பமென்பதால் ஆங்காங்கே மலைகளின் மேல் பனிக் கொட்டிக் கிடந்தது.



சாலைகளின் ஓரத்திலிருந்த மரங்களைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். தற்பொழுது இலையுதிர் காலம் என்பதால் உதிரும் தருவாயில் இருந்த இலைகளின் அழகினை சொல்வதற்கு வார்த்தைகள் போதாது. பூக்களின்றி இருக்கும் மரங்கள் கூட இத்தனை அழகா…. இருக்கும் என்பதை அங்கே தெரிந்துக்கொண்டேன். பச்சை, ஊதா , மஞ்சள், ஆரஞ்சு, சிகப்பு, சாக்லெட்கலர்…. என ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு நிறத்தில் இருந்தது. சாலையின் ஓரத்தில் காரை நிறுத்த முடியாமல் போனதால், அந்த மரங்களை எல்லாம் புகைப்படம் எடுக்க வேண்டுமென்ற என் ஆசை நிறைவேறவில்லை. அப்படி இருந்தும் ஓடும் காரில் இருந்தப்படியே ஒன்றே ஒன்று…


என் மனது மட்டுமல்ல சந்தோஷத்துடன் எனது கேமரவும் அந்த அழகியக்காட்சிகளை பதிவு செய்துக்கொண்டது.








இயந்திரத்தனமான வாழ்வில் இருந்து விடுப்பட்டு மாதம் ஒரு முறையாவது இப்படி சென்றுவர வேண்டும் என்ற முடிவுடன், என்னை புதிப்பித்துக் கொடுத்த இயற்கைக்கும்..... அழகாக கவனமாக கார் ஓட்டிச் சென்று, கார் நிறுத்தக்கூட வசதியில்லாத இடங்களிலும் எனக்காக காரை நிறுத்தி போட்டோ எடுக்க உதவிய என்னவருக்கும்......  நன்றி சொல்லிக்கொண்டே சுத்தமான காற்றை சுவாசித்து வந்த திருப்தியுடன் இரவு உறங்கச் சென்றேன்.

19 comments:

malarvizhi said...

புகைப்படங்கள் அருமையாக உள்ளது. உங்கள் வர்ணனைகளும் தான்.

Bagavathy said...

அழகும் அழகும் ....
நிழலும் உங்கள் தமிழும் ....

சாருஸ்ரீராஜ் said...

புகைபடங்கள் அனைத்தும் அருமை . உங்கள் பயணம் பற்றிய குறிப்புகள் அருமையாக இருந்தது.

tt said...

அழகான மலைகள், அற்புத வடிவங்கள் கொண்ட பாறைகள், காற்றில் நடனம் புரிந்து கொண்டிருக்கும் மரங்கள், மரக்கிளைகளின் ஓவியங்கள்..... இதையெல்லாம் பார்க்கும் போது நாம் இன்னும், இன்னும் அதிகமாக இந்த மண் மீது பேரன்பு கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது..

ஜெனோவா said...

இயற்கையின் மடியில் உறங்கிக்கொண்டும் , ஆல்ப்ஸ் மலைகளின் முதுகிலேறி அம்பாரி செல்லவும் வாய்த்திருக்கிறது உங்களுக்கு !

புகைப்படங்கள் அழகு ,பயணக்கட்டுரையும் தான் !
வாழ்த்துக்கள் பிரியா

Priya said...

நன்றி MALARVIZHI!

நன்றி sofi!

நன்றி sarusriraj!

நன்றி த‌மிழ்...//அழகான மலைகள், அற்புத வடிவங்கள் கொண்ட பாறைகள், காற்றில் நடனம் புரிந்து கொண்டிருக்கும் மரங்கள், மரக்கிளைகளின் ஓவியங்கள்..... //இதை வைத்தே ஒரு கவிதை எழுதலாம் போலிருக்கே!

நன்றி ஜெனோவா!

தமிழ் உதயம் said...

இயற்கையை நேசிக்கும் மனது எல்லோருக்கும் இருப்பதில்லை. சுற்றுலா செல்லும் வாய்ப்பு எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. இரண்டும் உங்களுக்கு வாய்த்து, அதை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டது மிக்க மகிழ்ச்சி.

suvaiyaana suvai said...

புகைப்படங்கள் அழகு ,பயணக்கட்டுரையும்!!

Priya said...

நன்றி tamiluthayam!

நன்றி Suvaiyaana Suvai!

Raghu said...

எல்லா ஃபோட்டோஸும் சூப்ப‌ர்ப்!

நாம‌ பாக்க‌ற‌ ஒரு ந‌ல்ல‌ விஷ‌ய‌த்த‌ ம‌த்த‌வ‌ங்க‌கிட்ட‌ ப‌கிர்ந்துக்க‌ற‌து ந‌ல்ல‌ ப‌ழ‌க்க‌ம்

பாராட்டுக்க‌ள் + வாழ்த்துக்க‌ள் ப்ரியா

Priya said...

//நாம‌ பாக்க‌ற‌ ஒரு ந‌ல்ல‌ விஷ‌ய‌த்த‌ ம‌த்த‌வ‌ங்க‌கிட்ட‌ ப‌கிர்ந்துக்க‌ற‌து ந‌ல்ல‌ ப‌ழ‌க்க‌ம்//....உண்மைதான்!
நன்றி குறும்ப‌ன்!

Menaga Sathia said...

புகைப்படங்கள் மிக அழகு.நீங்கள் அதை எடுத்திருக்கும் விதமும் அழகு...

Priya said...

நன்றி Mrs.Menagasathia!

இனியாள் said...

Ungaludan naanum alps malaiyil payanitha unarvu. Nalla padangal priya.

Priya said...

மிக்க நன்றி இனியாள்!

அண்ணாமலையான் said...

லக்கு வேனும்.. உங்களுக்கு இருக்கு.. என்ஜாய்....

Priya said...

அண்ணாமலையான்.........
//லக்கு வேனும்..//..லக்கியானவ அப்படினுதான் சொல்றாங்க!
ரொம்ப நன்றி!

Unknown said...

VERY WELL SAID TRAVALOGUE& EXCELLENT PHOTOGRAPHY .

Priya said...

Thank u SREE!

Post a Comment