Subscribe:

Pages

Monday, August 5, 2013

முதல் ஸ்பரிசம்...!


              புகைப்படங்களை பார்த்து வரைவது என்பது எப்போதுமே சுவாரஸியமாகத்தான் இருக்கிறது. அதிலும் நம்மோட படத்தை பார்த்து நாமே வரையும் போது இன்னும் சுவாரஸியம் கூடுகிறது. என் நிச்சயத்தார்த்தத்தின் போது என்னவர் என் கைபிடித்து மோதிரம் போடும் புகைப்படம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.., அதுவே இம்முறை என்னை வரையத்தூண்டியது. பொதுவாக என்னை கவரும் எதையும் நான் நேசித்தே வரைகிறேன்.... அதேப்போல் இதையும் நான் மிகவும் ரசித்து நேசித்தே வரைந்திருக்கிறேன்.


வழக்கம் போல் A4 தாளில்....  HB - 6B பென்சிலால் வரைந்திருக்கிறேன். மொத்தமாக வரைந்து முடிக்க 5 மணி நேரம் ஆனது. முன்பே பதிவுகளில் சொல்லி இருப்பதை போல பெயிண்டிங்ஸை போல் அல்ல பென்சில் ஸ்கெட்ச், வரைவது மிக சுலபமாகவே இருக்கிறது. அதிக நேரம் கூட‌ தேவைப்படுவதில்லை.
 
தேவைப்படுவது எல்லாம் ஒரு Paper, Pencil, Eraser ...  கொஞ்சம் பொறுமை மட்டுமே.




14 comments:

Avargal Unmaigal said...

உங்களது பொறுமைக்கும் அழகான ஒவியத்திற்கும் பாராட்டுக்கள்

Yaathoramani.blogspot.com said...

மிக மிக அருமை
இவ்வளவு நேர்த்தியாக வரைய
பொறுமை மட்டுமல்ல திறமையும் நிச்சயம் வேண்டும்
வாழ்த்துக்கள்

r.v.saravanan said...

தேவைப்படுவது எல்லாம் ஒரு Paper, Pencil, Eraser ... கொஞ்சம் பொறுமை மட்டுமே.
நேர்த்தியாக வரைய கூடிய திறமை இதையும் சேர்த்து கொள்ளுங்கள் பிரியா

வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் said...

அழகாய் வரைந்திருக்கிறீர்கள்.

G.AruljothiKarikalan said...

ரொம்ப அருமை.....

KParthasarathi said...

மிகவும் தத்ரூபமாக உள்ளது. தமிழில் அழகாக எழுதுவதில்தான் தேர்ச்சி பெற்றவர் என்று எண்ணி இருந்தேன்.வரைவதிலும் கூடவா?பேஷ் பேஷ்.

Priya said...

தங்களது பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி Avargal Unmaigal!

வாழ்த்துக்களுக்கு நன்றி Ramani S சார்!

நன்றி ராமலக்ஷ்மி மேடம்!

நன்றி சரவணன் சார், நீங்க சொல்வதைபோல அதையும் சேர்த்துக்கொள்கிறேன்:‍)

நன்றி சே.குமார்!

நன்றி G.AruljothiKarikalan!

மிக்க நன்றி KParthasarathi!

Mahi said...

தத்ரூபமா வரைஞ்சிருக்கீங்க ப்ரியா! சில ஸ்பெஷல் நினைவுகள் வாழும் காலம் முழுவதும் ப்ரெஷ்ஷாக நினைவிருக்கும், இதுவும் அப்படி ஒரு நாளல்லவா? அதான் இவ்வளவு அழகாக வந்திருக்கு! :)

Sowmya said...

இன்ப மயமான நாளை மனதில் நினைத்து கொண்டே வரைந்ததால் அழகோவியம் ஆக உள்ளது

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_18.html) சென்று பார்க்கவும்... நன்றி...

r.v.saravanan said...

வணக்கம் வலைச்சரத்தில் தங்கள் தளம் பற்றி குறிப்பிட்டுள்ளேன்
நேரமிருக்கும் போது பாருங்கள் நன்றி

ஆர்.வி.சரவணன்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

திரு வை.கோபாலகிருஷ்ணன் அவரது தளத்தில் http://gopu1949.blogspot.in/2015/07/33_3.html என்ற முகவரியில் உங்களது தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். தங்களது தளத்தினைக் கண்டேன். பாராட்டுக்கள்.
http://www.ponnibuddha.blogspot.com/
http://www.drbjambulingam.blogspot.com/

yathavan64@gmail.com said...

அன்புடையீர்! வணக்கம்!
அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (03/07/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
இணைப்பு: http://gopu1949.blogspot.in/

நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE

கவிநா... said...

Romba azhaka varainju irukkeenga priya.... arumai...

Post a Comment