எனக்கு ஏன் இந்த பெயர் வச்சிங்க? பாருங்க யாருமே என் பேரை சரியா சொல்ல மாட்றாங்க?.... பள்ளி நாட்களில் பெரும்பாலும் இதுதான் என் புலம்பலாக இருந்தது. சரியாக உச்சரிக்க முடியாமல் அவரவர் அவர்கள் இஷ்டத்திற்கு சொல்லி அழைக்கும்போது எனக்கு எரிச்சலாக இருக்கும். அப்பொழுதெல்லாம் அம்மாவிடம் ஷார்ட் & ஸ்வீட்டா எத்தனை பெயர்கள் இருக்கு; அதில் ஏதாவது ஒரு பெயரை வச்சிருக்கலாமே, ஏன் இந்த பெயரை வச்சிங்கன்னு கேட்டிருக்கிறேன். அதற்கு அம்மா ஒரு குட்டி பிளாஷ் பேக் சொல்வாங்க.
பெயர் பிறந்த கதை...
எங்கள் குடும்பத்தில் ஆங்கில அல்லது பிரெஞ்ச் பெயர் வைப்பது சகஜமான ஒன்றுதான் என்றாலும் எனக்காக இந்த பிரெஞ்ச் பெயரை தேர்ந்தெடுத்தது என் பெரியம்மாதான். அம்மாவின் அக்கா அதாவது என் பெரியம்மா நான் பிறப்பதற்கு முன்னே இந்த நாட்டிற்கு(France) வந்துவிட்டார். மேலும் என் ஞானஸ்நான தாயாகவும்(Godmother) இருந்ததால் அவர் தேர்ந்தெடுத்த பிரெஞ்ச் பெயரையே என் பெற்றோர் எனக்கு வைத்தார்கள். மற்றபடி பிறந்த நேரம் நாள் என எதையும் பார்த்து பெயர் வைக்காமல் பிடித்த பெயரை சூட்டி மகிழ்ந்திருக்கிறார்கள்.
பள்ளியில்...
ஒரு சில நெருங்கிய தோழிகளை தவிர எனது பள்ளி நாட்களில் சக மாணவிகளாலும் ஆசிரியர்களாலும் எனது பெயர் படாதப்பாடுபட்டது. அவரவர் விருப்பப்படி பலவிதமான உச்சரிப்பில் என்னை பெயர் சொல்லி அழைப்பார்கள். சிலர் என்னிடமே எப்படி சரியாக சொல்வது என கேட்பார்கள். அச்சமயங்களில் அவர்களுக்கு சரியாக சொல்லி கொடுப்பதே என் வேலையாக இருந்துவந்தது. அதிலும் +1ல் பிஸிக்ஸ் மிஸ் என் பெயர் சொல்லும்போது வகுப்பில் லேசாக சிரிப்பு சத்தம் எழும்... அவ்வளவு போசமாக pronounce பண்ணுவாங்க. ஆரம்பத்தில் அமைதியாக இருந்த நான் பிறகு 'இல்ல மிஸ், அப்படி இல்ல இப்படிதான் சொல்லனும்' அப்படின்னு சொல்லிவிடுவேன். ஆனால் அந்த இரண்டு வருடமும் கடைசிவரை அவர்களால் சரியாகவே உச்சரிக்க முடியவில்லை.
கல்லூரியில்....
ஆனால் அது பள்ளிவரைதான் நீண்டது. கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்த பிறகுதான் எனது பெயரை எனக்கு பிடிக்க ஆரம்பித்தது. இலக்கியங்கள் படித்தவர்கள் என்பதாலோ என்னவோ என் கல்லூரி ஆசிரியர்கள் என் பெயரை மிக சரியாக உச்சரித்து அழகாக கூப்பிடுவார்கள். ஒருமுறை Literature வகுப்பில் Shakespeare பாடத்தில் (Shakespeare's play 'Much Ado About Nothing') என் பெயர் வர அதைப்பற்றி விளக்கிய மேடம் இது ஒரு பிரெஞ்ச் பெயர், லத்தின் மொழியில் இருந்து வந்தது எனவும், சரியாக உச்சரித்தால் அழகாக இருக்கும் என்று சொல்லி என்னைப்பார்த்து you know, you have such a beautiful and romantic name... என்றார்கள். அதுவரை அம்மாவிடம் தொடர்ந்துவந்த எனது பெயரைப்பற்றிய புலம்பல் அத்துடன் நின்றுவிட்டது. இப்படி பள்ளிதொடங்கி கல்லூரிவரை உடன்படித்தவர்களிடம் இருந்து என் பெயர் தனித்துதான் இருந்தது.
வேலையில்...
ஆனால் படிப்பு முடிந்து வேலைக்கு செல்ல ஆரம்பித்தபோது மீண்டும் பெயர் பிரச்சனை ஆரம்பித்தது. வேலைக்கு சேர்ந்த புதிதில் மாணவர்கள் என் பெயரை சொல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள் என்பதனை தெரிந்துக்கொண்டேன். அப்படியே விட்டு விட முடியுமா... அதுவும் இங்க்ளீஷ் டீச்சராக இருந்து கொண்டு! அதனால் சரியான உச்சரிப்பை சொல்லிக்கொடுத்துவிட்டேன். ஆனாலும் உடன் பணிபுரிந்து ஆசிரியர்களில் சிலருக்கு கடைசிவரை சரியாகவே சொல்ல வரவில்லை.
பிரான்ஸில்...
இது எல்லாமே இந்த நாட்டிற்கு வரும்வரைதான் தொடர்ந்தது. இங்குள்ளவர்களுக்கு மிக பரிட்சயமான பெயர் என்பதால் மற்றவர்களிடம் என் பெயர் சொல்லும்போதும் சரி மற்றவர்கள் பெயரிட்டு அழைக்கும்போதும் சரி மிக comfortableலாக ஃபீல் பண்ணுகிறேன்.
குடும்பத்தில்...
வெளியில் தான் என் பெயர் இப்படி... மற்றப்படி சொந்தத்தில் சரியாகவே சொல்லி கூப்பிடுவார்கள். அம்மா எப்பொழுதும் என்னை ம்மா, என்னடா எனவும் அப்பாவோ கண்மனி என்றுதான் சொல்வார்; அதிலும் அப்பா அயல் நாட்டில் பணிபுரிந்துக்கொண்டிருந்த சமயங்களில் அவரிடம் இருந்து வரும் கடிதங்களில் ஒருமுறை கூட என் பெயரை எழுதியதில்லை. ஏனெனில் அவருக்கு எப்பொழுதும் நான் கண்மனிதான். என் கண்மனி எப்படி இருக்கிறாள்? என் கண்மனி எப்படி படிக்கிறாள்? இப்படியாகத்தான் எழுதுவார். கூப்பிடும்பொழுதுமட்டும் மிக மெதுவாக என் பெயருடன் 'ம்மா' சேர்த்து அழைப்பார். இன்றும் அப்பாவின் கன்மணியாக இருப்பதே பிடித்திருக்கிறது. வீட்டில் முதல் குழந்தை என்பதால் உடன்பிறந்தவர்களுக்கு எப்பொழுதும் நான் அக்காதான். அவர்கள் நண்பர்களும் தோழிகளும் கூட இன்றுவரை என்னை அக்கா என்றுதான் அழைப்பார்கள். என்னவர் என் அப்பாவை போலவே சாஃப்டாக பெயருடன் 'ம்மா' சேர்த்து அழைப்பார். அப்பாவின் குரலில் எப்பொழுதும் என் பெயர் ஓரே டோனில் ஒலிக்கும்; அதில் பாசம் மட்டுமே தெரியும். ஆனால் அப்பாவைபோலவே கூப்பிட்டாலும் என்னவரின் அழைப்பு ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும். எதற்காக அழைக்கபடுக்கிறதோ அதை பொருத்து ஏற்ற இறக்கமாக அமையும்.
சரி அப்படி என்னதான் உன் பெயர் என கேட்கிறீர்களா... எப்பொழுதும் என்னவரிடம் இருக்கும் இதோ என் வீட்டு சாவியுடனே சேர்ந்திருக்கும் இந்த கீ செயினில் எழுதியிருப்பதுதான். எஸ்... மை நேம் இஸ் பெயாத்ரிஸ்! மற்றவர்களால் சுருக்கமாக பெயா என்றே அழைக்கப்படும்; நான் விரும்புவதும் அப்படியே.

பதிவுலகில்...
சரி பெயாவாகிய நான் ப்ரியாவானது எப்படி? தமிழில் பதிவெழுத ஆசைப்பட்டு வலைத்தலம் ஆரம்பித்தபொழுது எனது முந்தைய அனுபவங்களால் வேறு ஏதாவது ஒரு தமிழ் பெயரில் தொடங்கலாம் என்றெண்னி என் சொந்த பெயரை விட்டுவிட்டேன். சின்ன வயசில் இருந்து எனக்கு மிகவும் பிடித்த பெயர் ப்ரியா. இணையத்தில் ஒரு சில தமிழ் வலைத்தலத்திற்கு எனது கவிதைகளை ப்ரியா என்ற பெயரிலேயே அனுப்பினேன. அப்படியே பிரசுரிக்கப்பட்டது. சரி இதுவே நமது புனைபெயராக இருந்துவிட்டு போகட்டுமே என்றெண்ணி வலைத்தலம் ஆரம்பிக்கும் பொழுது ச்சும்மா ப்ரியா என்று வைக்க இன்று பதிவுலகில் அதுவே என் பெயராகிப்போனது. இடையில் எனது உண்மையான பெயருடன் எழுத ஆசை வந்தும் ஏனோ மாற்றாமல் அப்படியே விட்டுவிட்டேன். இன்று உங்களால் ப்ரியமாக ப்ரியா என்று அழைக்கப்படுவதில் எனக்கு சந்தோஷமே!

Origin of the name: Derived from the Latin beatrix (she who makes happy, she who brings happiness), which is from beātus (happy, blessed).
Pronounced: be-ah-TREE-che(Italian), BEE-ə-tris(English) BAY-uh-TREECE(French)
Meaning: Bringer of joy, Blessed
பதிவுலகில்...
சரி பெயாவாகிய நான் ப்ரியாவானது எப்படி? தமிழில் பதிவெழுத ஆசைப்பட்டு வலைத்தலம் ஆரம்பித்தபொழுது எனது முந்தைய அனுபவங்களால் வேறு ஏதாவது ஒரு தமிழ் பெயரில் தொடங்கலாம் என்றெண்னி என் சொந்த பெயரை விட்டுவிட்டேன். சின்ன வயசில் இருந்து எனக்கு மிகவும் பிடித்த பெயர் ப்ரியா. இணையத்தில் ஒரு சில தமிழ் வலைத்தலத்திற்கு எனது கவிதைகளை ப்ரியா என்ற பெயரிலேயே அனுப்பினேன. அப்படியே பிரசுரிக்கப்பட்டது. சரி இதுவே நமது புனைபெயராக இருந்துவிட்டு போகட்டுமே என்றெண்ணி வலைத்தலம் ஆரம்பிக்கும் பொழுது ச்சும்மா ப்ரியா என்று வைக்க இன்று பதிவுலகில் அதுவே என் பெயராகிப்போனது. இடையில் எனது உண்மையான பெயருடன் எழுத ஆசை வந்தும் ஏனோ மாற்றாமல் அப்படியே விட்டுவிட்டேன். இன்று உங்களால் ப்ரியமாக ப்ரியா என்று அழைக்கப்படுவதில் எனக்கு சந்தோஷமே!
**********
சிறுவயதில் இருந்தே என் பெயரைப்பற்றி மனதுக்குள் இருந்தவைகளை இன்று உங்கள் முன்னால் வைக்க வாய்ப்பாக இருந்தது தோழி சுசியின் பெயர்க்காரணம் பற்றிய தொடர்பதிவு.
நன்றி சுசி!
இவற்றை தொடர்ந்திட