Subscribe:

Pages

Sunday, May 9, 2010

சிற்பியாய் இருந்து என்னை செதுக்கியவள்…….. அம்மா!

       துவரை என்னை யாரும் திட்டியது இல்லை. மனது வலிக்கும் படி பேசியது இல்லை. ஆனால் அன்றுதான் முதல் முறை மனசு வலிக்க அழுதேன். எப்போது வீட்டுக்கு செல்வோம்… அம்மாவின் மடியில் விழுந்து அழுவோம் என்று இருந்தது. பள்ளி விடும்வரை சோகத்தோடு காத்திருந்தேன். ஆம், நான் பள்ளியில் பணி புரிந்த சமயம் அது.

மேற்படிப்பை(M.A.) கரஸில் படித்துக்கொண்டே B.A.,B.Ed.முடித்து அனுபவத்திற்காகவே ஆசிரியர் வேலைக்கு செல்ல ஆரம்பித்தேன்.
ஒரு தனியார் பள்ளியில் இருந்து கல்லூரியின் மூலமாகவே வாய்ப்பு வர வேலைக்கும் சேர்ந்து விட்டேன். ஐந்தாவது வகுப்பு முதல் பத்தாவது வகுப்பு வரை ஆங்கில ஆசிரியையாக பணிபுரிந்தேன். நிறைய புது அனுபவங்கள் என்று அழகாக ஆரம்பித்தது. எனக்கும் மாணவர்களுக்கு அதிக வயது வித்தியாசம் இல்லை என்பதால் ரொம்பவே ஃபிரெண்டிலியா பழகுவேன்(அப்போது என் வயது இருபது). வேலையில் சேர்ந்த ஒரு சில நட்களிலே மாணவர்களுக்கு பிடித்த ‘மிஸ்’ ஆகிப்போனேன்.


முதல் Mid-term test க்கு முன்னால் நடந்த சம்பவம் அது.
மாணவர்களின் அனைத்து பாட நோட்டு புத்தகங்களும் ஆசிரியர்களின் கரெக்ஷ்ன்ஸுக்கு பின்னால் பிரின்ஸ்பாலின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரும் ஒவ்வொரு பாடத்தில் இருந்து ஏதாவது ஒரு சில நோட்டு புத்தகங்களை எடுத்து செக் பண்ணுவார். அப்படி அவர் செக் பன்ணிய ஒரு நோட்புக்கில் ஒரு சிறு தவறு அவர் கண்ணில் பட்டு விட்டது. அவர் கன்ணில் பட்டது நான் கரெக்ஷ்ன் செய்த ஒன்று.

வகுப்பில் இருந்த எனக்கு அழைப்பு வர ஆபிஸ் ரூமுக்கு சென்றேன். டீச்சிங் கூடவே ஸ்கூல் அசிஸ்டண்டாகவும் இருந்ததினால் நிறைய ஆபிஸ் வொர்க்கும் இருக்கும். அதனால், சார் அதற்காகத்தான் கூப்பிடுகிறார் என்று நினைத்து சென்ற எனக்கு ஏமாற்றம். உள்ளே நுழைந்தவுடன் நான் திருத்திய நோட்டை காட்டி "மாணவர்கள் தவறு செய்தால் திருத்ததான் நாம் இருக்கிறோம். நாமே தவறு செய்தால் எப்படி ?" என்று கேட்டார். ஒன்று புரியாமல் நான் முழிக்க குறிப்ப‌ட்ட பக்கத்தை காட்டினார்.

பார்த்தவுடன் என் தவறு புரிந்துவிட்டது. ஐந்தாம் வ‌குப்பு நோட்டு அது. மாணவன் ஒருவன் ஸ்பெல்லிங் மிஸ்டேக் செய்து இருக்கிறான். இதை கவனிக்காமல் நான் 'டிக்' பண்ணி இருக்கிறேன். என் தவறை உணர்ந்து அவரிடம் மன்னிப்பும் கேட்க, அவரோ அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் "இதை பார்த்து படிக்கும் மாணவன் தவறாகத்தானே அந்த வார்த்தையை கற்றுக்கொள்வான்" என்று சொல்லி "நாம் ஒன்றும் அரசாங்க பள்ளியில் வேலை செய்யவில்லை. சும்மா வந்து உட்கார்ந்துவிட்டு சம்பளம் வாங்கிச் செல்ல. இது தனியார் பள்ளி. பணம் செலவழித்து படிக்க வைக்கும் பெற்றோர்க்கு நாந்தான் பதில் சொல்லி ஆகவேண்டும்" என்று கொஞ்சம் சத்தமாகவே பேசி விட்டார். அதிலும் அங்கிருந்த இன்னொரு டீச்சர் முன்பாக. நிறைய அட்வைஸுக்கு பின் ஒருவழியாக " ஓகே நீங்க போகலாம்" என்றார். ஆபிஸ் ரூம் விட்டு வெளியே வந்ததும் அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை கட்டுக்கடங்காமல் வர வகுப்புக்கு செல்ல முடியாமல் ஸ்டாஃப் ரூமுக்கு போய் அழுதுக்கொண்டிந்தேன்.

உடன் இருந்து டீச்சர்ஸ் " இதெல்லாம் பெரிசா எடுத்துக்காதிங்க‌ அவர் எப்பவும் அப்படிதான்" என்றார்கள். என் தவறை சுட்டிக்காட்டியது எனக்கு வருத்தமில்லை. எதையுமே சற்று சாப்ட்டாக எடுத்து சொன்னால் ஏற்றுக்கொள்வேன். ஆனால் அதைவிட்டு, கோபமா பேசினால் என்னால் தாங்கி கொள்ள முடிவதில்லை. அதை விட சத்தமாக பேசி வேலையை சரியாக செய்யாமல் சும்மா வந்து சமபளம் வாங்குகிற மாதிரி பேசிவிட்டாரே என்று மனது வலிக்க அன்று முழுவதும் சோகமான நாளாகவே போனது.

வீட்டிற்கு சென்றவுடன் முதலில் இதை அம்மாவிடம் சொன்னால் தான் மனது அமைதி அடையும் என்று வீட்டிற்கு வரும் வழியெல்லாம் அம்மாவையே நினைத்துக்கொண்டு வந்தேன்.

வீட்டின் உள்ளே நுழைந்ததும் செருப்பு ஒரு பக்கமாக‌ என் கைப்பை ஒரு பக்கமாக தூக்கி எறிந்து விட்டு உட்கார்ந்திருந்த அம்மாவின் மடியில் விழுந்து குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தேன். பயந்துப்போன என் அம்மா நடுக்கத்துடன் என்னாச்சி என்று கேட்டதுதான் தாமதம். இன்னும் அழுகை அதிகமாக நடந்தவையை சொல்லி முடித்தேன். "அவர் என்னை திட்டி விட்டார். என்னை இன்னொரு மிஸ் முன்னால இன்சல்ட் பண்னிட்டார். நான் நாளையில் இருந்து வேலைக்கு போக மாட்டேன்" என்று சொன்னேன்.

இதற்குதானா இந்த அழுகை என்பது போல் பயந்திருந்த முகம் மாறிப்போய் அமைதியாக சிரித்துக்கொண்டே என் அம்மா சொன்னார்கள்.

"நீ தப்பு செஞ்சதாலதானே அவரு உன்னை திட்டினார். அடுத்த தடவை கவனமா செய்யு. அதுவும் அவரு உனக்கு சம்பளம் கொடுப்பவர். அதிகாரம் அவர் கையில் இருக்கும்போது அப்ப‌டிதான் பேசுவார். இதுக்கு போயி வேலைக்கு எல்லாம் போக மாட்டேன்னு சொல்றீயே"

"இல்ல, என்னை யாரும் இதுவரை இப்படி பேசியது இல்லையே" என்று விடாமல் நான் புலம்பினேன்.

"சரி, இந்த வேலையை விட்டுட்டு வேற இடத்தில வேலைக்கு போய் அங்கேயும் இப்படி ஏதாவது நடந்தா என்ன செய்வ? " என்றார்கள்.

ஆறுதலுக்காக அம்மாவை தேடிய மனது அவர்களின் இந்த வார்த்தைகளால் ஏமாற்றம் அடைந்தது. எனக்காக பேசாமல் சாருக்கு சப்போர்ட் பண்ணி பேசுகின்றார்களே என்று நினைத்த போது அம்மா எனக்கு எதிரி போல் தோன்றினார்கள். வேகமாக எழுந்த நான் மீண்டும் என் கண்ணீரை கரைக்க இம்முறை தேடியது தலையணையை. இரவு தூங்கும் போது சார் பேசியது, அம்மா பேசியது என்று எல்லாம் சேர்ந்து மனதை குழப்ப, குழப்பத்தோட தூங்கிப்போனேன்.

காலையில் எழுந்து எப்பொழுதும் போல் பள்ளிக்கு கிளம்ப அம்மா, "நேத்து வேலைக்கு போக மாட்டேன்ன?" என்று கேட்டார்கள். "இல்ல டெஸ்ட் வருது, போர்ஷன்ஸ் முடிக்கனும்" என்று சொல்லிய நான் மிக தெளிவான மனதோடு வேலைக்கு சென்று என் பணிகளை தொடர்ந்தேன். என் திருமணம் முன்புவரை இரண்டுவருடம் அதே பள்ளியில் வேலை செய்தேன்.

என்னால் மறக்க முடியாத நாள் அது. அன்று நடந்ததென்னவோ சாதாரனமான ஒன்றுதான். ஆனால் அன்று கற்றுக்கொண்டது நிறைய. நான் எதிர் பார்த்ததை போல் என் அம்மா நான் அழுவதைப் பார்த்து, எனக்கு சப்போர்டிவ்வாக உனக்கு பிடிக்கலைன்னா வேலைக்கு போகாத என்றும் மட்டும் சொல்லி இருந்தால் நான் நல்ல சில பண்புகளை இழந்து இருப்பேன். அடுத்து வேறு எங்கு வேலைக்கு சென்று இருந்தாலும் என் தப்பை சுட்டி காட்டி பேசினால், வேலையை விட்டு விட தோன்றி இருக்கும். பின்பு இதுவே என் தொடர்கதையாகி இருக்கும். அம்மாவின் அன்றைய பேச்சும் நடவடிக்கையும் அப்போது எனக்கு கோபத்தை வரவழைத்தாலும் அந்த இரவுக்கு பின் கிடைத்த தெளிவால் அம்மா சொன்னதுதான் சரி என்று தோன்றியது. எதிரிப்போல் தோன்றிய அம்மா மறு நாள் மிக நெருங்கிய தோழியாய் தோன்றினார்கள்.

வெறும் பாசம் அக்கறை மட்டும் காட்டும் அம்மாவாக இருந்தால் மட்டும் போதாது நமக்கு நல்லதொரு வழிக்காட்டியாகவும் இருந்திட வேண்டும் என்று, அன்று அந்த சம்பவத்தின் மூலமாக உணர்ந்துக்கொண்டேன்.

இன்று பல சந்தர்பங்களில், அன்று அம்மாவின் சரியான அனுகுமுறை எனக்கு பல நல்ல தெளிவான சிந்தனைகளை பெற்று தருகின்றது. அன்பு செலுத்துவதில் அன்னையாய்... நல்ல விஷயங்களை கற்றுக்கொடுப்பதில் ஆசானாய்... செய்யும் தவறுகளை சுட்டி காட்டி நல்வழிப் படுத்துவதில் என் வெல்விஷராய்... சகலத்தையும் பகிர்ந்துக்கொள்ள தோழியாய்... மொத்தத்தில் எல்லாமுமாக…

இப்படி சிற‌ந்த சிற்பியாக இருந்து என்னை செதுக்கிய என் அம்மாவிற்கு இப்பதிவு சமர்ப்பண‌ம்.


ஐ லவ் யு மா

 


 என் அம்மாவிற்கும், உலகெங்கும் உள்ள அனைத்து அன்னையர்களுக்கும், தாய்மை உணர்வுடன் இருக்கும் அனைவருக்கும் என் அன்பார்ந்த அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.




(உலகின் பல நாடுகளில் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டாலும். பிரான்ஸில் மே முப்பதாம் தேதிதான் அன்னையர் தினம்)

37 comments:

Unknown said...

மிகச் சிறப்பான பதிவு ப்ரியா, எந்தச் சம்பவத்தினையும் ஒரு படிப்பனையாகவும், அது நடப்பது ஏதோ ஒரு வகையில் எமக்கு ஒரு நன்மைக்கு எனும் எண்ணத்தை வளர்த்துக் கொண்டால் வாழ்க்கையில் பல தடைகளையும் இலகுவாகக் கடந்து விடலாம்.
உங்கள் எழுத்தின் நடை அருமை தொடர்ந்து எழுதுங்கள்.
அனைத்து அன்னையர்களிற்கும் எனது அன்னையர் தின வாழ்த்தினையும் தெரிவிக்கின்றேன், நன்றி

Anonymous said...

rumba rumba rumba nalla erunthathu priyama..

hmm make all the -ve into +ve appdinu cholrenga..

thank you.

convey my regards to amma.

valga valamudan.
complan surya

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//அன்பு செலுத்துவதில் அன்னையாய்... நல்ல விஷயங்களை கற்றுக்கொடுப்பதில் ஆசானாய்... செய்யும் தவறுகளை சுட்டி காட்டி நல்வழிப் படுத்துவதில் என் வெல்விஷராய்... சகலத்தையும் பகிர்ந்துக்கொள்ள தோழியாய்... மொத்தத்தில் எல்லாமுமாக…//

ரொம்ப நல்லா இருக்கு.. பிரியா..
உங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ரெம்ப அழகா சொன்னிங்க ப்ரியா... நம்மோட முதல் பள்ளி வீடு தான், முதல் ஆசிரியை அம்மா தான்.... வாழ்த்துக்கள்

ஜெனோவா said...

மற்றுமொரு சிறந்த அனுபவத்தின் வெளிப்பாடு பிரியா , மிக நன்றாக எழுதி இருக்கிறீர்கள் . அனுபவங்கள் வாழ்கையில் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன , எனக்கும் இந்த மாதிரி நிறைய உண்டு ( அழுத கதையும் உண்டு , ஆனால் கொஞ்சம் ;-) )...
இந்த பதிவின் மூலம் நானும் என்னோட அம்மாவையும் எல்லா தாய்மார்களையும் வாழ்த்திக் கொள்கிறேன் ... மிக்க நன்றி மேடம் ;-))

(அப்பாடா எப்படியோ பின்நூட்டியாச்சுப்பா இன்னிக்கி ;-) )

r.v.saravanan said...

சரியாக சொன்னீர்கள் தோழி

நான் கல்லுரி படிப்பு முடிக்கும் வரை அம்மாவின் அருகில் இல்லாமல்

உறவினர் வீட்டில் வளர்ந்தேன் தாய் பாசம் இல்லாமலே வளர்ந்தேன்

தாய் பாசம் என்பது நீங்கள் சொல்வது போல்


இன்று பல சந்தர்பங்களில், அன்று அம்மாவின் சரியான அனுகுமுறை எனக்கு பல நல்ல தெளிவான சிந்தனைகளை பெற்று தருகின்றது. அன்பு செலுத்துவதில் அன்னையாய்... நல்ல விஷயங்களை கற்றுக்கொடுப்பதில் ஆசானாய்...

செ.சரவணக்குமார் said...

சிறப்பான பகிர்வு ப்ரியா, அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.

Chitra said...

Convey our Mother's Day wishes too, to your wonderful mother. :-)

ஜெய்லானி said...

உலகில் உள்ள அனைத்து அன்னையருக்கும் அன்னையர் தின நல் வாழ்த்துக்கள்

பதிவு சூப்பர் மிஸ்.

பத்மா said...

நல்ல பதிவு பிரியா .வாழ்த்துக்கள் உங்களுக்கும் அம்மாவிற்கும்

ஹேமா said...

மிக மிக அருமையான நினைவின் நிகழ்வு ப்ரியா.அம்மா என்பவள் வாழ்வின் வழ்காட்டி.அதையே உங்கள் அம்மாவும் செய்திருக்கிறார்.

அம்மாவோடு பேசிவீட்டீர்களா இன்று.
நான் இனித்தான்.
உங்களுக்கும் அன்னையர்தின வாழ்த்துக்கள் தோழி.

தோழி said...

சிறப்பான பதிவு ப்ரியா...
அன்னையர் தின வாழ்த்துக்கள்...

ஜெயா said...

தாய்ப் பாசத்துக்கு நிகர் எதுவுமே இல்லை.. நல்ல பதிவு ப்ரியா.

Menaga Sathia said...

மிகச் சிறப்பான பதிவு!! அன்னையர் தின வாழ்த்துக்கள்...

பாச மலர் / Paasa Malar said...

அன்னையர் தின வாழ்த்துகள்

ஜெய் said...

ரொம்ப நல்ல பதிவு..

Jaleela Kamal said...

மிக அருமையா நடந்ததை பகிர்ந்து கொண்டீர்கள்.

எப்போதும் அம்மா க்கள் அம்மாக்கள் அவர்களுக்கு நிகர் யாருமே இல்லை,

Raghu said...

எழுத்து ந‌டை மிக‌ அருமை ப்ரியா....நிறைய‌ மாற்ற‌ங்க‌ள்!

தாய்ப்பாச‌த்திற்கு நிக‌ர் வேறேது?

நீங்க‌ள் சொல்லிய‌ 'சார்' போல‌ நானும் நிறைய‌ பேரை பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் இதுபோன்ற‌ லீடிங் பொஸிஷ‌னில் இருப்ப‌வ‌ர்க‌ள் சிடுமூஞ்சிக‌ளாக‌த்தான் இருக்கிறார்க‌ள் (அல்ல‌து) இருக்க‌ விரும்புகிறார்க‌ள். ஃப்ரெண்ட்லியாக‌ ப‌ழ‌கினால் அவ‌ர்க‌ளுடைய‌ 'கெத்' போய்விடும் என்ற‌ நினைப்பு! விட்டுத்த‌ள்ளுங்க‌........

Anonymous said...

Lovely post.

Priya said...

நீங்க சொல்வது முற்றிலும் உண்மைதான்... நன்றி பாலன்!

ஆமாங்க சூரியா எதையும் சமமாக பார்த்தாலே வெற்றிதானே!

நன்றி...உங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் Ananthi !

நன்றி அப்பாவி தங்கமணி!

வந்துட்டீங்களா ஜோ... அப்பாடா இன்னைக்காவது பின்னூட்டம் போடீங்களே, நன்றி!என்ன செய்வது, எல்லா நேரங்களும் சந்தோஷமாக அமைவது இல்லை.

அப்ப‌டியா ச‌ர‌வ‌ண‌ன்.... ப‌டிப்ப‌த‌ற்காக‌ அம்மாவை விட்டு பிரிந்து இருப்ப‌து க‌ஷ்ட‌ம்தான்.ஆனாலும் சில‌ நேர‌ங்க‌ளில் அப்படி அமைந்துவிடுகிற‌து.

நன்றி செ.சரவணக்குமார்!

சொல்லியாச்சு சித்ரா! நன்றி!

நன்றி ஜெய்லானி!

நன்றி பத்மா, உங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்!

அம்மாகிட்ட பேசிட்டேன் ஹேமா!

நன்றி தோழி!

உண்மைதான் ஜெயா, நன்றி!

ந‌ன்றி மேன‌கா,உங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்!

ந‌ன்றி பாச மலர்!

ந‌ன்றி ஜெய்!

ந‌ன்றி Jaleela!

உங்க‌ளை போல‌ ந‌ல்ல‌ ந‌ண்ப‌ர்க‌ள‌ தரும் ஊக்க‌த்தினால் வ‌ரும் மாற்ற‌ங்க‌ளோ?! ஆமா ர‌கு, நீங்க‌ சொல்வ‌தை போல‌தான் இருக்கிறார்க‌ள்.

ந‌ன்றி Ammu Madhu !

ரிஷபன் said...

உண்மைதான்.. சூழ்நிலைகளை மீறி ஜொலிக்க அவ்வப்போது நமக்கும் சில சங்கடங்கள் நேர்கின்றன.. கிடைக்கும் பாடம் மனசில் பதிந்தால்.. நலம்தானே விளைகிறது.. நல்ல பதிவு.

மங்குனி அமைச்சர் said...

//அன்று அம்மாவின் சரியான அனுகுமுறை எனக்கு பல நல்ல தெளிவான சிந்தனைகளை பெற்று தருகின்றது.///

கிரேட் மேடம்

சுசி said...

உங்க அம்மாவுக்கும் சேர்த்து எல்லா அம்மாக்களுக்கும் வாழ்த்துக்கள்.

Anitha Manohar said...

நல்ல இயல்பான நடை. நீங்கள் சந்த்தித்த சம்பவம், வாசகர்களுக்கும் நல்ல படிப்பினை.

வாழ்த்துக்கள்.

Priya said...

நன்றி ரிஷ்பன்!

நன்றி மங்குனி அமைச்சர்!

உங்க வாழ்த்துக்களை அம்மாகிட்ட சேர்த்தாச்சு சுசி!

நன்றி ஜிஜி!

'பரிவை' சே.குமார் said...

ரொம்ப நல்லா இருக்கு.. பிரியா..
உங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்..

புலவன் புலிகேசி said...

நல்ல பதிவு ப்ரியா...ஒவ்வொரு அம்மாவும் இப்படித்தான். தாமதமா வந்துட்டேன் இருந்தாலும் அம்மாவுக்கு வாழ்த்துக்கள் சொல்லிருங்க

Priya said...

நன்றி சே.குமார்!

நன்றி புலவன் புலிகேசி!
தாமதம் எல்லாம் இல்லங்க, அம்மாவுக்கு எப்போதும் சொல்லலாம். உங்க வாழ்த்துக்களை அம்மாகிட்ட சேர்த்திட்டேன்.

Madhavan Srinivasagopalan said...

//நான் எதிர் பார்த்ததை போல் என் அம்மா நான் அழுவதைப் பார்த்து, எனக்கு சப்போர்டிவ்வாக உனக்கு பிடிக்கலைன்னா வேலைக்கு போகாத என்றும் மட்டும் சொல்லி இருந்தால் நான் நல்ல சில பண்புகளை இழந்து இருப்பேன்.//

very true

vanathy said...

எப்போதும் அம்மா அம்மாதான். அம்மாவுக்கு வாழ்த்துக்கள்.

Priya said...

நன்றி Madhavan!

நன்றி vanathy!

ரசிகன்! said...

priya...

the way u narrated is too good...

hmmm which school did u work ;)

Priya said...

Thanks Durai!
A private school named 'Blue Star Convent'... near Villianur.

தனி காட்டு ராஜா said...

நம்பவே முடியல ...இப்படியெல்லாம் கூட பொண்ணுக இருக்காங்ககளா ...

Priya said...

//நம்பவே முடியல ...இப்படியெல்லாம் கூட பொண்ணுக இருக்காங்ககளா ...//.... அப்படின்னா??

viji said...

Very well said Priya.
Being an aged mother I accept your greetings and smiled myself for your feelings.
Yes all the mothers are focus on their children's wellbeing.
Some realize immediately and some latly.
Good that you take it very possitively and quickly.
Nice writeup.
vijimma.

Priya said...

Thanks Viji Mam!

Post a Comment