Subscribe:

Pages

Thursday, January 5, 2012

காதலே கலை என்பதாலா.....

      சிலை முழுவதும் ப‌ரவி கிடக்கும் காதல்... சுற்றிலும் நிரம்பி வழியும் பார்வையாளர்கள்...க்ளிக் க்ளிக் என தொடர்ந்து எழும் சத்தத்தின் நடுவிலும் ஃப்ளாஷின் வெளிச்சத்திலும் மிக கம்பீரமாய் வீற்றிருக்கிறது - Psyche Revived By Cupid's Kiss எனும் பெயர்க்கொண்ட அச்சிலை!

அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருக்கும்  அந்த சிலையின் உள்ளே ஒளிந்திருக்கும்  கதை மிக சுவாரஸியமானது. அழகான கதைக்கு உயிர் கொடுத்து கலையால் கல்லிலும் காதலை பேசவைத்த அற்புதமான ஐரோப்பிய கலைஞர்...Antonio Canova(1757‒1822). சில மாதங்களுக்கு முன்பு லூவர் மியூசியத்திற்கு (பாரிஸ், பிரான்ஸ்) சென்ற போது இந்த‌ சிலையின் அழகில் மனம் ஈர்க்கப்பட்டு புகைப்படம்  எடுத்துவந்தேன். அவற்றை பார்க்கும் போதெல்லாம் சுவாரஸியமாக தெரிய... இதையே பென்சிலில் வரைந்து பார்த்தால் என்ன என தோன்ற.. முழுவதுமாக 6 மணி நேரத்திற்கு பின் நான் விரும்பியபடியே வரைந்துமுடித்தேன்!


கலையின் மீதுள்ள காதலா அல்லது காதலே கலை என்பதாலா ..... எது என்னை வரைய தூண்டியது என தெரியவில்லை... ஆனால் நான் மிகவும் ரசித்து அனுபவித்து வரைந்தது இது!!!


உங்கள் ஒவ்வொருவரின் உற்சாகமான ஊக்கங்களால் இதுவரை தொடரும் எனது கலைப்பயணம் இனியும் தொடர ஃபேஸ் புக்கில் என் ஓவியங்களுக்கென Bp-Art-Gallery ஒரு இடத்தை ஏற்படுத்தி உள்ளேன். பதிவுகளுக்கு தொடர்ந்து பின்னூட்டம் அளித்துவரும் உங்கள் அனைவரது ஆதரவும் அங்கேயும் தொடர அன்புடன் வேண்டுகிறேன்.



அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!


 

30 comments:

Mahi said...

கலைப்பயணம் இனிதே தொடர வாழ்த்துக்கள் ப்ரியா! ஓவியம் அழகாய் இருக்கிறது!:)

Yaathoramani.blogspot.com said...

எப்படித்தான் திறமையாக எழுதினாலும் உணர்வினை
மிகச் சிறப்பாக ஒரு ஓவியமும் சிறபமும் பார்பவரிடம்
ஏற்படுத்திப் போகும் உடனடி அதீதத் தாக்கத்தை
நிச்சயம் எழுத்து ஏற்படுத்த முடியாது
கலை மனமும் திறமையும் ஆர்வமும் உங்களுக்கு
ஆண்டவனால் அதிகமாக அருளப்பட்டிருக்கிறது
மிக மிக அருமையாக சிற்பத்தை ஓவியமாக்கி இருக்கிறீர்கள்
தங்கள் பதிவைத் தொடர்வதில் பெருமிதம் கொள்கிறேன்
தொடர வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

மிக அருமை.

/Bp-Art-Gallery /

நல்லதொரு தொடக்கம்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

r.v.saravanan said...

ஓவியம் அருமை ப்ரியா

கலைப்பயணம் தொடர வாழ்த்துக்கள்

புத்தாண்டு வாழ்த்துக்கள்

Menaga Sathia said...

ஒவியம் மிக அழகா இருக்கு ப்ரியா,பாராட்ட வார்த்தையில்லை...கலைப்பயணம் இனிதே தொடர வாழ்த்துக்கள்!!

Raghu said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் ப்ரியா!

ஓவியம் படு துல்லியம்! ஓரமாக இருக்கும் N உட்பட எல்லாமே பக்காவா வந்திருக்கு. 6 மணி நேரம்?! உங்களுக்கு ஆனாலும் பொறுமை அதிகம்தான் ப்ரியா :)

ஹேமா said...

மிக மிக அழகு.அற்புதமான ஓவியம்.உங்கள் கைவண்ணம் அதை ரசித்து வடித்த விதமும் அற்புதம் ப்ரியா.மன்ம் நிறைந்த வாழ்த்துகள் !

puduvaisiva said...

Very nice work
Thanks and wish you happy new year sorry for the delay :-)

KParthasarathi said...

மிகவும் நேர்த்தியாக வரைந்து அந்த மென் உணர்ச்சிகளை வெளியே கொண்டு வந்து உள்ளீர்கள்.சபாஷ் !!

avainaayagan said...

அருமையான ஓவியம் அழகாக வரைந்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

ஜெய்லானி said...

//கலையின் மீதுள்ள காதலா அல்லது காதலே கலை என்பதாலா ..... எது என்னை வரைய தூண்டியது என தெரியவில்லை... ஆனால் நான் மிகவும் ரசித்து அனுபவித்து வரைந்தது இது!!!//


முன்பெல்லாம் பென்சில் ஆர்ட் என்றால் மாருதி , அரஸ் ,ஜெ இவர்கள்தான் நினைவுக்கு வருவார்கள் உங்கள் ஆர்ட்களை பார்த்துக்கொண்டு வரும் போது அங்கே மொத்த உருவமா நீங்கதான் தெரியுறீங்க bx :-))

வாழ்த்துக்கள் :-)

Priya said...

வாழ்த்துக்களுக்கு நன்றி மகி!

//கலை மனமும் திறமையும் ஆர்வமும் உங்களுக்கு
ஆண்டவனால் அதிகமாக அருளப்பட்டிருக்கிறது// த‌ங்க‌ளின் பாராட்டுக்க‌ளுக்கும் வாழ்த்துக்க‌ளுக்கு ந‌ன்றி Ramani சார்!


தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி மேடம்!

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சரவணன் சார், தங்களின் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் பல!

வாங்க மேனகா, வாழ்த்துக்களுக்கு நன்றி!

Priya said...

ஹாய் ரகு புத்தாண்டு வாழ்த்துக்கள்... பொறுமை ரொம்ப அவசியம் இல்லையா.... அதிலும் வரைய நிச்சயம் தேவை...;‍-)

தங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்களுக்கு நன்றி ஹேமா!

நன்றி தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் புதவை சிவா!

தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி KParthasarathi!

தங்கள் வாழ்த்துக்களுக்கு ந‌ன்றி avainaayagan!

வாங்க ஜெய்லானி, நலமா... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
//முன்பெல்லாம் பென்சில் ஆர்ட் என்றால் மாருதி , அரஸ் ,ஜெ இவர்கள்தான் நினைவுக்கு வருவார்கள் உங்கள் ஆர்ட்களை பார்த்துக்கொண்டு வரும் போது அங்கே மொத்த உருவமா நீங்கதான் தெரியுறீங்க bx :‍))// ... இதெல்லாம் கொஞ்சம் அதிகம்ங்க... நான் இப்போதுதான் நிறைய கற்றுக்கொண்டு வருகிறேன்:‍)

Tamilthotil said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் ப்ரியா...
இந்தாண்டின் முதல் பதிவு அருமை.
எத்தனைத் தான் எழுதினாலும் ஓவியமும்,சிற்பமும் பார்பவரிடம் ஏற்படுத்திப் போகும் உடனடி அதீதத் தாக்கத்தை நிச்சயம் எழுத்து ஏற்படுத்த முடியாது. இதையே நானும் வழி மொழிகிறேன்.
எழுத்துக்கு மொழி அவசியம் தேவைப்படுகிறது. ஓவியமோ உலக மொழி அதில் மிகுந்த பரிட்சயம் உள்ள நீங்கள் பார்க்கும் எல்லோரையும் உங்கள் கலையால் மொழியைத் தாண்டி ஈர்த்து விடுகிறீர்கள்.
உண்மையில் 6 மணி நேரமும் ஓவியத்தோடு உறவாடுவதால் அந்த தருணங்கள் ஒரு ஓவியருக்கு அற்புதமானவை.அந்த காலம் செல்வதே தெரியாது.வாழ்வில் சிலப் பேருக்கே இந்த அற்புதம் நிகழ்கிறது.
ப்ரியா அந்த தருணங்கள் உங்களின் வாழ்வில் நீள இந்த நண்பனின் வாழ்த்துக்கள்

G.AruljothiKarikalan said...

வார்த்தைகளை விட ஒவியங்கள் நிரைய்ய பெசுகிறது.... ரொம்ப அழக இருக்கு ப்ரியா...

Chitra said...

The best!!!! AWESOME!!!!!

You go, girl!

Priya said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் Tamilraja k!
இந்த நண்பனின் அன்பான வாழ்த்துக்களால் நிச்சயம் அந்த தருணங்கள் என் வாழ்வில் நீளும்... நன்றி!

G.AruljothiKarikalan.... மிக்க நன்றி!

Thank u Chitra:-)

அன்புடன் நான் said...

ஓவியம் சிறப்பு மேலும் புகழ் பெற வாழ்த்துக்கள்.

தங்களுக்கும் குடு்ம்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

மனோ சாமிநாதன் said...

மிக அழகாக வரைந்திருக்கிறீர்கள் ப்ரியா! அந்த light and shade தீற்ற‌ல்கள் மிகப் பிரமாதம்!!

Sowmya said...

வாவ்.... நீங்க வரைந்த படத்தை பார்க்கும் போதெல்லாம் நான் சொல்லும் முதல் வார்த்தை.
சூப்பர் பிரியா வெரி nice .

பட்டிகாட்டு தம்பி said...

மிக அழகாக வரைந்திருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.

Priya said...

@சி.கருணாகரசு
@மனோ சாமிநாதன்
@Sowmya
@பட்டிகாட்டு தம்பி.......மிக்க நன்றி!

மனோ சாமிநாதன் said...

உங்களுக்கு என் இன்றைய பதிவில் விருதினை அளித்துள்ளேன். வந்து பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன்!

Avargal Unmaigal said...

ஒவியம் மிக அழகா இருக்கு ப்ரியா பாராட்ட வார்த்தையில்லை

திண்டுக்கல் தனபாலன் said...

மிக அருமை ! வாழ்த்துக்கள் !

வருணன் said...

கவிதை போன்றிருக்கிறது இவ்வோவியம். வெறும் பென்சிலால் இத்துணை அழகிய படம்- ஆச்சரியம் தான் தோழி. அதிலும் முப்பரிமாண ஆழத்தின் துல்லியம் இன்னும் மெருகு சேர்க்கிறது.

"தாரிஸன் " said...

ungala mathiri alungala santhika neridum pohuthan naanellam yaarunnu puriyuthu!

thiramaikku vannakkam!

அப்பாதுரை said...

மிக அழகாகச் சித்திரம் தீட்டியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

கலாகுமரன் said...

மிக அழகான சித்திரங்கள். வரைதல் முறைகளையும் விவரித்துள்ளீர்கள் வலைச்சரத்தின் மூலமாக உங்கள் பதிவுகளை அறிந்து கொண்டேன் பாராட்டுக்கள்.

Priya said...

நன்றி தாரிஸன்!

நன்றி அப்பாதுரை!

ந‌ன்றி கலாகுமரன்!

Post a Comment