மே மாதம் தொடங்கிய நிலையிலும் சரியான சூரிய வெப்பம் இல்லாமல் அந்த இடமே குளிர்ச்சியாக இருந்தது. சுற்றிலும் பசுமை என்று நம் தென் இந்தியாவின் கேரளாவை நியாபகப்படுத்தியது, தென் பிரான்ஸின் இந்த ஒக்ளிஸ்(Vaucluse).
அரசு விடுமுறை நாள்(1st May) என்பதால் சிறுவர்கள் பெரியவர்கள் என்று ஓரே கூட்டம்தான். வயதான சில பெரியவர்கள் கூட பயமோ தயக்கமோ இன்றி மலைப் பாறைகளை தட்டு தடுமாறி ஏறினார்கள். அவர்களை தொடர்ந்து நாங்களும் பாறைகளை கடந்த போது அங்கு எந்த ஒரு சலனமும் இன்றி அமைதியாக இருந்தது நீரோடையின் ஊற்று.
நீரோடையுடனே... Crystal Gallery, Painting Gallery மற்றும் மிடில் ஏஜ் பீரியட்டில் தாள்கள் செய்ய உருவாக்கப் பட்ட தொழிற்சாலை என்று இந்த இடம் மேலும் சில சிறப்பு அம்சங்களை கொண்டிருந்தது.
அங்கு இருந்து ஒவ்வொரு மணி துளியும் ஜில்லுன்னு சுகமான ஒர் உணர்வு. கட்டுக்கடங்காமல் ஓடிக்கொண்டு இருந்த தண்ணீரை போலவே மனதும் கட்டுபாடுகள் அற்ற குழந்தையாய் துள்ளி திரிந்தது.
இதற்குமேல் அதன் அழகினை நான் சொல்வதை விட, வாருங்கள் என்னுடன்….... அதன் பசுமையையும் குளிர்ச்சியையும் ஒன்றாக சேர்ந்து ரசித்திடலாம்.
கார் பார்க்கிங் பக்கத்திலே அமைதியாக சென்ற நீரோடை...
ஹைட்ரோ பவர் டெவலெப்மென்டுக்காக பயன்படுத்தப்பட்டு இருக்கும் வாட்டர் வீல்
ஓடையின் மேல் அமைந்துள்ள உணவு விடுதிகளுக்கு செல்ல அமைக்கப்பட்டிருந்த சிறிய பாலம்!
பாலத்தை கடந்ததும் அழகான பச்சை நிறத்தில் ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீர்.........
தண்ணீரில் சாகசம் புரிந்துக்கொண்டு இருப்பவர்கள்........
என்ன ஒரு நிறம்.... ?!
கரையை ஒட்டி இருந்த பேப்பர் தொழிற்சாலை.
பேப்பர் செய்ய பயன்படுத்தப்பட்ட அக்காலத்து மர கருவிகள். அம்முறைப்படியே இங்கு இன்னும் தாள்கள் செய்கின்றார்கள். இதன் பக்கத்திலேயே பல விதமான பேப்பர்களை கொண்டு மிக பெரிய ஹாலில் எக்ஸிபிஷன் நடந்தது. ஃபோட்டோ எடுக்க தடைச் செய்யபட்ட இடம் என்பதால் அதை படம் எடுக்க முடியவில்லை.
அங்கிருந்து வெளியே வரும் நம்மை மீண்டும் வரவேற்று கொள்கிறது பசுமை!
அப்படியே தன்ணீரில் விழுந்து கும்மாளம் போட மனசு துடிக்கிறது இல்லையா... ஆனால் தண்ணீரில் காலைக்கூட வைக்க முடியாத அளவில் குளிர்!
இதன் அழகில் மயங்கிவிட... இதற்குமேல் வார்த்தைகள் வரவில்லை!
ஓடையின் அழகை ரசித்துக்கொண்டே பாறைகளையும் கடந்து இப்போது நாம் வந்து சேர்ந்து இருக்கும் இடம்... ஓங்கி உயர்ந்து நின்ற மலையடிவாரத்தில் இருக்கும் ஊற்று. பார்ப்பதற்கு கண்ணாடி போல் இருக்கின்றது இல்லையா!
நடந்து நடந்து சற்று களைத்துவிட, பசியும் எடுத்துவிட்டது அல்லவா.... சாப்பிட இடம் தேட... இதோ கிடைத்து விட்டது ஓடையின் பக்கத்திலேயே!
ஜில்லுன்னு இருந்தாலும் அதுவே சுகமாக இருக்க ஓடையின் ஓரமாக அமர்ந்து சாப்பிட நமக்கு துணையாக வந்து சேர்ந்துக்கொண்டது இந்த வாத்துக்கள்.
கடைசியாக பூக்களுடன் விடைபெற்று கொள்வோம்.
ஜில்லுன்னு ஒரு பயணம்.... எப்படி இருந்தது? தண்ணீரிலே இருந்திட மனசு ஏங்குகிறதா? எனக்கும் கூட அன்று அந்த இடத்தை விட்டுவர மனமே இல்லாமல்தான் கிளம்பினேன்.
அங்கிருந்து மீண்டும் பக்கத்தில் இருக்கும் St. Remy என்னும் இன்னொரு ஊருக்கு பயனமானோம். அந்த ஊருக்கு என்று ஒரு சிறப்பு அம்சம் இருக்கிறது. அது என்ன என்பதும், அங்கு எடுத்த படங்களுடனும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
அங்கிருந்து மீண்டும் பக்கத்தில் இருக்கும் St. Remy என்னும் இன்னொரு ஊருக்கு பயனமானோம். அந்த ஊருக்கு என்று ஒரு சிறப்பு அம்சம் இருக்கிறது. அது என்ன என்பதும், அங்கு எடுத்த படங்களுடனும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
33 comments:
மிகவும் அழகாக இருக்கு. அங்கேயே போய் விடமாட்டோமா என்று மனசு ஏங்குகிறது.
அழகாக இருக்கு காட்சியும் பகிர்வும்
நீங்கள் சொல்வது போல் இந்த இயற்கையின் அழகை
வர்ணிக்க வார்த்தைகள் இல்லை
நான்காவது படம் அருமை
உங்கள் தளத்துக்கு வரும்போதெல்லாம் பொறாமையை கிளப்பி விட்டு விடுகிறீர்கள். இங்கே மதுரையில் அடிக்கிற வெய்யிலில் துண்டை காணோம் துணிய காணோம்னு ஓடிக்கொண்டிருக்கிறோம்.
நன்றாக இருந்தது :))
I saw your profile and come to know that your industry is education.
Are you a teacher?
ஆஹா...நிஜமாவே கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு படங்கள் ஒவ்வொன்றும் எத்தனை அழகு அந்த அழகாய் அப்படியே அள்ளி கொண்டுவந்த உங்கள் கலைக் கண்களுக்கும் கைகளுக்கும் பாராட்டுகள்..
மனசின் வெப்பத்தையும்
தணிக்கும் இயற்கை.
பார்க்க பார்க்க ஆவலை தூண்டுதே!!!!!
பார்க்கப் பார்க்க ஒவ்வொரு படமும் ஆச்சரியமாக இருக்கிறது.அவ்வளவு கொள்ளை அழகான இயற்கைக் காட்சிகள் பிரியா. பகிர்வுக்கு நன்றி.....
அழகாய் இருக்கிறது ஓடையும்,நதியும்,இயற்கையும்!
பிராணக் காட்டுரையை வர்ணிக்கும் அழகையும் புகைப்படக் கலையையும் ...உங்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம் ப்ரியா.
அவ்வளவு குளிமையாய் இருக்கு.
பனிதேசத்து கோடை அழகு.
நன்றி vanathy!
நன்றி நேசமித்ரன்!
நான்காவது படம் பிடிச்சிருக்கா... நன்றி சரவணன்!
வெயில கஷ்டப்படுற நண்பர்களுக்குதாங்க குளிர்ச்சியா இந்த படங்கள்.சோ,கூல் Bala:)
கலை கண்களும் கைகளும் சந்தோஷமுடன் நன்றி சொல்லிக்கொள்கிறது கனி!
ஆமா Madumitha நன்றி!
நன்றி ஜெய்லானி!
நன்றி ஜெயா. முழு அழகும் படத்தில் இல்லை. நேராக இன்னும் ஆச்சிரியம் அளித்த கொள்ளை அழகு!
நன்றி மகி!
உங்க பாராட்டுகளுக்கு மிக்க நன்றி ஹேமா!
அருமையான பதிவு
புகைப்படப் பயணம் போய் வந்தேன்.
நான் நூறாவது follower
treat எதுவும் கிடையாதா?
புகைப்படங்கள் மனதைக் கொள்ளை கொள்கின்றன. பகிர்வுக்கு நன்றி ப்ரியா.
வாவ்! எல்லா ஃபோட்டோஸும் சூப்பர்!
//ஆனால் தண்ணீரில் காலைக்கூட வைக்க முடியாத அளவில் குளிர்!//
குளிர்?! அப்படின்னா என்னதுங்க?.....ஃப்ரம் மே மாத சென்னை :(
100க்கு வாழ்த்துகள் :)
ஒவ்வொரு பதிவிலேயும் அழகான படங்கள் போட்டு வரிகளையும் சிறப்பா எழுதிறீங்க.. அருமை..
ஆனா இது மட்டும் உண்மை..
எங்களுக்கு காதுல இல்ல உடம்பு பூரா பொறாமை + புகை சேர்ந்தே வருதுங்க...
புகைப்படங்கள் அருமை.பகிர்வுக்கு நன்றி .
இப்ப இங்க அடிக்கற வெய்யிலுக்கு என்ன ஒரு இதமான காட்சிகள்..
ம்ம்ம் வெயில் காயுது!படங்கள் குளிர்ச்சியூட்டியது!
நல்ல பகிர்வு ப்ரியா.. ஃபோட்டோ எல்லாம் சூப்பர்.. :-)
வாங்க வாங்க கலாநேசன் உங்களைதான் எதிர் பார்த்துக்கிட்டு இருந்தேன்..... நூறாவதாக தொடர போவது யார் என்று! மிக்க நன்றி!
Treat இல்லாமலா? கண்டிப்பா. நீங்க இங்க கிளம்பி வரிங்களா இல்ல நான் இந்தியா வரும்வரை காத்திருக்கிங்களா:)
நன்றி சிவா!
நன்றி செ.சரவணக்குமார்!
ரகு இங்கு ஒரு டிரிப் அடிங்க. குளிர்ன்னா என்னனு தெரிஞ்சிக்கிட்டு போகலாம்!
வாழ்த்துக்களுக்கு நன்றி!
நன்றி அஹமது இர்ஷாத்!
நன்றி மலர்விழி!
நன்றி ரிஷபன்!
நன்றி அன்புடன் அருணா!
நன்றி ஜெய்!
option 2 is ok mam
அழகான பயணம் மற்றும் பகிர்வு தோழி...நன்றி...
சென்னையில அடிக்கிற வெயிலுக்கு இப்படி படத்தைப் போட்டு வெறியேத்துறீங்களே?
மனதைத் தொடும் புகைப்படங்கள்..
ம்ம்ம்.. இவ்வளவு பேர் பின்தொடர்வதின் ரகசியம் இப்போது புரிகிறது பிரியா!!
வாவ்... சூப்பர் pictures ப்ரியா... நேர்ல பாத்த effect குடுத்தது... அந்த ஓடை படம் ரெம்ப நல்லா இருக்குங்க
ஓகே கலாநேசன் ஆனா......
அதுக்கு பல வருடங்கள் ஆனாலும் பரவாயில்லையா?
நன்றி கமலேஷ்!
நன்றி ஜெயந்தி!
என்னங்க பண்ணுறது இங்கு இன்னும் வெயில் தொடங்கல......அதான்:)
ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்து இருக்கிங்க... நன்றி தமிழ்!
இன்று 101 Followers இருந்தாலும் இந்த நூறு பேருக்கு தொடக்கமா இருந்தது நீங்கதானே.... என் முதல் Follower ஆன உங்களுக்கு இந்த நேரத்தில நன்றி சொல்லிக்கறேன் தமிழ்.
மிக்க நன்றி அப்பாவி தங்கமணி!
Very nice photographs friend :)
nice place too..
thanks for sharing Priya!
Thanks Joe!
நல்ல பகிர்வு.
நன்றி சே.வேங்கடசுப்ரமணியன்.
நல்ல பதிவு....இதெல்லாம்..நேர்ல நாம எப்ப பாப்போம்னு ஏங்க வைக்குதுங்க....நன்றி...
உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரமேஷ்!
Post a Comment