Subscribe:

Pages

Wednesday, October 13, 2010

நீங்காத அவளின் நினைவுகள்....

                 புதிய நாடு, புதிய மனிதர்கள், புதிய உணவு வகைகள், புதிய பழக்கவழக்கங்கள் என எல்லாமே புதியதாக, இனிமையான தருணங்களையும் சந்தோஷமான நிமிடங்களையும் பெற்று தந்தது கடந்த வார ஸ்பெயின் பயணம். 400 கிமீ தொலைவில் இருக்கும் நண்பர் வீட்டிற்கு சென்று பின் அவர்கள் குடும்பத்துடன் சேர்ந்து சென்றுவந்த பயணம் கொடுத்த உற்சாகத்தில் மீண்டும் எனது ப்ரியமான பதிவுலக நண்பர்களை சந்திக்க வந்துள்ளேன்.



பிரான்ஸின் எல்லையை தாண்டிய அடுத்தடுத்த நிமிடங்களில் என்னற்ற மாற்றங்களை தந்து பிரமிக்க வைத்தது ஸ்பெயின். பிரான்ஸை ஒப்பிடுகையில் பொருட்கள் எல்லாம் விலை மலிவாக கிடைக்கிறது. வயிற்றிர்க்கு உணவளிக்கும் உணவகங்களில் செவிக்கும் விருந்தாக இசைக்கச்சேரிகள் நடைப்பெறுகிறது. பிரான்ஸை போல் அல்லாமல் இந்த நாடு தனது சட்டத்திட்டங்களில் சிலவற்றை தளர்த்தி இருப்பதை பார்க்க முடிந்தது.

(அங்கு அதிகமாக விற்கப்படும் dried Sausage!)

ஆனால் இந்த பயணத்தையும் விடுமுறை நாட்களையும் அர்த்தமுள்ளதாக்கியள்..... கமி.


எனக்கும் குழந்தைகளுக்குமான உறவு எப்பொழுதும் ஆழமுள்ளதாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருப்பதாகவே தோன்றும். இம்முறையும் என்னை அப்படி நினைக்கவைத்தவள் நண்பரின் நான்கு வயது மகள். அழகான குட்டி தேவதை. பொம்மை போன்றதொரு தோற்றம். இரண்டு வருடங்களுக்கு முன்பு சந்தித்ததை நியாபகத்தில் வைத்துக்கொண்டு தன் பெற்றோர் மூலம் எங்களின் வரவை தெரிந்துக்கொண்டவள் எங்களை கண்டவுடன் முந்திய‌ நாளே வரைந்து வைத்திருந்த படத்தை எங்கள் இருவருக்கும் பரிசளித்தாள்.


பின் அவள் அறைக்கு அழைத்து சென்று தன் குட்டி உலகத்தை பார்வையிட செய்தாள். அறை முழுவதும் கொட்டி கிடந்த விளையாட்டு பொருட்களின் நடுவில் அமர்ந்துக்கொண்டிருந்தவள் என்னையும் அழைக்க மீண்டும் குழந்தையாய் மாறிவிட்ட உணர்வில் அவளோடு கழிந்த நிமிடங்கள் இனிமையானது. Snow White, Cindrella, Beauty and the Beast, etc. கதைகளில் வரும் கதாபாத்திரங்களின் உருவ பொம்மைகளை வைத்துக்கொண்டு விளையாடுவது இவளுக்கு பிடித்தது என்றால், அதைவிட அதிகம் பிடித்தது வரைவதுதான்!

என்னை பற்றி தன் அம்மாவின் மூலம் தெரிந்துக்கொண்டவள், தனது டிராயிங் நோட்டு புத்தகங்களை கொடுத்து பார்க்க சொன்னவள், பின் அவளுடன் சேர்ந்து என்னையும் வரைய வைத்தாள். நேரம் போவதே தெரியாமல் நிறைய வரைந்தோம். அவளுக்கு நான் கற்றுக்கொடுத்தேன் என்பதைவிட அவளிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன்.

என் நெற்றியில் வைத்திருந்த பொட்டை பார்த்து கேட்ட கேள்வியில் ஆரம்பித்து இடைவிடாமல் நிறைய கேள்விகள் என எப்பொழுதும் பேசிக்கொண்டே இருந்தாள். பள்ளியில் மற்ற மாணவிகளை பார்த்துவிட்டு தனக்கும் அதுப்போல French braid போட்டு விட சொல்லி தன் அம்மாவிடம் நீண்ட நாளாக கேட்டு இருக்கிறாள். அவளின் அம்மா 'எனக்கு தெரியாது உனக்கு தெரிந்தால் போட்டுவிடு' என்றார் என்னிடம். கடந்த‌ சனிக்கிழமை அன்று அவள் விரும்பியபடி நான் போட்டு விட்டதும்தான் அவள் முகத்தில் எத்தனை மகிழ்ச்சி!


காரில் செல்லும்போது என் பக்கத்தில் அமர்ந்துக்கொள் என என்னை அழைத்து அவள் பக்கத்தில் அமர்த்திக்கொள்வதாகட்டும், ரெஸ்டாரண்டில் அவள் பக்கதில் என்னை அமர்த்திகொண்டு, நான் ஆர்டர் செய்த உணவு வர தாமதமாக, அவளுக்கான உணவு சீக்கிரம் வந்துவிட‌ சாப்பிட்டு கொண்டிருந்தவள் , பசிக்குதா வேணும்னா என் தட்டில் இருந்து எடுத்து சாப்பிடு' என்பதாகட்டும், அங்கிருந்து கிளம்பும் நேரத்தில் கூட‌ கொஞ்ச நேரம் என் கூட  விளையாடிவிட்டு போ என்றவளின் ஆசையை நிறைவேற்றிய போதுமாகட்டும்... மீண்டும் குழந்தையாய் மாறிவிடமாட்டோமா என ஏங்க வைத்த இனிமையான தருணங்கள் அது!
மொத்தத்தில் இந்த பயன‌த்தை இனிமையாக்கியது குழந்தைக்கான இவளின் அடையாளங்கள்தான். இன்று என்னைவிட்டு பயனகளைப்பு நீங்கிவிட்டாலும் நீங்காமல் இருக்கிறது அவளின் நினைவுகள்.

41 comments:

Chitra said...

Priya, Camille looks so cute and sweet. I am happy to know that you had great time.
The photos look awesome!

Mahi said...

அழகான பயணம்..இனிமையான நினைவுகள்! குட்டிப்பெண் க்யூட்டா இருக்காங்க. அந்த கடைசி படத்துல......தெரிவது ப்ரியாவின் கண்ணா??;) :)

நிலாமகள் said...

ஹைய் ... பிரியா வந்தாச்சு...! ஸ்பெயின் அழகும், கமி அழகும், அவளின் பிரெஞ்சு ப்ரைட் அழகும் வெகு ஜோர் ! 'அவளிடமிருந்து நான் நிறையக் கற்றுக்கொண்டேன் '... உங்க நேர்மை எனக்குப் பிடிக்குது. குழந்தைகள் எப்போதும் வயதில் மட்டும் தான் நம்மைவிடக் குறைந்தவர்கள் என்பதை நாம் அவ்வப்போது உணர முடிகிறது அல்லவா...

Anonymous said...

வாங்க ப்ரியா,
சுகமான பயணம்.. குழைந்தைகளின் உலகம் எப்போதும் அழகும் மகிழ்ச்சியும்தான.. அதுவும் அவர்களுடன் அவர்களாகவே மாறிடும்போது சந்தோசத்திற்கு கேக்கவா வேண்டும் :)
கமி சோ க்யூட்..

Unknown said...

மீண்டும் வருக...!
குழந்தயின் உலகத்தில்
விளையாடி வந்து இருக்கும்
குழந்தாய் வருக...!

ரொம்ப அழகான உணர்வுகள்

பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி

Unknown said...

முதல் படமும்
குழந்தையின் படமும் அருமை...

ராமலக்ஷ்மி said...

கமி பற்றிய பகிர்வுக்கு நன்றி ப்ரியா. குழந்தை அழகாக இருக்கிறாள் களங்கமற்ற அன்பின் பிரவாகமாக.

ஜெயந்த் கிருஷ்ணா said...

முதல் படம் மிகவும் அருமையாக உள்ளது...

குழந்தைகளிடம் விளையாடும் பொது நாமும் குழந்தையாக மாறிவிடுகிறோம் என்பதில் ஐயமில்லை...

thiyaa said...

super குழந்தை அழகாக இருக்கிறாள்

sathishsangkavi.blogspot.com said...

குழந்தையும் படமும் அழகு...

Suresh said...

Cute kid.. going to be ur nice memories!!

Since i'm staying with my sister, I always spend my time with cute little nieces. Being with them feels like a new birth everyday.. I'm really lucky in that sense..

Mohan said...

உங்கள் அழகான எழுத்து நடை படிப்பவர்களையும் குழந்தைகளாக்குகிறது!

சுசி said...

கமில்லா குட்டி அவ்ளோ அழகா இருக்கா..
நல்ல பகிர்வு ப்ரியா..

'பரிவை' சே.குமார் said...

அழகான பயணம்..இனிமையான நினைவுகள்!

எஸ்.கே said...

குழந்தை, இடங்கள், அனுபவம் அனைத்தும் அழகு!

Priya said...

Thanks Chitra!
Really she's so sweet!

ஆமா மகி அது என்னோட கண்தான்:)

உண்மைதான் நிலாமகள், நீங்கள் சொல்வதை நானும் ஏற்றுக்கொள்கிறேன்.

ஆமாங்க பாலாஜி, குழந்தைகளின் மகிழ்ச்சியான உலகினை பார்க்கும் போது அட, நாமும் அப்படியே இருந்திருக்க கூடாதான்னு தோனுது:)

வாங்க சிவா, விதவிதமாக குழந்தைகளின் படங்களை போட்டு கலக்குறிங்க!

நன்றி ராமலக்ஷ்மி, களங்க‌மற்ற அன்பை தருவது இவர்கள்தானே!

நன்றி வெறும்பய!
அந்த படம் பிரான்ஸ் எல்லையை தாண்டியதும் ஓடும் காரில் இருந்தபடியே எடுத்தது.

நன்றி தியாவின் பேனா!

நன்றி சங்கவி!

Priya said...

Suresh
//Being with them feels like a new birth everyday..//.... 100% true. And you'r lucky too!

நன்றி மோகன்!

நன்றி சுசி!

நன்றி சே.குமார்!

நன்றி எஸ்.கே!

Menaga Sathia said...

இனிமையான நினைவுகள்..குழந்தைகள் எப்பவும் சோ ஸ்வீட்தான்..குட்டி பொண்ணு அழகா இருக்காங்க...மகி உங்களுக்கு எக்ஸ்ரே கண்ணுப்பா..உங்க கமெண்ட் படித்த பின் தான் ப்ரியாவின் கண்ணை பார்த்தேன்...

puduvaisiva said...

கமியின் ஓவியம் அழகாக உள்ளது ப்ரியா

பயண நினைவுகளை பகிர்ந்ததுக்கு நன்றி !

Raghu said...

குட்டிப்பொண்ணு அச்சு அச‌ல் பொம்மை போல‌வே! ஸோ க்யூட்! ப‌ய‌ண‌ங்க‌ள் எப்ப‌வும் ர‌ச‌னைதான்..அச‌த்துங்க‌ ப்ரியா :)

Unknown said...

பயணங்கள் அனைத்துமே நன்றாக அமைந்துள்ளது, எழுத்தும் படமும் அழகாக உள்ளன, தொடரும் பயணங்கள் யாவும் நலமாக அமைய வாழ்த்துக்கள்.

r.v.saravanan said...

பயண அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ப்ரியா குட்டி பொண்ணு அழகு

Priya said...

நன்றி மேனகா.
//மகி உங்களுக்கு எக்ஸ்ரே கண்ணுப்பா..//பார்த்திங்களா என்னமா கவனிக்கிறாங்கன்னு:)

குழந்தைகளின் கிறுக்கல்கள் கூட ஓவியம்தானே புதுவை சிவா:)

ஆமா ரகு பார்த்தவுடன் அள்ளிகொஞ்சம் வேண்டும் போல் இருக்கும் அழகான பொம்மைதான்.

உங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி பாலன்.

மிக்க நன்றி r.v.saravanan.

Unknown said...

அருமையாக இருந்தது

தினேஷ்குமார் said...

//எனக்கும் குழந்தைகளுக்குமான உறவு எப்பொழுதும் ஆழமுள்ளதாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருப்பதாகவே தோன்றும்//

மனதில் புதைபவை
உயிர் பெற்ற
ஓர் நினைவு
சரியா தோழி ..........

பகிர்வுக்கு நன்றி..

vinu said...

thalaippai padithu oru kaathal thodarbaana pathivai eathirpaarthu vanthiruntha ennakku ...........


cute
"நீங்காமல் இருக்கிறது அவளின் நினைவுகள்."

beautiful, what else to say?

அஹ‌மது இர்ஷாத் said...

Nice Picture & Post..Keep it Priya..

RAJA RAJA RAJAN said...

ரொம்ப நல்லா இருக்கு...

வாழ்த்துகள்

Priya said...

மிக்க நன்றி நா.மணிவண்ணன்!

சரிதான் dineshkumar!

//thalaippai padithu oru kaathal thodarbaana pathivai eathirpaarthu vanthiruntha//... ஓ அப்படியா vinu...எதிர்பார்ப்பை ஏமாற்றமாக்கிவிட்டேனா;)!

நன்றி அஹ‌மது இர்ஷாத்!

நன்றி ராஜ ராஜ ராஜன்!

vinu said...

Priya said .....

எதிர்பார்ப்பை ஏமாற்றமாக்கிவிட்டேனா;)!


: illaynga priyaa athuthaan, cute ennakum
"நீங்காமல் இருக்கிறது அவளின் நினைவுகள்."

beautiful, what else to say? appudeenu pottu irrukureanneaa

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Wow...lovely post Priya. I feel that too "becoming a kid when being with a kid" so often. They are real god sent, especially girls... what say? Thanks for enlightning the day by sharing about an angel...

G.AruljothiKarikalan said...

inimaiyaana payanangalai migavum virumbubaval... aanal ippodhu atharku saathiyam illamal poivitadhu. Athai priyaavin inimaiyaana padangaludan serndha payanangal niravai tharugiradhu... kami romba azhagu.

மே. இசக்கிமுத்து said...

நல்ல பயணக் கட்டுரை! புதிய விஷயங்கள் படிக்க ஆனந்தமாக இருந்தது!

Priya said...

ம்ம்.. பார்த்தேன் Vinu மீண்டும் வந்து எழுதியதற்கு நன்றி!

"becoming a kid when being with a kid"....ஆமா புவனா!

நன்றி g.aruljothiKarikalan!

நன்றி இசக்கிமுத்து!

மாதேவி said...

கமி கொள்ளைஅழகு.

இனிய பயணம்.

vasan said...

//பயனகளைப்பு நீங்கிவிட்டாலும் நீங்காமல் இருக்கிறது அவளின் நினைவுகள்.//
ப‌ய‌ணக் க‌ளைப்பு போனாலும், ப‌ய‌ண‌க் களிப்பு தொட்டு தொட‌ர்கிற‌து பதிவில்.

Priya said...

நன்றி மாதேவி!

நன்றி vasan!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

Hiiii Priyaa

Happy Deepavali....!

Yes you are right... Cami does looks like a Doll :-)))
Beautiful pictures.... thanks for sharing pa.

ஸாதிகா said...

குழந்தையின் படமும்,உங்கள் பகிர்வும் அருமை.

எல் கே said...

அருமையான பகிர்வு. படங்கள் வழக்கம் போல் அருமை. குழந்தைகளுடன் இருந்தால் நமக்கு நேரம் போதாது

மே. இசக்கிமுத்து said...

படங்களுடன் பதிவு அருமை!!

Post a Comment