சிவந்தப் பாறைகள்... பசுமையான தாவரம்... நீலக்கடல்... பொன்னிற மணற்பரப்பு என மொத்த அழகினையும் தன்னுள் கொண்டு திகழும் இப்பகுதியின் பெயர் La Corniche de l'Estérel.
எங்கள் மாவட்டத்திற்கு வரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளின் பொழுதுப்போக்கு இடமாக திகழ்கிறது இந்த கடற்கரை. சனி ஞாயிறுகளில் பரப்பரப்பாக காணப்படும் இப்பகுதி விடுமுறை நாட்களானால் திருவிழா கோலம் கொள்கிறது. பள்ளி ஆண்டு விடுமுறை தொடங்க இன்னும் இரண்டு மாதம் இருக்கும் நிலையில் சென்ற மாதம் விடப்பட்ட இரண்டு வார ஈஸ்டர் விடுமுறையின் போதே இங்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. ஓங்கி உயர்ந்திருக்கும் சிவந்த மலை பாறைகள்... Mediterranean கடல்; நடுவே பயணிக்கும் சாலை என இந்த littoral zone க்கு La corniche d'or(The Golden Cornice) என்னும் சிறப்பு பெயரும் உண்டு. வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதையில் வாகனங்களை நிறுத்தி கடலினையும் கடல் சார்ந்த பகுதிகளையும் பார்வையிட வசதியாக ஆங்காங்கே கார் பார்க்கிங் வசதி செய்யப்பட்டிருக்கிறது. அதேப்போல் கடலில் குளிப்பவர்களுக்காக சில பகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தாலும் பெரும்பாலான பாதுக்காப்பற்ற பகுதிகளெல்லாம் ஹெலிக்காப்டரில் இருந்து கண்காணிக்கப்படுகிறது.
சிவந்த பாறைகளில் மோதி சிதறித் தெறிக்கும் நீரின் அழகை காணும் பொழுது விழிகள் இமைக்க மறுந்துபோய் விடுகிறது. இந்த அழகினை ரசிக்க ஆரம்பித்த பிறகு அதிலிருந்து பார்வையை திருப்ப முடியாமல் மனம் அதிலே லயித்துவிடுகிறது; தங்கபோல் ஜொலிக்கும் மணல், வெண்பஞ்சு நுரைகளை அள்ளிவரும் அலைகள், பாறைகளை தொட்டு எழும்பும் நீரோசை, வட்டமிடும் பறவைகள், சிரிக்கும் பூக்கள், மிதமான வெயில், வருடும் காற்று, அனைத்தையும் மறந்து சந்தோஷத்துடன் குதுக்கலிக்கும் மக்கள், நிமிடத்திற்கு நிமிடம் மாறுகின்ற காட்சிகள் என ஒவ்வொன்றும் கவிதை சொல்கிறது...
கடலைகளின் தாலாட்டில் கரைந்துபோன
காலடி தடங்களை தேடி தேடி
தொலைந்துப்போனது
என் மனது!
கொட்டி கிடந்த ரம்மியங்களை
ஓடி ஓடி படம்பிடித்தது
என் ரசனை!
ரம்மியங்களை விவரித்து சொல்லும் கீழ் காணும் படங்கள் அனைத்தும் சென்ற ஞாயிறு அன்று என் கேமிராவில் க்ளிக்கியது.
காணும் காட்சியை ஓவியமாக்குபவர்...
வட்டமிடும் கடற்பறவை...
18 comments:
கடைசிபடம் க்ளாஸா இருக்கு ப்ரியா! :)
என்னவருக்கும் கடல்-கடல்சார்ந்த இடங்கள்னா உயிர்! அழகா இருக்கு பீச்!
nice pictures, especially the last one. like it =))
வாவ்! அழகான படங்கள் ப்ரியா!
முதல் படமும் ஏழாவது படமும் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. :)
ஆனா, கடைசிப் படத்தை தவிர மற்றவைகளை பெரியதாக்கி பார்க்க முடியல ப்ரியா!
பதிவின் மூலமும் படங்கள் மூலமும்
எங்களையும் சுற்றுலா அழைத்துச் சென்றமைக்கு
மிக்க நன்றி
கடைசி படம் மிக அருமை
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்
கடைசி படம் சூப்பர் ப்ரியா எப்படி இப்படிலாம் யோசிச்சு எடுக்கறீங்க கலக்கல்
அனைத்து படங்களும் மிக அழகு
பகிர்ந்தமைக்கு நன்றி
ஒரு ஒரு புகைப்படமும் கவிதை..
so beautiful
>>>கொட்டி கிடந்த ரம்மியங்களை
ஓடி ஓடி படம்பிடித்தது
என் ரசனை!
அழகியல் கவிதை வரிகள்
கடைசி ஃபோட்டோ நீங்க எதேச்சையா தான் எடுத்தீங்க..ஆனா அது டாப்பா அமைஞ்சுடுச்சு
ungalin ezhuthum padangalum miga arumai meendum oru murai kaasu kodukkamal oor sutriya anubavam... adhilum andha kadaisi click miga miga arumai
VERY NICE PICTURES ப்ரியா வாழ்த்துக்கள்
உங்கள் படங்கள் அனைத்தும் அழகானவை!வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்களவருக்கும்!
புகைப்படங்கள் கொள்ளை அழகு ப்ரியா!!
அனைத்து புகைபடங்களுமே அருமை..
இந்த வாரம் தான் என்னுடைய தோழி ஒருத்தி Facebookயிக் அவள் சென்றுவந்த இந்த இடத்தினை போட்டோ போட்டு இருந்தாள்...
அழகான இடம்...
புகைப்படங்களும், வர்ணனைகளும் அருமை!
Nice Place...
ரசனையான லொகேஷன்/படங்கள் ப்ரியா!
இருக்கற ஜாப் டென்ஷனுக்கு இந்த மாதிரி இடத்துக்கு போய் நாலு நாள் தங்கிட்டு வரணும் போலயிருக்கு :(
இயந்திர தரமான வாழ்கையும் இயற்கையை பாதுகாக்கும் விழிப்புணர்வு
இன்மையும் - கடந்து செல்லும் எங்களுக்கு
உங்கள் ஒவ்வொறு படமும் பாடமே !
கடைசி படம் கவிதை வரிகளாக
கைகோர்த்த நிழல் உருவம்
அலை அருகில் - இவை என்றும்
அன்பு மொழி பேசும் நம் வடிவில் . . .
Very beautiful shots , Priya,,, especially the last one is brilliant !!
wow ...... இந்த இடங்களில் தனிமையில் தியானம் செய்ய வேண்டும் போல் இருக்கிறது......
அழகான இடங்களின் படங்கள் ..... இறைவனின் இதய தடங்கள்....
rajeshnedveera
உல்லாச உலகம் எனக்கே சொந்தம் ... தையடா தையடா தையடா.....
Post a Comment