நினைத்தாலே இனிக்கும் இனிமையான நினைவுகளை கொண்டதுதான் இந்த பதின்ம காலங்கள்! என்றுமே மூச்சினில் கலந்து சுவாசத்தில் உயிர்த்திருக்கும் அழகான நினைவுகளை திரும்பி பார்க்க ஒரு வாய்ப்பாக இருந்தது நண்பர் ரகுவின் இந்த தொடர் பதிவு அழைப்பு.
நன்றி ரகு!
கண்களில் மின்னல் பார்வை
எப்போதும் சிரிப்பு
மனது முழுவதும் சந்தோஷம்
பொங்கி வழிந்த உற்சாகம்
நிறைய படிப்பு
சின்ன சின்னதாய் கலாட்டக்கள்
யாரையும் புண்படுத்தாக வகையில் சில குறும்புகள்
கலர் கலராய் சில கனவுகள்..........
இதுதான் என் பதின்ம வயதில் நிறைந்திருந்தது!
நிறைய மாற்றங்களை நான் கொண்டது இந்த வயதில்தான். வெறும் Frocks, skirts… போட்டு சுற்றிக்கொண்டிருந்த நான் முதல் முறையாக 16 வயதில் புடவை கட்டி கொண்டு சர்ச்சுக்கு சென்ற நாள் மறக்க முடியாதது. அடிக்கடி வீட்டில் புடவை கட்டி பார்த்ததுண்டு என்றாலும் வெளியில் சென்றது அதுவே முதல்முறை. அதுவரை என்னை பார்த்தவர்களின் பார்வை இம்முறை வேறு மாதிரியாக இருந்தது. என்னையே நான் புதிதாக பார்த்துக்கொண்டதும் அப்போதுதான்!
அம்மா இரண்டு ஜடை பிண்ணி ரிப்பன் வைத்து மடித்து கட்டியது எல்லாம் மாறிப்போய் ஹேர்கட் செய்து கொண்டு பள்ளி நாட்களை தவிர மற்ற நேரங்களில் லூஸ் ஹேர் என்று மாறிப்போனது. அதற்கு முன்பு வரை அம்மா போட்டு விட்ட பவுடர், கண்மை என்று எதுவும் பிடிக்காமல் Fair & Lovely ட்ரை பண்ணியதில் ஆரம்பித்து ஐலைனர், மஸ்காரா என்று என் அலங்காரம் மாறிபோனது. இப்படி சின்ன சின்னதாய் எத்தனையோ மாற்றங்கள்.
டிவியிலோ வாரப் பத்திரிக்கைகளிலோ எந்த அழகு குறிப்பு வந்தாலும் தவறாமல் பார்த்தும் படித்தும் விடுவேன். வெறும் பார்ப்பதோடு நிறுத்தாமல் அதையே முயற்சி செய்தும் பார்ப்பேன். "இப்படி எதையாவது முகத்தில பூசிக்கொண்டிரு முப்பது வயதுக்குள்ளேயே என்னாக போகுதுன்னு பாரு".... என்ற தம்பியின் கிண்டலை கண்டு கொண்டதே இல்லை. Glowing skin என்பது இயற்கையாகவே அந்த வயதில் இருக்கும் என்பது தெரிந்தும் மேலும் மெருகேற்றிக் கொள்ள வேண்டுமென்ற ஆசையால் விடுமுறை நாட்களானால் எப்போதும் என் முகத்தில் தக்காளி, கேரட், தயிர், தேன்.... இப்படி ஏதாவது ஒன்றினை கொண்டு ஒரு மாஸ்க் இருக்கும்!
அப்பொழுது எனக்கு இருந்த கெட்ட பழக்கமாக அம்மா சொல்வது இதைதான்.... சாப்பிடும்போது புத்தகம் படிப்பது! ஏதாவது ஒரு புத்தகம்…. அது பாடப் புத்தகமாகவோ கதை புத்தகமாகவோ ஏதோ ஒன்று சாப்பிடும் பொழுது என்னிடம் இருந்தாக வேண்டும். அப்படி படித்துகொண்டே சாப்பிட்டால்தான் சாப்பிடுவதே உள்ளுக்குள் இறங்கும். நான் கவனிக்கின்றேனா என்று பார்ப்பதற்காகவே வேண்டுமென்றே என் தம்பி சில நேரங்களில் பேப்பர் துண்டுகளை என் தட்டில் போட்டு விடுவான். கண்டும் காணாததை போல புத்தகத்தில் இருந்து பார்வையை திருப்பாமலே தட்டில் இருக்கின்ற தாள்களை எடுத்து போட்டு விட்டு சாப்பிடுவேன். நானும் ஓரளவு உஷார்தான் !
இப்பொழுதும் தனியாக சாப்பிடும் சமயங்களில் இந்த (படிக்கும்) பழக்கம் தொடர்கிறது.
தூக்கம், டிவி, போன்.... இந்த மூன்றும்தான் எனக்கு அப்போது மிகவும் பிடித்தவைகளாக இருந்தது. எதற்குமே கோபப்படாத நான் தூங்கும் போதுமட்டும் யாராவது எழுப்பினால் கையில் கிடைப்பதை தூக்கி எறிந்து எதிரில் உள்ளவர்களை ஒரு வழி பண்ணாமல் விடமாட்டேன். இதை வைத்தே எனக்கும் என் தம்பிக்கும் அடிக்கடி சண்டை நடக்கும்.
படிக்கும் நேரங்களில் படிப்பு… மற்ற நேரங்களில் எப்பொழுதும் டிவிதான். இதுதான் பிடிக்கும் என்றில்லாமல் எல்லா நிகழ்ச்சிகளையும் பார்ப்பேன். அம்மாவிடம் சில நேரம் திட்டு வாங்கினாலும் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் நான் பாட்டுக்கு ஒவ்வொரு சேனலாக மாற்றி மாற்றி பர்த்துக்கொண்டு இருப்பேன்.
அடுத்து மிகவும் பிடித்த ஒன்று போன். ஏன் என்றே தெரியாது… போனில் பேசுவது விருப்பமான ஒன்றாகி போனது. வெறும் பத்து பதினைந்து நிமிடம் என்றில்லாமல் தோழிகளிடம் மணி கணக்கில் அரட்டை அடிப்பது பிடிக்கும். வீட்டில் போன் ரிங் ஆனாலே நான் தான் ஓடி போய் எடுப்பேன்… அந்த அளவுக்கு பிடிக்கும்.
சின்ன வயதில் இருந்தே sense of dressing அதிகம் எனக்கு. அதிலும் இந்த பதின்ம காலத்தில் விதவிதமாய் நிறைய டிரஸ் வாங்கிவது பிடித்திருந்தது. Interior decoration னில் ஆர்வம் என்பதால் வீட்டை ஓரளவு சுத்தமாகவும் அழகாகவும் வைத்துக்கொள்வேன். வீட்டில் வேறு எந்த வேலையும் முக்கியமாக சமையல் எதுவும் செய்யாமல் போனாலும் வீட்டையாவது அழகா வைத்துக்கொள்கிறேனே என்று என் அம்மாவிற்கு சந்தோஷம்.
முறைப்படி நடனம் கற்றுகொள்ளவில்லை என்றாலும் கொஞ்சம் நன்றாகவே ஆட வரும். இதனால் பள்ளி கல்லூரி காலங்களில் நிறைய நடன நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வேன். எட்டாவதும் படிக்கும் போது முதல் முறையாக நடன போட்டியில் பரிசும் பெற்றேன். பள்ளியில் எந்த கலை நிகழ்ச்சி என்றாலும் எனது டீச்சர்ஸ்கிட்டே இருந்து எனக்கு எப்போதும் அழைப்பு வரும். அப்படி கலந்து கொண்டவைகளின் நினைவாக எண்ணற்ற புகைப்படங்கள் இன்றும் என்னிடம்! பள்ளியில் மட்டுமில்லாமல் வீட்டிலும் அடிக்கடி என் நடன அரங்கேற்றம் நடந்துகொண்டே இருக்கும்.
மனதில் எப்போதும் உற்சாகம் நிரம்பிய வயது என்பதால் நிறைய நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ள ஆசை வந்தது. ஒன்பதாம் வகுப்பு படித்தபோது டூவீலர் ஓட்ட ஆசை வர, அதை கற்றுக்கொண்டது பெரிய கதை. அதைப்பற்றி எழுத வேண்டுமென்றால் தனியாக ஒரு சில பக்கங்கள் தேவை.
அறிவியல் பாடத்தின் மேல் உள்ள ஆர்வத்தால் +1 ல் ஃப்ர்ஸ்ட் குருப் (பயாலெஜி) எடுத்து படித்தேன். ஆனால் கல்லூரியில் படிக்குபோது கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க ஆசை வர டிப்ளமா கோர்ஸில் சேர்ந்து அதையும் கற்றுகொண்டேன். படிப்பது மிகவும் பிடித்த ஒன்றுதான் என்றாலும் அதற்காக செய்த தியாகங்கள் ஏராளம். ஆம், எத்தனையோ இரவுகள் மூன்று நான்கு மணிவரை கண்முழித்து படித்திருக்கிறேன். இதற்காக எத்தனையோ நாட்கள் டிவி பார்ப்பதையே தவிர்த்திருக்கிறேன்.
பள்ளி நாட்களில் படிப்பை போலவே Extracurricular activities ல் ஆர்வம் இருந்தது. இதனால் நிறைய போட்டிகளில் கலந்துக்கொள்வேன். சில பரிசுகளும் பெற்றுள்ளேன். இதில் எனக்கு பெரிய சவாலாக இருந்தது ஒன்பதாம் வகுப்பில் கலந்துகொண்ட பேச்சு போட்டிதான். போட்டியின் முடிவை தெரிவித்த நடுவர்கள் நானும் இன்னொரு மாணவியும் சமமாக மார்க் எடுத்துள்ளதாக சொல்லி மீண்டும் எங்கள் இருவரையும் பேச வைத்தார்கள். முதல் முறை பேசியபோது இருந்த துணிச்சல் போய் கொஞ்சம் பயம் வந்து விட எப்படியோ அதையும் மறைத்துக்கொண்டு பேசிமுடித்தேன். ரிசல்டும் வந்தது...ஆனால் நான் இரண்டாவது என்று! சற்று வருத்தமாக இருந்தாலும் முதல் பரிசு பெற்றவள் என் நெருங்கிய தோழி என்பதால் இருவரும் சந்தோஷத்தை பகிர்ந்துக் கொண்டோம்.
NSS ல் இருந்ததினால் அடிக்கடி பாண்டிச்சேரியின் முக்கிய இடங்களுக்கு எங்களை அழைத்து செல்வார்கள். அப்படி ஒரு முறை, பள்ளி இறுதி ஆண்டின் போது Pondy Central Prison க்கும் ஒரு Slum Area வுக்கும் சென்று வந்தது மறக்க முடியாதது. அந்த இரண்டு இடங்களையும் பார்த்த போது அதுவரை சந்தோஷமாகவே நான் பார்த்த உலகம், முதல்முறையாக இப்படியும் இருக்கிறது என்பதனை தெரிந்துக்கொண்டேன்.
பதிமூன்று வயதில் என் பின்னால் சுற்றி கொண்டிருந்தான் ஒருவன்.... ஸ்கூல் போகும்போது பஸ் பின்னால் சைக்களில் தொடர்ந்து வருவான். அதே போல் மாலை ஸ்கூலில் இருந்து பஸ் ஸ்டாப் வரை வந்து, திரும்ப வீடு வரை தொடந்து வருவான். பலமுறை என்னிடம் பேச முயன்று தோல்வி கண்டு இரண்டு வருடம் இப்படியே சுற்றுகொண்டு இருந்தவன், பின் என் வீட்டில் உள்ளவர்களின் கண்டிப்புக்கும் பிறகு நிறுத்தி விட்டான்.
இவனை தொடர்ந்து நிறைய கடிதங்கள், போன் கால்ஸ் என்று பதின்ம வயது முழுதும் காதல் என்னை துரத்தியது. நான்கு வரியில் தமிழில் கவிதையாக எழுதியவன் ஒருவன், எட்டு பக்கங்களில் ஆங்கிலத்தில் கதையாக எழுதியவன் இன்னொருவன் என்று பலவகையான காதல் கடிதங்கள் வந்தது. சற்று பயந்து பயந்து காதல் சொன்னவர்கள் சிலர் என்றால் மிக தைரியமாக கண்களை பார்த்து காதல் சொன்ன தைரியசாலிகளும் உண்டு.
வாழ்வின் வசந்த காலம் என்றால் அது இந்த கல்லூரி காலங்கள்தான். எதற்கென்றே தெரியாமல் எப்போதும் எதையாவது பேசி சிரித்துக்கொண்டே இருப்போம். பெண்கள் கல்லூரி என்பதால் நிறைய வசதி... அதிலும் காலேஜ் பஸ்ஸில் நாங்கள் அடித்த லூட்டிகளை இன்று நினைத்தாலும் இனிக்கிறது. வாட்ச்மேன் ஏமாந்த சமயம் பார்த்து நைஸாக கல்லூரியை விட்டு வெளியேறி வெளியில் சுற்றி இருக்கிறோம்.
நான் ஓரளவு வரைவேன் என்று என் நெருங்கிய தோழிகள் மட்டுமே அறிந்திருந்த நிலையில், ஒரு தோழியின் மூலம் நான் வரைந்த ஓவியம் கல்லூரி ஆண்டு மலரில் வந்துவிட கொஞ்சம் கல்லூரியில் பிரபலம் ஆனேன். கவிதை என்ற பெயரில் கிறுக்க ஆரம்பித்த வயதும் இதுதான்!
என் பதின்ம வயதின் நினைவு சின்னமாக இருப்பது பள்ளி... கல்லூரி காலங்களின் இறுதியில் கவிதையாய் கிறுக்கிகொண்ட ஆட்டோகிராப்ஸ்தான்!
தோழமை இல்லாத வாழ்வு நிச்சயம் இனிக்க முடியாது. எனக்கும் நிறைய நல்ல நட்புகள் இருந்தன. எதிர் வீட்டில் இருந்த சரியாக பேசவே தெரியாத இரண்டு வயது பையனில் இருந்து, என்னையே கல்யாணம் செய்துக்கொள்ள போவதாக சொன்ன என் பக்கத்து வீட்டு மூன்று வயது பையன் வரை எல்லோரும் எனக்கு பிரெண்ட்ஸ். தங்கைக்கு அவள் தோழிகளிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்பில் கூட என் நட்பு பரவி இருந்தது. அவளிடம் பேசி முடித்தப்பின் அவள் தோழிகள் எப்பொழுதும் என்னிடமும் பேசுவார்கள். அதேப்போல் என் தம்பியை தேடி வரும் அவன் நண்பர்கள், தம்பி வீட்டில் இல்லாமல் போனால் கூட என்னிடம் பேசிக்கொண்டிருந்து விட்டு செல்வார்கள்.
இப்படி நல்ல நட்புகள் நிறைந்த….மனதில் எந்த கலக்கமும் இன்றி… எந்த ஒரு தேடலும் இன்றி… ஒவ்வொரு நொடியும் சந்தோஷமாக கழிந்த நாட்கள் அது.
35 comments:
///இப்படி நல்ல நட்புகள் நிறைந்த….மனதில் எந்த கலக்கமும் இன்றி… எந்த ஒரு தேடலும் இன்றி… ஒவ்வொரு நொடியும் சந்தோஷமாக கழிந்த நாட்கள் அது.///
.... what a blessing! உங்கள் பதின்ம வயது அனுபவ இடுகை வாசிக்கும் போது, அந்த வயதின் காலங்களுக்கே அழைத்து சென்று விட்டீங்க. Thank you. :-)
very interesting .
ரொம்ப அழகா எழுதிருக்கீங்க .நான் கூட சாப்பிடும் போது படிப்பேன் .இப்பவும் தான் .
same pinch பிரியா
சூப்பர் ப்ரியா. அழகா எழுதி இருக்கீங்க. அந்த நாள் நினைவுகள் எப்போதும் இனிமை தான். கவிதையான பதிவு. வாழ்த்துக்கள்
ஆஹா...அழகான பகிர்வு ப்ரியா...எனக்கும் நிறைய நினைவுகள் வந்து நெஞ்சில் நின்றுவிட்டது...நானும் சாப்பிடும்போது புத்தகம் படிப்பது பழக்கமாகி போச்சு அது என் அப்பாவிடமிருந்து தொற்றிகொண்டது...அந்த நினைவுகளுடன் எல்லாநாளும் இனிமையாய் அமைய வாழ்த்துகள்...
ஆண்டு மலர் ஓவியம் இப்போ இருக்கா?
அழகா எழுதி இருக்கீங்க.
எனக்கு சாப்பிடும்போது புத்தகம் இல்லாட்டி சாப்பிடவே மாட்டேன். அப்படி புக் இல்லாட்டி ஆயிரம் குறை சொல்வதை பாத்துட்டு அவங்களே ஒரு புக்கை எடுத்து கையில தந்துடுவாங்க. ஸேம் பிளட்.
மிக அழகாக ஒவ்வொரு கணங்களையும் மீட்டு இரசித்து எழுதியது என்னையும் அந்த வயது நினைவுகளிற்கு இட்டுச்சென்றது, மிக்க நன்றி
சிறு வயது நினைவுகள்... நல்ல பகிர்வுங்க...ரசிக்கும் படி எழுதி இருக்கீங்க...
நாம் தொலைத்த பல நாட்கள்...
நானும் புத்தக பிரியன் தான் புத்தகத்தை கையில் எடுத்தால் படிக்காமல் வைக்க
மாட்டேன் என் வீட்டில் உள்ளவர்களும் அப்படி தான்
மலரும் நினைவுகள் என்றும் இனிமை தான் தோழி
எத்தனை பருவகால்ங்கள் மாறுகையிலும் அந்த பள்ளி - நட்பு எனும் காலம் மிக மிக வாழ்வில் உன்னதமான காலம்.அதன் பசுமைதான் அடுத்து வரும் காலங்களையும் ஈரலிக்க வைத்தபடி கொண்டு செல்லும் ப்ரியா.அழகான வசந்தமான நினைவலைகள் தோழி.
பசுமையான மறக்கமுடியாத நினைவுகள்,அழகா எழுதிருக்கிங்க ப்ரியா!!
நல்லா எழுதியிருக்கீங்க.
சூப்பர் ப்ரியா. அழகா எழுதி இருக்கீங்க. அந்த நாள் நினைவுகள் எப்போதும் இனிமை தான். கவிதையான பதிவு. வாழ்த்துக்கள்.
ஒரு சில பதிவுகளை வெறுமே படிக்க பிடிக்கும்
உங்க பதிவுகளை உணர்ந்து வாசிக்க பிடிக்கும்
ஒரு ஒரு சின்ன சின்ன விசியங்கள் கூட
எடுத்துக்காட்டு போன் பேசுறது..எப்படி சொல்லிகிட்டே போகலாம்..அழகா பதிவு செய்து இருக்கீங்க.
பாரட்ட வார்த்தைகள் இல்லை.
வாழ்க வளமுடன்
காம்ப்ளான் சூர்யா
புதிய வீடு அழகா இருக்கிறது...
டேம்ப்லடே சூப்பர்
இப்படி நல்ல நட்புகள் நிறைந்த….மனதில் எந்த கலக்கமும் இன்றி… எந்த ஒரு தேடலும் இன்றி… ஒவ்வொரு நொடியும் சந்தோஷமாக கழிந்த நாட்கள் அது.
கடைசி வரிகள்
மிகவும்
உண்மையான வரிகள்
பிடித்து இருந்தது.
wow...
alagala collection of picture..
neengal eluthiya varthaigali
cute picture-ga thoguthu erukkenga.
so cute..
simply super priyama.
complan surya
//பள்ளி நாட்களில் படிப்பை போலவே Extracurricular activities ல் ஆர்வம் இருந்தது//
எனக்கு Extracurricular activities ல் மட்டும்..ஹிஹி..
//பதிமூன்று வயதில் என் பின்னால் சுற்றி கொண்டிருந்தான் ஒருவன்//
13 வயசுலேவா?!
//வாட்ச்மேன் ஏமாந்த சமயம் பார்த்து நைஸாக கல்லூரியை விட்டு வெளியேறி வெளியில் சுற்றி இருக்கிறோம்//
கட் அடிச்சுட்டு படம்லாம் போனதே இல்லியா? என்ன நீங்க...
ஆமா சித்ரா அழகா அமைந்த அப்படியொரு காலம் நிஜமாகவே பிளஸிங்தான்!
Same pinch Padma!
ம்ம்.. உண்மைதான் அப்பாவி தங்கமணி நினைவுகள் என்றும் இனிமைதான்!
கனி... கல்லூரி ஆண்டு மலர் ஊர்ல(Puducherry) இருக்கு.வீட்டில சொல்லி இருக்கேன். அந்த பக்கத்தை எனக்கு ஸ்கேன் பண்ண சொல்லி இருக்கேன்.
மிக்க நன்றி நேசமித்ரன்!
ஆமா ஜெய்லானி ஸேம் பிளட்!
நன்றி பாலன்!
நன்றி கமலேஷ்!
ராசராசசோழன்.... உண்மைதாங்க. தொலைந்த அழகான நாட்கள்!
r.v.saravana நீங்களுமா?
அப்போ நான் மட்டுமில்ல..அம்மா கிட்ட அவசியம் சொல்லியே ஆகனும்.
ஆமா ஹேமா.... அது ஒரு உன்னதமான காலம்!
நன்றி Mrs.Menagasathia!
நன்றி செ.சரவணக்குமார்!
நன்றி சே.குமார் !
உணர்ந்து படித்ததற்கு நன்றி Complan Surya!
Template, படங்கள் என்று அனைத்தையும் ரசித்து பாராட்டியதற்கு மிக்க நன்றி.
வாங்க ரகு
//13 வயசுலேவா?!//......... நம்ப முடியல இல்ல, என்னாலையும்தான்:)
காலேஜ் கொஞ்சம் strict.....சோ, நோ படங்கள். ஆனா 'கட்' அடிக்காமலா!
wow.. priya..you reminded me of my padhinma ninaivugal too...
appavae unga kitta niraya thiramai veli vara aarambichchachaa?? super ma... enjoyed reading it.. :)
நல்ல எழுதி இருக்கீங்க .. ஒரு சந்தேகம். அப்ப உங்க வீட்ல போன் பில் எவ்வளவு வரும் ???
அந்த சாப்பிடும்போது படிக்கும் மேட்டர் ,, மத்தவங்க எப்ப அதை புரிஞ்சிக போறாங்க. அந்த சுகமே தனிதான் .
செம லூட்டி தான் போல. நல்ல ரசனையான பொண்ணு நீங்க.
பதின்ம வயது நினைவுகளை அழகாக பதிவு இட்டுள்ளீர்கள். ரொம்பவே சுட்டிப்பொண்ணு தான் நீங்கள் ப்ரியா......
சுவாரஸ்யமா இருக்கு.
Nice blog..................
நன்றி ஆனந்தி!
பள்ளி நாட்கள்தான் நம் திறமைகளை வெளி கொண்டு வரும் காலங்கள் அல்லவா!
உங்க சந்தேகம் நியாம்தான் LK, பில் ஏறாமல் இருக்குமா? பொறுப்புகளற்ற இனிமையான காலம் அல்லவா அது!
ஆமாங்க அந்த சுகத்தை அனுபவிச்சாதான் புரியும்!
ஃப்ளைட் கிளம்பும் அவசரத்திலும் வந்து கமெண்ட் எழுதிய விக்னேஷ்வரிக்கு எனது நன்றிகள்:)
நன்றி ஜெயா!
நன்றி Ammu Madhu!
நன்றி Ranjith!
அனைத்துஉலக அன்னையர்க்கும்
பதிவர்களுக்கும்
எனது
பாசமான,
பணிவான,
அன்பான,
அன்னையர் தின
வாழ்த்துக்கள்...
பதின்ம வயது நினைவலைகள் சூப்பர்
http://allinalljaleela.blogspot.com/2010/05/blog-post_05.html
இந்த பதிவில் உங்கலுக்கு அவாடு கொடுத்துள்ளேன் வந்து பெற்று கொள்ளுங்கள்
நன்றி சூரியா!
மிக்க நன்றி, வந்து பெற்றுக்கொள்கிறேன் Jaleela!!
தங்களது வலைப்பூவைக் குறித்து 14-05-2010(வெள்ளி) "வலைச்சரம்" இடுகையில் குறிப்பிட்டிருக்கிறேன்.
http://blogintamil.blogspot.com
வருகை தருக! நன்றி! -சேட்டைக்காரன்
ஆ... அப்படியா!!!
கண்டிப்பா வந்து பார்க்கிறேன். மிக்க நன்றி சேட்டைக்காரன் !
Post a Comment