Subscribe:

Pages

Tuesday, April 19, 2011

இறைவன் வரைந்த ஓவியங்கள்....

                ரு வழியாக குளிர் குறைந்துவிட்டது... காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களினால் அழகாக இன்னும் அழகாக மெருகேற்றிக்கொண்டிருக்கும் இயற்கையினை, இறைவனால் வண்ணம் தீட்டப்பட்ட ஓவியங்களை ரசித்திட இருக்கண்கள் போதாது. ஊரெங்கும் மலர்ந்திருக்கும் மலர்களோ பல விதங்களில் பல வண்ணங்களில் அழகாய் காட்யளித்துக்கொண்டிருக்கிறது.

உங்கள் கண்களுக்கு விருந்தளிக்க போகும் கீழே மலர்ந்திருக்கும் படங்கள் சென்ற வாரத்தில் எடுத்தது. ஏதோ மலர் கண்க்காட்சியில் எடுத்தது என்று நினைப்பீர்களானால் தவறு! எங்கள் வீட்டில் இருந்து சுமார் பத்துகீமீ தொலைவிற்குள்ளே சாலைகளின் ஓரங்களில் மரங்களிலும், செடிகளிலும், மட்டுமல்லாமல் கொடிக‌ளில் மலர்ந்தும், நிலத்தினில் படர்ந்தும் இருக்க... மனதை கொள்ளைக்கொள்ளும் இந்த மலர்களை மிகவும் ரசித்து படம் பிடித்தேன்.

































என் வீட்டு பூந்தொட்டியில் மலர்ந்திருக்கும் மலர்கள்....

ழுத்துக்களை கோர்த்து வாக்கியங்களாக்குவதை விட வண்ணங்களை குழைத்து ஓவியங்களாக்குவதே மிக சுலபமானதாக இருக்கிறது எனக்கு.
எழுதுவதற்கு தேவைப்படும் நேரத்தைவிட வரைவதற்கு தேவையான நேரம் குறைவு என்பதாலும் எப்பொழுதும் குறையாத கலை ஆர்வம் தொடர்வதாலும் கடந்த சில நாட்களாக‌ நிறைய‌ வரைந்துக்கொண்டிருக்கிறேன்.

இறைவன் படைத்த‌ ஓவியங்களோ அற்புதம்... அதற்கு நிகர் இல்லை என்பதால் அவற்றை ரசித்தபடியே இதோ நான் வரைந்த Magnolias roses(30x60cm)!



38 comments:

r.v.saravanan said...

எஸ் இறைவன் வரைந்த ஓவியங்கள் தான்

சரியான தலைப்பு பிரியா பகிர்வுக்கு நன்றி

Unknown said...

Iyarkai enum kodai,apazhukkatra oviyam.rasikkiren.

GEETHA ACHAL said...

ஆஹா..தலைப்பே அருமை...படங்கள் அதனை விட அழகு...

உங்கள் படமும் சூப்பர்ப்...வாழ்த்துகள்...

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!

எல் கே said...

சென்னைக் கோடையில் உங்கள் படங்கள் கண்ணுக்கு குளிர்ச்சி

சாருஸ்ரீராஜ் said...

அனைத்துமே மிக அருமை

puduvaisiva said...

வண்ணமலர்கள் அனைத்தும் அழகு ப்ரியா, இந்த மலர்களுக்கு மணம் உண்டா ?

ஆனா இங்கு வெயில் உடலை வருத்து எடுக்குது :-(

:-)

G.AruljothiKarikalan said...

iraivanin oviyangal ungalin oviyangal irandume arumai priya...

Sowmya said...

அற்புதம் அழகு மலர்கள்

Asiya Omar said...

அருமை,இறைவன் படைப்பிற்கு நிகராக உங்கள் படைப்பும் சூப்பர்...

Menaga Sathia said...

புகைப்படங்கள் செம அழகு..உங்கள் கைவண்ணமும் மிக அழகு!!

ப்ரியமுடன் வசந்த் said...

அழகு ப்ரியா

லாவண்டர் வண்ணப்பூக்கள் எல்லாமே கொள்ளையழகு பூக்கள் பெயரும் சொல்லியிருக்கலாம் !!

ஓவியம் வரைவதோடு நிறுத்திவிடாமல் பகிர்ந்து கொள்ளுங்களேன் !!

Chitra said...

Lovely photos. I love Spring time.

Chitra said...

Great painting.... very nice. :-)

Anonymous said...

சூப்பர்ப் ப்ரியா!.. பூக்களின் அழகில் மனதில் சந்தோசம் நிறைந்து தொடங்குகிறது இன்றைய காலை :)

சாந்தி மாரியப்பன் said...

பூக்கள் ஒவ்வொன்றும் ரொம்ப அழகு.. நீங்க வரைஞ்சது உட்பட :-)

Unknown said...

எழுத்துக்களை கோர்த்து வாக்கியங்களாக்குவதை விட வண்ணங்களை குழைத்து ஓவியங்களாக்குவதே மிக சுலபமானதாக இருக்கிறது/// so nice these lines..

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
அனைத்து படங்களும் பேசுகின்றன.
வாழ்த்துக்கள் அம்மா.

ராமலக்ஷ்மி said...

மலர்களை ரசிப்பதும் படமாக்குவதும் எனக்கும் விருப்பமான ஒன்று ப்ரியா. இயற்கையான சூழலில் அவற்றை அழகாகப் பதிந்துள்ளீர்கள்.

ஓவியங்களுக்கும் என் பாராட்டுக்கள்!

Priya said...

மலர்களின் வண்ணங்களை கண்டபோது எனக்குள் தோன்றினவையே தலைப்பாக வைத்துவிட்டேன் சரவணன் சார்.

ரசித்தமைக்கு நன்றி savitha!

வாழ்த்துக்களுக்கு நன்றி கீதா!

பூங்கொத்துக்கு நன்றி அருணா மேடம்!

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி எல்.கே. நன்றி சாருஸ்ரீராஜ்!

வாங்க புதுவை சிவா, ஒரு சில மலர்களுக்கு மட்டும் மணம் இருந்ததை அருகில் சென்று படம் பிடிக்கும்போது தெரிந்துக்கொண்டேன்!

தங்களது பாராட்டிற்கு நன்றி g.aruljothiKarikalan!

வந்து ரசித்ததற்கு நன்றி Sowmya!

மிக்க நன்றி asiya omar & S.Menaga !

Priya said...

நன்றி வசந்த், ஒருசில பூக்களின் பெயர்களை தவிர எனக்கு அனைத்தும் தெரியவில்லை.
நிச்சயமாக வரையும் ஓவியங்களை பகிர்ந்துக்கொள்கிறேன்!

நன்றி சித்ரா, எனக்கும் இந்த காலநிலை மிகவும் பிடிக்கும்!

மனதில் சந்தோசம் நிறைந்து தொடங்கும் காலை அப்படியே நாள் முழுவதும் தொடரட்டும் Balaji saravana :‍)

மிக்க நன்றி அமைதிச்சாரல்!

நன்றி சிவா!

மிக்க நன்றி Rathnavel சார்!

ராமலக்ஷ்மி மேடம், நீங்க எடுக்கும் ஒவ்வொரு புகைப்படங்களை நீண்ட நேரம் ரசித்து மகிழும் உங்க ரசிகை நான்!உங்கள் பாராட்டு பெற்றதில் மகிழ்ச்சிய‌டைகிறேன்!

ஹேமா said...

ஓ...வசந்த கால ஊர்வலமோ ப்ரியா !

போளூர் தயாநிதி said...

தலைப்பே அருமை...படங்கள் அதனை விட அழகு...

உங்கள் படமும்அழகு ...வாழ்த்துகள்...

Mahi said...

அழகான பூக்கள் ப்ரியா! மேக்னோலியா ரோஸஸும் அழகா வரைந்திருக்கீங்க.

வசந்தம் எப்பொழுதுமே அழகுதான்! :)

Priya said...

ஆமாம் ஹேமா.. வசந்தகால ஊர்வலம்தான்!

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி போளூர் தயாநிதி!

உண்மைதான் மகி வசந்தம் எப்பொழுதுமே அழகுதான்!

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

டியர் ப்ரியா

எல்லா படங்களும் சூப்பர்.. அதிலும், எனக்கு purple கலர் ரொம்ப பிடிக்கும்... அந்த படங்கள்.. கூடுதல் அழகுப்பா :)

(ரெகுலர்-ஆ வர முடியலை.. தப்பா எடுத்துக்காதீங்க )

Priya said...

நலமா ஆனந்தி? இதுல தப்பா எடுத்துக்க என்ன‌ இருக்க.. எப்போ முடியுதோ அப்போ வாங்க:)& உங்களை போலவே எனக்கும் Purple color பூக்கள் பிடிக்கும்!

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

நான் நல்லா இருக்கேங்க. உங்க அன்பிற்கு நன்றி :)

மாணவன் said...

படங்கள் அனைத்தும் கொள்ளை அழகு....

//இறைவன் வரைந்த ஓவியங்கள் //

சூப்பர் :))

பதிவிட்டு பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிங்க

சத்ரியன் said...

எனக்கும் பூக்களை மிகப்பிடிக்கும். மனதிற்கு இதம்!

thendralsaravanan said...

உங்கள் பதிவுகள் அனைத்துமே கலக்கல் தான்.கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது!
வாழ்த்துக்கள்!

மாலதி said...

பூக்கள் ஒவ்வொன்றும் ரொம்ப அழகு.. நீங்க வரைஞ்சது உட்பட ...

Thenammai Lakshmanan said...

பூக்கள் கொள்ளை அழகு பிரியா..:)

Anonymous said...

தலைப்பே கவிதை மாதிரி இருக்கு டிச்சர்...

அழகா இருக்கு அனைத்து படங்களும்...

Priya said...

வருகைக்கும் (மீண்டும்)நன்றி ஆனந்தி!

நன்றி மாணவன்!

சத்ரியன்.. பூக்களை பிடிக்காதவர்களும் இருப்பார்களோ...

நன்றி thendralsaravanan!

நன்றி மாலதி!

நன்றி தேனம்மை லெக்ஷ்மணன் மேடம்!

வாங்க மஹா, நல்லா இருக்கிங்களா? வருகைக்கு மிக்க நன்றி!

AMMU MOHAN said...

அருமையான படங்கள்..மஞ்சள் நிற பூக்கள் மிக அழகு.. அவற்றின் பெயர் Brassica napus (Rapeseeds oil) vegetable ஆயில் தயார் செய்ய பயன்படும் தாவரம் அது..உங்கள் ப்ளாக் மாதிரியா படங்களும் அழகா இருக்கு..

Anonymous said...

nalla iruku

tha123 said...

u..frl.....god...

Post a Comment