Subscribe:

Pages

Saturday, January 16, 2010

பட்டாம்பூச்சிகள்......கவிதைகளாக சிறகடிக்க‌!

               ன் வண்ணங்களில் உயிர்பெற்ற இந்த பட்டாம்பூச்சிகள் ஒருசில நாட்கள் மட்டுமே என்னிடம் இருந்தது. என்னுடைய ஓவிய கண்காட்சிக்கு வந்த ஒருவர் ரொம்ப விருப்பபட்டு வாங்கிச் சென்றுவிட ஏனோ எனக்கு சற்று வருத்தமாக இருந்தது. இருந்தாலும் இன்று எங்கோ ஒரு வீட்டின் சுவற்றில் என் பெயருடன் வாழ்ந்துக் கொண்டிருப்பதை நினைத்து சந்தோஷப்பட்டு கொள்கிறேன். பட்டாம்பூச்சி எனக்கு ரொம்ப பிடிக்கும் என்பதால் மீண்டும் இதையே வரைந்து இம்முறை எனக்காக வைத்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
(இதற்கு முன் நீங்கள் பார்த்த என் பெயிண்டிங்ஸை  (70 ×50cm) விட இது சிறியது(25× 20cm))


தற்கு அழகாக‌ ஒரு கவிதை எழுத வேண்டுமென்று ஆசை. ஆனால் காதலை தவிர எனக்கு, வேறு எதை பற்றியும் கவிதையாக‌ எழுததெரியாது என்பதால்... இதை பார்க்கும் போது உங்களுக்கு ஏதாவது க‌விதை தோன்றினால்...எழுதுங்க! பட்டாம்பூச்சிக‌ள்......... கவிதைகளாக சிறகடித்து பறக்கட்டும்!

41 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

என் மனம்
என் உடல்
போலவே
நான் பயணிக்கும்
பாதையும்
வண்ணமயம்....!


சும்மா..பிரியா

படம் நல்லா வரைன்சிருக்கீங்க பிரியா...!

Chitra said...

உள்ளத்தின் மகிழ்ச்சி எண்ணங்கள் -
வண்ணத்து பூச்சியின் வண்ணங்கள். ........... super painting, Priya!

Paleo God said...

வண்ணங்கள் வேறு
வேலை ஒன்றுதான்
மகரந்தம் சூல்
கொள்ள நன்றிக்கு
தேன் குடிக்க
எப்போதும்
பயணம் மலர்களூடே
எனினும் இதழ் கூட
சேதப்படுத்த
என் கால் தூசு நீ என சொல்ல
எனக்கில்லை
வலிவும், மொழியும்..

--------------------------------------

எண்ணங்கள் ஏதுமில்லா
வண்ணங்களின் பயணம்
--------------------------------------

உறை பனி
பொழுதுகளின்
வெள்ளை வெறுமைகளில்
சட்டத்திலிட்ட வண்ணமாய்
வரைந்த
என் ஏழு வண்ணத்துபூச்சிகளும்
எனை விட்டு எங்கெங்கோ
பறக்கத்துடிக்கிறது

ஏற்கனவே நான் விற்ற
அதன் துணைகளுக்காய்
இருக்கலாம்..

-----------------------------------------
மிஸ் ஹோம் ஒர்க் மிஸ்..::))

அன்புடன் அருணா said...

just suprb!பூங்கொத்து!

அண்ணாமலையான் said...

wow gud painting.

திவ்யாஹரி said...

நிறம் வேறானாலும்
எங்கள் இனம் ஒன்று;
அதுபோல..
மதங்கள்
வேறானாலும் உங்கள்
மனம் ஒன்றாக இருக்கட்டும்!!..

Raghu said...

ஒவிய‌ம் சூப்ப‌ரா இருக்குங்க‌:)

க‌விதையா? எழுதிடுவேன், ப‌ட் ப‌டிக்க‌ற‌வ‌ங்க‌ளுக்கு எதாவ‌து ஆச்சுன்னா சொல்லுங்க‌, அட்லீஸ்ட் மாத்திரை செலவாவ‌து நான் ஏத்துக்க‌றேன்!

யாருடைய‌ வீட்டிலோ
ப‌ற‌ந்துகொண்டிருக்க‌
ந‌மக்கு பெரிய‌ இட‌ம்
கொடுத்த‌வ‌ர்
த‌ன் வீட்டில் ப‌ற‌க்க‌
நாம் ப‌ற‌க்கும் இட‌த்தை
சுருக்கிவிட்டாரே?
ஏன் மிஸ் ஏன்????

ஹி..ஹி..இனிமே க‌விதை எழுதுங்க‌ன்னு சொல்லுவீங்க‌? ம்ம்ம்..நாங்க‌ல்லாம் டெர‌ர்ல‌:)

ஜெயா said...

உள்ளத்து எண்ணங்களை வண்ணங்களாய்த் தீட்டி வண்ணத்துப்பூச்சியாய் சிறகடிக்க விட்டு கவிதை எழுதச் சொல்லி இருக்கிறீர்கள்.எனக்கும் கவிதை எழுத ஆசை தான் ஆனால் தெரியாதே... அழகான ஓவியம் வாழ்த்துக்கள் சகோதரி*****

கார்க்கிபவா said...

உன்னிலிருந்து
காதல் வருவதைப் போல
வண்னங்களிலிருந்து
வண்ணத்துப்பூச்சி!!!!


யப்பா... திட்டாதிங்கப்பா..

ஜெனோவா said...

எனக்கு மிகப் பிடித்திருக்கிறது உங்களின் இந்த ஓவியம் , மிக்க நன்றி !

Priya said...

நான் உருவம் கொடுத்த பட்டாம்பூச்சிகளுக்கு கவிதைகளால் உயிர் கொடுத்து பறக்கவிட்ட நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள் பல‌.....

பிரியமுடன்...வசந்த்.....
//என் மனம்
என் உடல்
போலவே
நான் பயணிக்கும்
பாதையும்
வண்ணமயம்....!//

வண்ணமயமாக பயனிக்கும் உங்கள் பாதையில் வெற்றிபெற வாழ்த்துக்கள்!

Chitra.......
//உள்ளத்தின் மகிழ்ச்சி எண்ணங்கள் -
வண்ணத்து பூச்சியின் வண்ணங்கள்//......

சோ சுவீட், தேன்க்ஸ் சித்ரா!

பலா பட்டறை........
முதல் கவிதை... அழகு!
ரெண்டாவது... சார்ட் & சுவீட்!!
மூன்றாவது... லவ்லி!!!

மொத்ததில் சூப்பர்ப்!!!!!!!
very Good....ஹோம் ஒர்கை சரியா பண்ணியிருக்கீங்க‌.

அன்புடன் அருணா......
பூக்களுக்கு நன்றி!

அண்ணாமலையான்.....
மிக்க நன்றி(க‌விதை ட்ரை பண்ணியிருக்கலாமே)!

திவ்யாஹரி......
அழகான க‌விதை திவ்யா... மிக்க நன்றி!

குறும்ப‌ன்.....
//யாருடைய‌ வீட்டிலோ
ப‌ற‌ந்துகொண்டிருக்க‌
ந‌மக்கு பெரிய‌ இட‌ம்
கொடுத்த‌வ‌ர்
த‌ன் வீட்டில் ப‌ற‌க்க‌
நாம் ப‌ற‌க்கும் இட‌த்தை
சுருக்கிவிட்டாரே?
ஏன் மிஸ் ஏன்????//....என்னா கவிதைப்பா இது!

//ஹி..ஹி..இனிமே க‌விதை எழுதுங்க‌ன்னு சொல்லுவீங்க‌?//......ஒரு தடவை செய்த தப்பை மறுபடியுமா, நோ நோ நோ.......

ஆனாலும், ச்சும்மா சொல்லக்கூடாது, ந‌ல்லாவே எழுதியிருக்கீங்க ரகு!

ஜெயா.......
மிக்க நன்றி!
பரவயில்லை விடுங்க, நெக்ஸ்ட் டைம் ட்ரை பண்ணிட‌லாம்...

கார்க்கி.....
//உன்னிலிருந்து
காதல் வருவதைப் போல
வண்னங்களிலிருந்து
வண்ணத்துப்பூச்சி!!!!//.....

உங்கள் கவிதையினால் இன்று காதலுடன் பறந்துகொண்டிருக்குமோ இந்த வண்ணத்துப்பூச்சிகள்.....!

ஜெனோவா......
மிக்க நன்றி!
(கவிதை எழுதாம ஏமாற்றிவிட்டீங்களே ஜோ)

கவி அழகன் said...

தூரிகை தீர்மானிபதில்லை
சித்திரம் எப்படி வரவேண்டுமென்று
ஓவியன் நினைப்பதில்லை
சித்திரம் எவனிடம் செல்லுமென்று
பெண்களின் வாழ்க்கை போல

ஜெனோவா said...

பிரியா, உங்கள் முன்னால் கவித சொல்ல பயந்தான் , வேற ஒண்ணுமில்ல ;-)
இந்தாங்க புடிங்க ..


வானவில்
மறைந்துகொண்டிருந்தது
பயந்துபோன பட்டாம்பூச்சிகள்
பறக்கத் தொடங்கின
ஏழு வண்ணங்களில் !

Priya said...

கவிக்கிழவன்......
வாவ், சூப்பரா எழுதி இருக்கீங்க!
//பெண்களின் வாழ்க்கை போல//...
கடைவரியில் ஒரு பன்ஞ்சோடு... மிக்க நன்றி!

ஜெனோவா.....
//பிரியா, உங்கள் முன்னால் கவித சொல்ல பயந்தான்//..... ம்ம்.... காமெடி:)

//வானவில்
மறைந்துகொண்டிருந்தது
பயந்துபோன பட்டாம்பூச்சிகள்
பறக்கத் தொடங்கின
ஏழு வண்ணங்களில் !//.....என்ன சொல்ல..
நான் வரைந்த படத்தை விட உங்க கவிதை அழகா இருக்கு! நன்றி ஜோ... மீண்டும் வந்து எழுதியதற்கு!

கமலேஷ் said...

உங்களின் ஓவியமே
ஒரு கவிதை போல்தான் உள்ளது...
அதற்க்கு மேலும் மெருகூட்ட கவிதை தேவை இல்லை என்றே தோன்றுகிறது....


இருந்தாலும் எனக்கு பிடித்தமான எழுத்தாளர் ராஜாசந்திரசேகரின் இரு கவிதைகள் உங்களின் ஓவியத்திற்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்...

- ராஜாசந்திரசேகர் -


வானவில்லை
அழைத்து வருகிறது
வண்ணத்துப்பூச்சி

வண்ணத்துப்பூச்சியை
அழைத்து வருகிறது
வானவில்

-------------------------
கவிதையில் உருவான
பட்டாம் பூச்சி
பூக்களுக்குப் போகாமல்
வார்த்தைகளையே
மொய்க்கிறது

கமலேஷ் said...

நீங்கள் இப்போது வரைந்திருப்பது ஆயில் பெயண்டிங்கா அல்லது வாட்டர் பெயண்டிங்கா ...உங்களின் எல்லா ஓவியங்களையும் இப்போதுதான் பார்த்தேன்...நீங்கள் எவ்வளவு நாட்களாக ஓவியம் வருகிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா...

இனியாள் said...

என் நினைவில்
நின்ற பால்யம்
ஒரு வண்ணத்து பூச்சியை
நான் துறத்துவதில் இருந்து
தான் துவங்கிருந்தது.

அழகான ஓவியம்.

சீமான்கனி said...

வான் மகள்
பூமி பெண்ணுக்கு எடுக்கும்
வளைகாப்பு திருவிழா
வானவில் என்றால்...
இவள்
தூரிகை துளிகள்
பிரசவித்த வண்ணத்து பூச்சிகள்
வளைய வருகிறது
இன்னொரு வானவில்லாய்...

உங்கள் ஓவியம் எல்லாம் அழகோ அழகு...உங்கள் உணர்வுகள் ஓவியம் ரெம்ப பிடிச்சு இருக்கு....ரசித்தேன்...
எனக்கு சுட்டு போட்டாலும் வராது

Priya said...

கமலேஷ்........

//உங்களின் ஓவியமே
ஒரு கவிதை போல்தான் உள்ளது...//......
இதைவிட என் ஓவியத்திற்கு என்ன பாராட்டு வேண்டும்,Thank you so.......much!

இரண்டு க‌விதையுமே அருமையாக இருக்கிறது, நன்றி!

//நீங்கள் இப்போது வரைந்திருப்பது ஆயில் பெயண்டிங்கா அல்லது வாட்டர் பெயண்டிங்கா//......
ஆயில் பெயிண்டிங்குதான்.

//நீங்கள் எவ்வளவு நாட்களாக ஓவியம் வருகிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா...//.... நிச்சயமா, நான் பென்சில் பிடித்து எழுத‌(கிறுக்க)ஆரம்பித்தப்போதே வரைவதும் தொடங்கியதாம்....அம்மா சொன்னதுதான்!சோ அன்றிலிருந்து இன்றுவரை தொடர்கிறது.



இனியாள்.....

//என் நினைவில்
நின்ற பால்யம்
ஒரு வண்ணத்து பூச்சியை
நான் துறத்துவதில் இருந்து
தான் துவங்கிருந்தது.//.....

உண்மைதான்... ரொம்ப‌ அழ‌கா எழுதி இருக்கீங்க‌, ந‌ன்றி!


seemangani......

சூப்பர், எப்படி இப்படி எல்லாம் எழுதுறிங்க!?

//தூரிகை துளிகள்
பிரசவித்த வண்ணத்து பூச்சிகள்//....
உண்மையிலே, ஒரு நல்ல கலைஞனுக்கு அவன் படைப்புகள் எல்லாம் அவன் பிரசவிக்கும் குழந்தைகள்தான்!
மிக்க நன்றி!

Anonymous said...

உன் எண்ணங்கள் வரும் போழுது
என் மனமும் பறக்கிறது
இந்த பட்டாம் பூச்சிகளை போல..

Priya said...

Dear friend....
அழகாதானே கவிதை எழுதி இருக்கீங்க... கூடவே உங்க பெயரும் இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்!?!

வேலன். said...

படம் அருமையாக இருக்கு ப்ரியா மேடம்...

வாழ்க வளமுடன்,
வேலன்.

கமலேஷ் said...

நீங்கள் எந்த மாதிரி ஷீட்ல படங்களை வருவீர்கள் chart போலவா அல்லது அதற்கென்று எதுவும் special sheet உள்ளதா... உங்களின் இயற்க்கை படங்கள் மிகவும் அழகானதாக உள்ளது. நீங்கள் ஓவியத்தை ஏதேனும் பள்ளியில் படித்தீர்களா...இல்லை எல்லாம் அனுபவம் மட்டுமாகவா...எனக்கு உங்களை போல வரைய வேண்டும் என்ற ஆவல் உள்ளது. பென்சில் shading சுமாராக செய்வேன்..ஆனால் வாட்டர் பெயண்டிங்கோ அல்லது போஸ்டல் கலரிங்கோ முயற்சி செய்யும் போது பேப்பர் மொத்தமாக ஊறி விடுகிறது அல்லது மீண்டும் மீண்டும் brush பயன் படுத்தும் போது அந்த இடம் பொத்தலாகி விடுகிறது. உங்களால் இயலும் என்றால் எனக்கு சின்ன சின்ன டிப்ஸ் கொடுக்க முடியுமா...

அன்புடன் மலிக்கா said...

பிரியா நீ படைத்துள்ளாய்
அழகிய ஓவியம்
அதில்
வர்ணங்களைக்கொண்டு
செய்துள்ளாய் காவியம்..

வர்ணமே வண்ணமே
வா வா
என்
வாசல்தேடி வா வா

வண்ணங்களைக்கொண்டு
என் எண்ணங்களுக்கு
வார்த்தைகள் கோக்க
வா வா

பிரியா வரைந்த
ப்ரியமான
பட்டாம்பூச்சியே

மலிக்கா வென்னும்
மல்லிகை
பாசமாய் அழைக்குது
வா வா

என் மேனியின்
வாசம் பிரவேசிக்க
வா வா...

அழகன் said...
This comment has been removed by the author.
அழகன் said...

அழகான
எண்ணங்களில்
உண்டான வண்ணங்களை
தொட்டு செல்லும்
வண்ணத்துப்பூச்சிகளே
உங்களையும்
தொடாமல் ரசிக்க ஆசைதான் - நீங்கள்
தொலைந்து போகாமல் தொடர்ந்து வந்தால்........

Priya said...

வேலன்......
மிக்க நன்றி!
(உங்க பொன்னு ப்ரியா நல்லா இருக்காங்களா?)

கமலேஷ்.....
//உங்களால் இயலும் என்றால் எனக்கு சின்ன சின்ன டிப்ஸ் கொடுக்க முடியுமா...//........நிச்சயமா!
Details மெயில் பண்ணுறேன்.

அன்புடன் மலிக்கா.....
வாவ்... அசத்தியிருக்கீங்க!
அழகான ஒரு தமிழ் சினிமா பாடல் மாதிரியே இருக்கு!!!

Priya said...

அழகன்......

//உங்களையும்
தொடாமல் ரசிக்க ஆசைதான்//......
தொட்டு ரசிக்காமல்
தொடாமல் ரசிக்க வைப்பதுதான்
இந்த பட்டாம்பூச்சியின் அழகு!

//நீங்கள்
தொலைந்து போகாமல் தொடர்ந்து வந்தால்........//.......
இது தொலைந்துபோகும்
பட்டாம்பூச்சி அல்ல‌
தொடர்ந்துவர விரும்பும்
பட்டாம்பூச்சி!

தொடர்ந்து உங்க கமெண்ட் வேணும்,வருவீங்களா?

நேசமித்ரன் said...

சிறகுகளாய் பூக்க முடிகிறத் தாவரம் பூக்களை அனுப்பிக்கொண்டிருக்கிறது கிளைதோறும்

:)

Priya said...

நேசமித்ரன்.....
மிக்க நன்றி!

தேவதை said...

Hello, i am navaneethan from 'DEVATHAI' which is a tamil
bi-monthly magazine.
In our magazine, we have a separate page for lady
bloggers. we planned to publish your blog in this issue. i want just
your o.k. and a recent photograph.
my mobile no is. 9500019222
thanks
Navaneethan

goma said...

வண்ணத்துபூச்சியைப்
படைக்கும் போது
ஆண்டவனுக்கு சோம்பலானதோ..
ஒரு பக்க இறக்கையை
மட்டும் படைத்து விட்டு ,
அடுத்த இறக்கைக்கு
நகல் எடுத்து விட்டானோ.!!!
------------
இது என் பதிவிலிருந்து கிள்ளி எடுத்துத் தந்திருக்கிறேன்.
ஓவியம் அற்புதம்

Priya said...

henry....
Thanks a lot for a kind information!

devathai....
Such a pleasure.....thanks!!!

goma.....
வித்தியாசமான கற்பனை... கவிதை அழகு!!! நன்றி!

priyamudanprabu said...

நல்ல படம் கவிதை முயற்சிக்கலாம்

Priya said...

பிரியமுடன் பிரபு......
நன்றி,முயற்சி பண்ணுறேன் பிரபு!

Sakthi said...

இத்தனை நாள் இந்த பக்கம் வராது காலம் தாழ்த்திவிட்டேனே..

வசந்த் எப்பவும் அருமைய எழுதுவாரு..சோ நெக்ஸ்ட்..!

//சித்ரா
உள்ளத்தின் மகிழ்ச்சி எண்ணங்கள் -
வண்ணத்து பூச்சியின் வண்ணங்கள்//
அக்கா ரெண்டே வரியில மனச தொட்டுட்டாங்க

பலா பட்டறை ஒன்னுக்கு மூனா எழுதி அசத்தி இருக்காரு
அதுவும் எனக்கு ரொம்ப பிடிச்ச வரிகள்..
எண்ணங்கள் ஏதுமில்லா
வண்ணங்களின் பயணம்

திவ்யாஹரி
நிறம் வேறானாலும்
எங்கள் இனம் ஒன்று;
அதுபோல..
மதங்கள்
வேறானாலும் உங்கள்
மனம் ஒன்றாக இருக்கட்டும்!!..//

திவ்யா சொல்லுறது நல்ல கருத்து படிக்க மட்டுமில்ல பின்தொடரகூடதான்

குறும்ப‌ன் உண்மையில நீங்க குரும்புக்கார்தான் போங்க

ஜெயா உண்மைய சொல்லிட்டாங்க

//கார்க்கி
உன்னிலிருந்து
காதல் வருவதைப் போல
வண்னங்களிலிருந்து
வண்ணத்துப்பூச்சி!!!!//

சண்டகாரர்னு நெனச்சேன் கவிதேல்லாம் எழுதுறாரா அருமை

//கவிக்கிழவன்
தூரிகை தீர்மானிபதில்லை
சித்திரம் எப்படி வரவேண்டுமென்று
ஓவியன் நினைப்பதில்லை
சித்திரம் எவனிடம் செல்லுமென்று
பெண்களின் வாழ்க்கை போல//

நீங்க இன்னொரு பாரதின்னு நெனைக்குறேன்
ஜெனோவா என்னவோ சொல்ல வரிங்க ஆனா இந்த மரமண்டைக்குத்தான் புரிய மாட்டேங்குது

//கமலேஷ்
கவிதையில் உருவான
பட்டாம் பூச்சி
பூக்களுக்குப் போகாமல்
வார்த்தைகளையே
மொய்க்கிறது//
சூப்பர் அதுவும் இந்த வரிகள்

//இனியாள்
என் நினைவில்
நின்ற பால்யம்
ஒரு வண்ணத்து பூச்சியை
நான் துறத்துவதில் இருந்து
தான் துவங்கிருந்தது. //

எனக்கும் தான்

//சீமங்கனி
வான் மகள்
பூமி பெண்ணுக்கு எடுக்கும்
வளைகாப்பு திருவிழா
வானவில் என்றால்...
இவள்
தூரிகை துளிகள்
பிரசவித்த வண்ணத்து பூச்சிகள்
வளைய வருகிறது
இன்னொரு வானவில்லாய்...//

இப்படீல்லாம் யோசிக்க எனக்கு வராது

//மலிக்கா
பிரியா நீ படைத்துள்ளாய்
அழகிய ஓவியம்
அதில்
வர்ணங்களைக்கொண்டு
செய்துள்ளாய் காவியம்..

வர்ணமே வண்ணமே
வா வா
என்
வாசல்தேடி வா வா

வண்ணங்களைக்கொண்டு
என் எண்ணங்களுக்கு
வார்த்தைகள் கோக்க
வா வா

பிரியா வரைந்த
ப்ரியமான
பட்டாம்பூச்சியே

மலிக்கா வென்னும்
மல்லிகை
பாசமாய் அழைக்குது
வா வா

என் மேனியின்
வாசம் பிரவேசிக்க
வா வா...//

நான் ரொம்ப சின்ன பையன்,
இத பத்தி கருத்து சொல்லுற அளவுக்கு என் மண்டையில ஒன்னும் இல்ல..

//அழகன்
அழகான
எண்ணங்களில்
உண்டான வண்ணங்களை
தொட்டு செல்லும்
வண்ணத்துப்பூச்சிகளே
உங்களையும்
தொடாமல் ரசிக்க ஆசைதான் - நீங்கள்
தொலைந்து போகாமல் தொடர்ந்து வந்தால்........//

கவிதையும் அழகுதான்..

//நேசமித்ரன்
சிறகுகளாய்
பூக்க முடிகிறத்
தாவரம் பூக்களை
அனுப்பிக்கொண்டிருக்கிறது
கிளைதோறும் //

வாழ்த்துக்கள்

//henry J said...

தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click தேரே//

இவரு இதையே ஒரு தொழில பாக்குறாரு போல..

//goma
வண்ணத்துபூச்சியைப்
படைக்கும் போது
ஆண்டவனுக்கு சோம்பலானதோ..
ஒரு பக்க இறக்கையை
மட்டும் படைத்து விட்டு ,
அடுத்த இறக்கைக்கு
நகல் எடுத்து விட்டானோ.!!!//

கில்லுனதே அள்ளி கொடுத்தது போல் இருக்கிறது

நானும் களத்துல இறங்குறேன்..
சண்டைக்கு வரவங்க பாத்து சின்னப்பையன் பொறுமையா தாக்குங்க..!
இதோ என்னுடையது..!

வண்ணம் யாவும் - உன்
மின்னும் எண்ணம்

வந்து போகும் - என்
எண்ணம் யாவும்

இன்னும் இன்னும் - உன்
வண்ணஎண்ணம் வேண்டும்

மீண்டும் மீண்டும் - நான்
கவிதைபின்ன வேண்டும்

யார இருந்தாலும் பேசி தீத்துக்கலாம், கல்லால அடிக்குற வேலை எல்லாம் வேண்டாம் சொல்லிபுட்டேன்..!

Priya said...

//இத்தனை நாள் இந்த பக்கம் வராது காலம் தாழ்த்திவிட்டேனே..//
அதான் இப்ப‌ வ‌ந்துட்டீங்க‌ளே சோ, நோ ஃபீலிங்ஸ்!

//இன்னும் இன்னும் - உன்
வண்ணஎண்ணம் வேண்டும்

மீண்டும் மீண்டும் - நான்
கவிதைபின்ன வேண்டும்//........உங்களை எல்லாம் கவிதை எழுதவைக்கவே நிச்சயம் வரும் என் வண்ணங்கள் விரைவில்....

எல்லோருடைய கவிதைகளை ரசித்து எழுதிய உங்களுக்கு மிக்க நன்றி சக்தி.

பனித்துளி சங்கர் said...

ஓவியங்கள் காவியம் படைத்திருக்கின்றன . ஆனால் இங்கு ஒரு ஓவியம் கவிதைகள் படைத்திருக்கிறது .
சிறகுகள் இன்றியே பறக்கிறது இதயம் . இந்த தூரிகை வரைந்த வண்ணத்துப்பூச்சிகளைப் பார்க்கும்பொழுதுகளில் எல்லாம் .

Priya said...

நைஸ் ♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ மிக்க நன்றி!

Sivakumar said...

பட்டாம் பூச்சிகள் என் மனதை இன்று பதம் பார்த்துவிட்டன. அழகான ஓவியம். சரி, ஓவிய கண்காட்சியா? எங்கே எப்போ? நாங்கல்லாம் வரலாமா?

கவிதை என்று கீழே கிறுக்கியிருக்கிறேன். பாருங்கள்!

----

பல கோடி வண்ணங்களை தூவும் உங்களுக்கு
ஒரே எண்ணத்தில் மனம்...

தவறிப் போய் கறுப்பு வெள்ளையாய்
இரண்டே வண்ணங்கள் மனிதனுக்கு

ஹ்ம்ம்... பல கோடிக்கும் மேல்
ஒவ்வாத எண்ணத்தில் தீராத இன வெறியுடன் மனம்...

யார் சொன்னது உங்களுக்கெல்லாம்
ஆறாவதறிவு இல்லை என்று...

என்னை பொறுத்த வரை மனிதனுக்கு
ஐந்தோடு நிறுத்தியிருக்கலாம்...

----

Priya said...

கவிதைக்கு மிக்க நன்றி சிவா!
உங்க கவிதை ஆழ்ந்த கருத்தைக் கொண்டு இருக்கு. ரொம்பவே நல்லா இருக்கு!

இங்கு(Var,France)எங்க ஊரில்தான்!இரண்டு வருடம் முன்னால மாதம் ஒரு முறை ஓவிய கண்காட்சி செய்து வந்தேன், ஆனா இப்ப கொஞ்ச நாளா வரைவதே இல்ல.அதனால ஓவிய கண்காட்சியும் செய்வதில்ல.

Post a Comment