Subscribe:

Pages

Saturday, November 27, 2010

இயற்கையின் எழிலில்... வண்ண ஓவியங்கள்!

          கொஞ்சம் சிரமமாக தெரிந்தாலும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை புகைப்படம் எடுத்து, பின்பு அதை பார்த்து வரைவது என்பது சந்தோஷம் தர‌க்கூடியதாகவே இருக்கிறது. அப்படி என்னால் வண்ணம்தீட்டபட்ட‌ ஓவியங்கள் மிக குறைவுதான். கீழே காணும் இரண்டு ஓவியங்களும் அப்படி வரையப்பட்டவைக‌ள்தான். முதல் முறையாக என்னவரின் கொலீக் ஒருவர் அவர் வீட்டு அருகாமையில் உள்ள சிறிய பாலத்தையும் அதன் கீழே ஓடும் ஓடத்தையும் ரசித்தவராய் அதை அப்படியே பெயிண்ட் பண்ணி தருமாறு என்னிடம் கேட்டுக்கொண்டவர், பின் அவரே அந்த இடத்தை புகைப்படமும் எடுத்து கொடுத்தார். சில நாட்களிலேயே அவர் விரும்பியபடி வரைந்துக்கொடுக்க, சந்தோஷமுடன் பெற்று சென்றார். இதேப்போல் நான் வரைந்த ஐந்தாறு ஓவியங்கள் என்னை நியாபகப்படுத்தியபடி எனது உறவினர்க‌ள், நண்பர்களின் வீடுகளில் இருக்கிறது.



இயற்கையை படம்பிடித்து வரைவது சிறப்பல்ல என்பதுபோல் இங்குள்ள சில ஓவிய கலைஞர்கள் அழகான இயற்கை எழில் நிறைந்த இடங்களை தேர்ந்தெடுத்து அங்கேயே அமர்ந்து வரைந்துக்கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன். உயிரோட்டமுள்ள ஓவியமாக அவைகள் உருவாகிற‌தை காணும் போது அதிசயத்து நின்றிருக்கிறேன். இறைவன் நல்ல ரசனை உணர்வு நிரம்பிய நேரத்தில் படைக்கப்பட்ட பகுதி இந்த தென்பிரான்ஸ் என்று அடிக்கடி நினைத்துக்கொள்வேன், இங்குள்ள இயற்கை அழகினை ரசிக்கும்போது. அப்படி கடவுளால் தீட்டப்பட்ட ஓவியங்களை.... அத்தகையை இடங்களை ரசிப்பதோடு மட்டும் நிறுத்தி விடாமல் இங்குள்ள‌ சில ஓவிய‌கலைஞர்கள் உயிரோட்டமுள்ள‌ கலைப்படைப்புகளை உருவாக்குபவர்களாக இருக்கிறார்கள். தற்பொழுது சாத்தியமில்லை என்றபோதும், எனக்கும் ஆசைதான் என்றாவது ஒரு நாள் அவர்களை போல நானும் எழில் கொஞ்சும் இயற்கையினை என் கண்களினால் படம்பபிடித்தபடி வரைய வேண்டுமென்று. முயற்சிக்க‌வேண்டும்....!

30 comments:

Unknown said...

wow..great.
me the first...

Unknown said...

முப்பட்ட பரிமாணத்தில்
அழகான
காட்சியை கண்முன்னே
கொண்டு வந்து இருக்கீங்க
மிக மிக அழகா இருக்கிறது..

கடவுள் ஒரு சிலருக்குத்தான் இந்த கொடை கொடுத்து உள்ளார் உங்களையும் சேர்த்து
வாழ்க வளமுடன்

Unknown said...

முதல் படம் கட்டங்களையும்
இரண்டவது படம் கடலின் அழகையும்
மனிதனும்
இயற்கையும்
படைத்த அழகினை
உங்கள் தூரிகை
கொண்டு
மேலும்
அழகுற பொறுமையுடன்
தீட்டிய உங்களுக்கு
மிக்க நன்றி

Unknown said...

beautiful paintings

Asiya Omar said...

கண்ணிற்கு இதமான ஓவியம்.

Chitra said...

Priya, You are great and richly blessed! Praise the Lord! I love it!!!

ராமலக்ஷ்மி said...

எழில் கொஞ்சுகிறது உங்கள் கைவண்ணத்தில். உங்கள் ஆசை நிறைவேறும் வரை புகைப்படங்களாக எடுத்து வரைந்து வாருங்கள். அவையும் இறைவன் வரைந்த ஓவியத்தின் பிரதிபலிப்புதானே.

பொறுமையும் அர்ப்பணிப்பும் தெரிகின்றன படங்களில். வாழ்த்துக்கள்!!!

Anonymous said...

ரொம்ப அழகா இருக்கு ப்ரியா :)
வண்ணங்கள் விளையாடும் ஓவியம்..

சாருஸ்ரீராஜ் said...

beautiful paintings....

Raghu said...

ர‌ச‌னை ப்ரியா! இது போன்ற‌ ஓவிய‌ங்க‌ளை அடிக்க‌டி வ‌ரையுங்க‌ள். ம‌னித‌ர்க‌ளை விட‌ இதுபோன்ற‌ இய‌ற்கை அழ‌குக‌ளை ஓவிய‌ங்க‌ளாக‌ ர‌சிப்ப‌திலிருக்கும் சுக‌மே அலாதிதான்

இரு ஓவிய‌ங்க‌ளில் இதுதான் பெஸ்ட் என்றே கூற‌முடிய‌வில்லை. வெரி நைஸ், கீப் இட் அப்!

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரொம்ப அழகா இருக்கு

puduvaisiva said...

இயற்கையின் வண்ண கலவையை மிக அழகாக எங்கள் கண் முன் தந்ததற்கு நன்றி ப்ரியா.

க.மு.சுரேஷ் said...

மிகவும் அழகாக உள்ளது..
உங்களை போன்ற கலைஞர்கள் படைப்புகளை பார்த்து மன மகிழ்ச்சி அடைகிறேன்.
இயற்கையான அழகை ஓயவியமாக வடித்தா உங்களுக்கு எனது நன்றி.
வாழ்த்துக்கள்.

Unknown said...

நல்லா இருக்குங்க

அ.முத்து பிரகாஷ் said...

வண்ணங்கள் தரும் ஆறுதல் ...

தருபவை வண்ணங்களா இல்லை விரல் வழி வரும் எண்ணங்களா ...

r.v.saravanan said...

நல்லா இருக்கு ப்ரியா

Prabu M said...

கண்கொள்ளா அழகு!! :‍)

முறைப்படி ஓவியம் கற்றுக்கொள்ளாத நீங்கள் உங்கள் ஜீன்களில் புதைந்திருக்கும் ஓவியத்திறமையினால் விரல்களே தூரிகையாய் வ‌ண்ண‌ம் தொட்டுக் காகித‌ம் வ‌ருடி வான‌வில் ப‌டைக்கிறீர்க‌ள்....
ஓவிய‌த்தை ர‌சிக்கிறேன்.. உங்க‌ள் திற‌மையை சிலிர்க்கிறேன்...

அழ‌கோ அழ‌கு அக்கா உங்க‌ள் ப‌டைப்புக‌ள்...

G.AruljothiKarikalan said...

migavum arumai..........

ஹரிஸ் Harish said...

அழகு...

S Maharajan said...

Arumaiyana Oviyam

GEETHA ACHAL said...

ஆஹா..ப்ரியா..அருமையோ அருமை...அழகாக இருக்கின்றது...உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்...

'பரிவை' சே.குமார் said...

மிக மிக அழகா இருக்கிறது.

KABEER ANBAN said...

Very colorful and beautifully done!!

//இயற்கையை படம்பிடித்து வரைவது சிறப்பல்ல என்பதுபோல் இங்குள்ள சில ஓவிய கலைஞர்கள் அழகான இயற்கை எழில் நிறைந்த இடங்களை தேர்ந்தெடுத்து அங்கேயே அமர்ந்து வரைந்துக்கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன் //

Spot paintings,I think, improves the degree of observation and speed of execution, as the position of sun and shadow keep changing with time. It is a separate exercise for its own sake and need not mean referring to photographs is inferior :)

அஹ‌ம‌து இர்ஷாத் said...

ப்ரியா ரொம்ப‌ அருமையான‌ ஓவிய‌ம்..அதை பார்த்தாலே ம‌ன‌சு லேசாகுது..:)

Priya said...

Thank you Friends for your lovely comments & thanks so much for stopping by.

Ram said...

மிகவும் அருமையாக தீட்டப்பட்டுள்ளது...

எல் கே said...

உங்களுக்கு ஒரு விருது அளித்துள்ளேன் பெற்றுக் கொள்ளவும்

http://lksthoughts.blogspot.com/2010/11/blog-post_3321.html

Priya said...

மிக்க நன்றி LK! இதோ உடனே வந்து பெற்றுக்கொள்கிறேன்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

சூப்பர் ப்ரியா... நான் தப்பி தவறி என்னைக்காச்சும் ஒரு புக் எழுதினா நீங்க தான் படம் வரைஞ்சு தரணும்...இப்பவே புக் பண்ணி வெச்சுக்கறேன்... குடுத்த வாக்கை மீற மாட்டீங்க தானே...

I honestly envy your talent Priya...hats off

Priya said...

புவனாவுக்காக இதை கூட செய்யலைன்னா எப்படி... அப்புறம் எப்போ புக் எழுத ஆரம்பிக்க போறிங்க:)

Post a Comment