Valentine's Day என்பது காதலர்களுக்கு மட்டுமல்லாமல் அன்பை பகிர்ந்துக்கொள்கின்ற அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் பொதுவானதாகத்தான் நினைக்கிறேன். என்னதான் காதலர்களோ, கணவன் மனைவியோ தினம்தினம் ஏதோ ஒருவகையில் அன்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாலும், தங்களின் காதலை மேலும் வளர்த்துக்கொள்ள...நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள... கொண்டாடி மகிழ்ந்திடும் நாளாகதான் பார்க்கிறேன்..... இந்த காதலர் தினத்தை.
காதலித்துக் கொண்டிருப்பவர்கள் மட்டுமல்ல, புதிதாக வாழ்க்கையை ஆரம்பித்த தம்பதியினரும், குழந்தைகள் பெற்ற கணவன் மனைவியும் கூட இந்த நாளை ஸ்பெஷலாக மாற்றி பரிசுப் பொருட்கள் பரிமாறிக்கொள்ளலாம்.... இந்த ஒரு நாளிலாவது குடும்பப் பிரச்சனைகளை தூக்கி தூரப்போட்டுவிட்டு இருவரும் மனம் விட்டு பேசலாம். அழகாக அன்பை வெளிப்படுத்த ஐ லவ் யூ சொல்லி மகிழலாம்.
தம்பதிகளின் இல்லறம் நல்லறமாகப் பயணிக்க இருவருக்கும் இடையே உள்ள ரொமான்ஸ் பேட்டரி சார்ஜ் இறங்காமல் இருக்க... தினசரி கவனிப்பு முக மிக அவசியம்!
இங்கு ப்ரெஞ்சு மக்களை பார்க்கும்போது எனக்கு ஆச்சிரியமாக இருக்கும். இவர்களுக்கும் குடும்பம் பிரச்சனைகள் என்று இருந்தாலும் எப்படி எப்போதும் ஜாலியாக ரொமான்டிக்காகவே இருக்கிறார்கள்! பிரான்ஸ் The land of Romance என்று கேள்விப்பட்டிருந்தாலும், இந்த நாட்டிற்கு வந்து பார்த்தபோதுதான் அது எவ்வளவு உண்மையென்று புரிந்தது. அவர்களது பேச்சில்(French), முத்தத்தில்(French Kiss) என்று எப்பொழுதும் ரொமான்ஸுதான்.
இந்த நாடும், நாட்டு மக்களும்தான் வெரி ரொமான்டிக் என்றால் ஹைலி ரொமான்டிகாக இருப்பது இவர்களது மொழி. நான் English Literature படித்தபோது உலகமொழிகள் சிலவற்றைப் பற்றியும் தெரிந்துக்கொள்ள முடிந்தது. French is a Romantic language என்று அப்பொழுது படித்திருக்கிறேன். அதிலும் phonetics வகுப்பு எடுக்கும் Mam ரொம்ப அழகாக ப்ரஞ்சு எழுத்துக்களின் sounds பற்றியும் அதன் accents & variations in pronunciation பற்றியும் சொல்லும் போது உண்மையிலேயே கேட்பதற்கு இனிமையாகத்தான் இருந்தது. அழகான மொழியாக இருந்தும் ஏனோ ஆர்வமில்லாததால் அப்போதே கற்று கொள்ளவில்லை. இங்கு வந்தபின்பு அந்த Romantic மொழியில் பேச ஆரம்பித்த பிறகுதான் இத்தனை நாள் இந்த அழகிய மொழியினை தெரிந்துக்கொள்ளாமல் விட்டுவிட்டோமே என்று நினைத்துக்கொண்டேன்.
இதோ அந்த இனிமையான மொழியிலிருந்து சில ரொமான்டிக் வார்த்தைகள்........ நீங்களும் தெரிந்துக்கொள்ள!
Je t'aime !
I love you.
Moi aussi, je t'aime !
I love you too.
Je t’aimerai toute ma vie !
I'll Love You Forever.
Je t'aimerai toujours !
I will always love you.
Je t'adore !
I adore you.
Tu es mon amour !
You are my love.
Tu es ma joie de vivre !
You are the joy of my life.
Tu me plais beaucoup !
I am very attracted to you.
Je rêve de toi !
I dream of you.
Tu es magnifique !
You are amazing .
Je t'aime de tout mon cœur !
I love you with all my heart.
Tu es dans toutes mes pensées !
You are in all my thoughts.
Je veux etre avec toi !
I want to be with You.
Mon amour pour toi est éternel !
My love for you is eternal.
Tendres baisers !
Love and kisses.
23 comments:
je ne sais pas comment vous remerci :)
Au revoir..:))
நமஸ்தே மிஸ்.. நாளைக்கு வரேன். இன்னிக்கு பாடம் ஸுப்பர்..:))
------
பிப்.14 ஃப்ரென்ச்லதான் பேசப்போறேன்.:))
poste bueno felicidades
:) நல்ல விவரணை
நமக்குலாம் தாய் மண்னே வணக்கம்தான்..
கலக்கல் ப்ரியா!! இந்த மாதிரி ப்ரெஞ்ச் பாடங்களை பத்தி சொல்லிக் கொடுக்கலாமே....
நோட் பண்ணி வச்சுக்கறேன், எதிர்காலத்தில உதவும் :))
யக்கா, ஊரெல்லாம் அதை பிரெஞ்ச் கிஸ்னு சொல்லும் போது, அங்க அதை இங்கிலீஷ் கிஸ்னு சொல்வாங்களாமே :))
//ஷங்கர்.. said...
பிப்.14 ஃப்ரென்ச்லதான் பேசப்போறேன்.:))//
வெளில வந்துராதீங்க, வீட்டுக்குள்ளேயே பேசுங்க :))
குழந்தை பிறந்தப்பின் கணவன் மனைவிக்கு இடையே ப்ரைவேசி சற்று குறைந்துப்போகலாம், ஆனால் அவர்கள் இடையே உள்ள காதல்… அது எப்படி குறையும்! மாறாக அதிகமாகும்தானே! பெண்கள் குழந்தைப்பெற்ற பின்னரும் கணவருடன் காதல் கசிய வாழ்வை தொடர்ந்தால்... நிச்சயம் வாழ்வு ருசிக்கும்!
..................நான் உங்க கட்சி. அடிச்சி தூள் பண்ணுங்க, பிரியா!
சத்தியமா சொல்றேங்க..... மேல இங்கிலிஷ்ல மட்டும் நீங்க எழுதாம விட்ருந்தீங்கஅவ்ளோதான்... ஏன் இந்த கொல வெறி... எதுக்கிப்போ இப்டி திட்ரீங்கண்டு பலபேருகேட்ருபாங்க... ஆனா கரு காதல் பத்திங்க்றதால... புரிஞ்ச பாஷையாச்சே... நல்லாபுரிஞ்சுச்சு.... ஹா ஹா... தேங்க்ஸ்...
j'aime aussi du français..
bon travail Priya!!
//அதிலும் phonetics வகுப்பு எடுக்கும் Mam ரொம்ப அழகாக ப்ரஞ்சு எழுத்துக்களின்//
மேம்தான் அழகுன்னு சொல்ல வந்தீங்களோன்னு நினைச்சுட்டேன்..ஹி..ஹி..
இருங்க, முதல்ல "துய் மு ப்ளே பொஃகு"வ ட்ரை பண்ணி பாத்துட்டு ரிப்ளை என்ன கிடைக்குதுன்னு பாத்துட்டு சொல்றேன்:)
அட பார்ரா... இந்த வருடம் ப்ரெஞ்சுலயெ...ஜொல்லு விட்டுருவோம்...ப்ரெஞ்சு மிஸ்...
Tu es magnifique !
ஏப்பூடி....
;-) ம்ம்ம் நடக்கட்டும் !
ம்ம்ம்ம்ம்ம் நானும் கத்துக்கிறேன்....
அழகான காதலர் தினம் இதயமும் இதயமும் கதைக்க மொழிகள் தேவையில்லை
கனோடு கண் நோகின் வாய் சொல்லில் என்ன பயன்
காதலர் தினம் பற்றியும் ,கணவன் மனைவிக்கு இடையில் காதலை எப்படி வெளிப்படுதினால் வாழ்க்கை அழகாக இருக்கும் என்பதைப் பற்றியும் அழகாக சொல்லும் நல்ல பதிவு...
ஷங்கர்......
ஆஹா, ஷங்கர் ப்ரெஞ்செல்லாம் பேசுராரு...:-)
பிப்.14க்கு ஆல் தி பெஸ்ட் (பிரெஞ்சுல பேச)!
nanrasitha.....
//poste bueno felicidades/:...இது Spanish தானே?
Gracias!
நேசமித்ரன்......நன்றி!
அண்ணாமலையான்......
//நமக்குலாம் தாய் மண்னே வணக்கம்தான்//..என்னா தேசப்பற்று:).....வாழ்க தமிழ்!
Mrs.Menagasathia......
//இந்த மாதிரி ப்ரெஞ்ச் பாடங்களை பத்தி சொல்லிக் கொடுக்கலாமே....//...இங்கேயுமா!?
சங்கர்.......
//நோட் பண்ணி வச்சுக்கறேன், எதிர்காலத்தில உதவும் :))//.....இன்னும் ட்ரை பண்ணவே இல்லையா.... ரொம்ப நல்லவரு நீங்க:-)
//யக்கா, ஊரெல்லாம் அதை பிரெஞ்ச் கிஸ்னு சொல்லும் போது, அங்க அதை இங்கிலீஷ் கிஸ்னு சொல்வாங்களாமே :))/:...
தம்பி,இதுவரைக்கும் அப்படி எதுவும் கேள்விப்பட்டதில்ல!
Chitra........
//நான் உங்க கட்சி. அடிச்சி தூள் பண்ணுங்க, பிரியா!//அட, கூட்டணி அமைச்சிட வேண்டியதுதான்!!!
Anbu Thozhan......
மெனக்கட்டு ப்ரெஞ்சு சரியா உச்சரிக்க தமிழில எழுதினா... உங்களுக்கு திட்டுறமாதிரி தெரியுதா:-) நல்லவேளை, இருக்கவே இருக்கு நம்ம ஆங்கிலம்!
தமிழ்.......
Merci Tamizh!!!
குறும்பன்......
//மேம்தான் அழகுன்னு சொல்ல வந்தீங்களோன்னு நினைச்சுட்டேன்..ஹி..ஹி..//.....
என்ன ஒரு எதிர்ப்பார்ப்பு:-)
//இருங்க, முதல்ல "துய் மு ப்ளே பொஃகு"வ ட்ரை பண்ணி பாத்துட்டு ரிப்ளை என்ன கிடைக்குதுன்னு பாத்துட்டு சொல்றேன்:)//.....
ஜாக்கிரதை ரகு, எனக்கென்னவோ ரிஸ்கு எடுக்கிறீங்களோன்னு பயமாயிருக்கு!
seemangani......
//Tu es magnifique !
ஏப்பூடி....//எனக்கேவா!
ஜெனோவா......
//;-) ம்ம்ம் நடக்கட்டும்//.... ஓகே ஜோ!
negamam.......
//ம்ம்ம்ம்ம்ம் நானும் கத்துக்கிறேன்....//...
ஆஹா என்ன ஆர்வம்:-)
கவிக்கிழவன்.......
//கனோடு கண் நோகின் வாய் சொல்லில் என்ன பயன்//....நீங்க சொல்றது உண்மைதான், இருந்தாலும் எவ்வளவு நேரம்தான் அப்படியே பார்த்துக்கிட்டே இருக்கிறது சொல்லுங்க!!!
நன்றி ஜெயா (போட்டோவில இருக்க குழந்தை யாரு, ரொம்ப அழகா இருக்கு)!
அடடா
கலக்கீட்டீங்க
நான் கவிதையானு நினைச்சு வந்தேன்
நல்ல பகிர்வு
k'a mbhagf dggaapp l'jjjjj
இதுக்கு ஃபிரஞ்ல என்ன அர்த்தம் தெரியுமா???? ஹி ஹி..,,
நானும் ஃபிரஞ்ச் உங்களிடம் கற்றுக்கொள்கின்றேன்.வாழ்க வளமுடன் வேலன்.
பிரியமுடன் பிரபு.......
மிக்க நன்றி!
பேநா மூடி......
//k'a mbhagf dggaapp l'jjjjj
இதுக்கு ஃபிரஞ்ல என்ன அர்த்தம் தெரியுமா???? ஹி ஹி..,,//....
ஹா ஹா ஹா:-))
வேலன்......
//நானும் ஃபிரஞ்ச் உங்களிடம் கற்றுக்கொள்கின்றேன்//....ஆர்வமான மாணவர்தான்:-)
மிக்க நன்றி!
dhoool kelappunga mam.
fine me at"
http://encounter-ekambaram-ips.blogspot.com/
Thank you YUVARAJ S!
Post a Comment