Subscribe:

Pages

Saturday, February 27, 2010

காதல் கிளிகள் இரண்டு!!

                 என்னவரின் நண்பரும் அவர் தோழியும் லிவிங் டுகதராக வாழவிரும்பி தங்கள் பெற்றவர்களைவிட்டு முதன்முறையாக தனி வீடுபார்த்து குடிப்போயினர். புதிதாக வாழ்வை தொடங்கப்போகும் அவர்களுக்கு என்ன பரிசுக் கொடுத்தால் பொறுத்தமாக இருக்கு என்று யோசித்தப்போது, காதல் கிளிகள் என்றார் என்னவர். அதையும் நானே வரைந்துக்கொடுத்தால் என்ன என்ற‌ எண்ணம் தோன்ற, அப்படி அவர்களுக்காக வரையப்ப‌ட்டதுதான் நீங்கள் பார்க்கும் இந்த ஓவியம்.


வழக்கம்போல் இதுவும் ஆயில் பெயின்டிங்குதான். மிக சுலபமாக இருந்ததினால் வரைவதற்கு வெறும் இரண்டு மணி நேரங்கள்தான் ஆனது. இன்றும் அந்த நண்பரின் வீட்டு வரவேற்பரையில் இந்த கிளிகள் பேசிக்கொண்டிருக்கிறது.

பட்டாம்பூச்சிகள்......கவிதைகளாக சிறகடிக்க‌! என்ற தலைப்பில் இடம்பெற்ற எனது ஓவியத்திற்கு கவிதை எழுதசொல்லி கேட்டிருந்தேன். என் வார்த்தையினை ஏற்று நிறைய நண்பர்கள் அழஅழகான கவிதைகளை படைத்திருந்தீர்கள். உங்கள் அனைவரின் கவிதைகளுக்கு பக்கத்தில் நான் வரைந்தது ஒன்றுமே இல்லையென்று நினைக்கிறேன். அவ்வளவு அருமையாக எழுதிய உங்கள் அனைவருக்கும் மீண்டும் என் நன்றிகள்! உங்களுக்குள் இருக்கும் கவித்திறனை என் ஓவியங்கள் வெளிக்கொண்டு வருமானால் அதில் எனக்கு சந்தோஷமே...


அதனால் மீண்டும்... எங்கே, கொஞ்சம் உங்கள் கற்பனையை தட்டிவிடுங்கள்! கவிதையாகதான் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை... சாதாரணமான உரையாடலாகக்கூட இருக்கலாம்.
சரி சொல்லுங்கள்...

இந்த காதல்கிளிகள் என்ன பேசிக்கொண்டிருக்கிறது?

Tuesday, February 16, 2010

என்னென்ன மாற்றங்கள் கொண்டேனடா......ப்படியடா மாறிப்போனேன்?
எனக்கு இதுதான் பிடிக்கும்… இது என்னுடையது… என்றிருந்தேனே.
என் பொருட்களை நான் உபயோகிப்பதை வேறு யார் தொட்டாலும் பிடிக்காதே… அத்தனை பிடிவாதமும் எங்கேயேடா சென்றது?
விவரம் அறிய‌ ஆரம்பித்த வயதிலிருந்தே நான்… எனது… என்றிருந்த வார்த்தைகள் இன்று நாம் என்று மாறிப்போனதேனடா?

என் சோப்பில் குளித்துவிட்டு வந்த தம்பியுடன் சண்டைப் போட்டேனே..... இன்றோ எனது உனது என்றில்லாமல் ஒரே சோப்பாக மாறிப்போனதேனடா?

வம்பு சண்டைப் பிடிக்கவே என்  துண்டோடு  குளியலறையில் இருந்து வெளியே வரும் தம்பியை காத்திருந்து கோபித்துக்கொள்வேனே.....
இன்று குளித்துவிட்டு வரும் உன்னிடம் என் துண்டினை எடுத்துக்கொடுக்கிறேனே..... எப்படியடா?

பாதி கடித்துதரும் மிட்டாயினை என் தங்கையிடமிருந்தே என்றாலும் வாங்கிக்கொள்ள மறுப்பேனே......
இன்றோ நீ சாப்பிடுவதை தயக்கம் சிறிதுமின்றி சுவைத்து சாப்பிடுவது பிடித்திருக்கிறதே..... ஏனடா?

எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு… இதுதான் வேண்டும்… என்று வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல் ஆடைதேர்வில்தான் எத்தனை எத்தனை பிடிவாதம் அம்மாவிடம்!
இன்று உனக்கு பிடிச்சிருக்கா என்று கேட்டு உன் விருப்பதையே முன் நிறுத்தி என் ஆடைகளை தேர்வு செய்கின்றேனே...... எங்கே சென்றதடா என் பிடிவாதம்?

மனதிலோ உடலிலோ நான் சந்தித்த சின்ன சின்ன மாற்றங்களையும் வலிகளையும் மட்டுமில்லாமல் எதையும் பகிர்ந்துக் கொள்ள  உற்ற தோழியான என் அம்மாவைதானே நாடுவேன்......  அவர்களிடமே சொல்லத் தயங்கி இன்று என் மனம் முதலில் உன்னைதானே தேடுகிறதே.... ஏனடா?

என் வாழ்வின் முதல்ஆண்... என்னை உயிராய் நேசிப்பவர் என் அப்பாதான்... அவரை போல் வேறொரு ஆண்மகன் என்னை கவரமுடியுமா என்பேனே..... இன்றோ உன் நேசத்தால் என் உயிராகி... அவரை வென்று என்னை முழுவ‌துமாய் எப்படியடா கவர்ந்தாய்?

எப்படியடா இதெல்லாம்...!
இன்னும் என்னென்ன மாற்றங்கள் எல்லாம் கொண்டேனடா......உன்னால்! 
நீ என்பது வெறும் நீ என்றில்லாமல்… இவை அத்தனையும் இங்கு நானே நீயாகிப் போனதால் வந்த மாற்றங்கள் ஆனதோ...!

Monday, February 8, 2010

வாழ்க்கை சுவாரஸியமாக இருந்திட.......

மெடிகல் ஸ்டடிஸ் சொல்வது இதைதானே...... நல்ல ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தியானமோ உடற்பயிற்சிகளோ அவசியமில்லை... காதல் நிறைந்த ஆரோக்கியமான உறவு இருந்தாலே போதும்....நீண்ட நாள் இளமையோடு வாழலாம்!


நாம் செய்கின்ற சின்ன சின்ன செயல்களால் கூட வாழ்க்கையை சுவாரஸியமானதாக‌ மாற்றிவிட முடியும். சோ, சில ரொமான்டிக் டிப்ஸ்..... நான் கண்டதும் கேட்டதுமாக.....(அனுபவங்களாகவும்)! • காதலுடன் உறவாடுவதில் பூக்களுக்குதானே முதலிடம். அதிலும் காதல் சின்னமான அந்த ஒற்றை சிகப்பு ரோஜா... இது ஒன்றே போதுமே I Love You என்று சொல்லாம‌ல் சொல்ல.

 • ஒரு டசன் ரோஜா பூக்கள்...... அதில் 11 சிகப்பு ரோஜாக்களுடன், ஒரே ஒரு வெள்ளை ரோஜாவையும் சேர்த்து "In every bunch there's one who stands out - and you are that one." என்று எழுதிக்கொடுக்கலாம்.

 • ரோஜாக்களை விடுத்து மற்ற பூக்களினாலும் காதலை சொல்லலாம். Stevie Wonders பாடலைப் போல் சூரியகாந்தி பூங்கொத்துடன் "You are the sunshine of my life” என்று எழுதிக்கொடுக்கலாம்.

 • Tulips பூக்களுடன் "I've got two-lips waiting for you!" ....இப்படி எழுதி உங்க ஆசையை தெரிவிக்கலாம்.

 • காரணங்கள் ஏதுமின்றிக்கூட‌ பூக்களை ப‌ரிச்சளிக்கலாம் (well, the reason is love).

 • பொதுவாக எல்லோருமே கொடுக்க விரும்பும் பரிசு வாட்சாகத்தான் இருக்கும். சாதாரணமாக தெரியும் ப‌ரிசுடன் "I'll always have time for you."... என்று எழுதினால், உங்கள் துணைக்காக‌வே உங்களது நேரம் என்பதை அழ‌காக வெளிப்படுத்தும் விதமாக இருக்கும்!

 • உங்கள் துணை விரும்பிப்படிக்கும் நாவலில் "The story is great but our own love story is the best" என்று எழுதிவைத்து அசத்துங்கள்! (எச்சரிக்கை: அது ரொமான்ஸ் நாவல்தானா என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள்)

 • உங்கள் பிலவ்டை நீங்கள் விரும்பும் "101 Reasons Why You're the Greatest" லிஸ்டு தயார் செய்து ஒவ்வொரு காரணத்தையும் தனித்தனி தாள்களில் எழுதி அழகான ஃபேன்ஸி கிஃப்டு பாக்ஸில் வைத்து கொடுங்கள். நம்மை பற்றி இத்தனை விஷயம் தெரிந்துள்ளதே என்ற ஆச்சரியத்தில் ஆழ்த்துங்கள்! (1001 reasons கூட எழுதலாம்...பொறுமை இருந்தால்)

 • இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வைத்து ஃபோட்டோ ஆல்பம் செய்து, சில காலிப் பக்கங்களையும் விட்டு “to be continued” என்று எழுதிக் கொடுக்கலாம்.

 • உங்கள் பிலவ்டுக்கு பிடித்த நடிகர்/ ந‌டிகை நடித்த படத்தின் சிடியோ அல்லது பிடித்த எழுத்தாளரின் புத்தகத்தையோ வாங்கிவந்து திடீர் சர்ப்ரைஸ் கொடுக்கலாம்.

 • முதல்முதலாக சந்தித்த நாளை Anniversary டேவாக கொண்டாடி, அன்று உங்களுக்குள் ஏற்பட்ட நிகழ்வுகளை நினைவுகூர்ந்து மகிழலாம்.

 • உங்களுக்குள் நடந்த சில இனிமையான த‌ருணங்களின் புகைப்படங்களுடன், கொடுத்து கொண்ட பரிசுகளையும் புகைப்படங்களாக்கி Scrap book உருவாக்கலாம்.

 • உங்கள் பிலவ்டை நினைத்து எழுதிய கவிதைகளை தொகுத்து புத்தகமாக்கியோ அல்லது ஆடியோ கேசட்டில் நீங்களே பதிவு செய்தோ பரிசாகக் கொடுக்கலாம்/அவர்களுக்கு பிடித்த மெண்மையான வார்த்தைகள் கொண்ட‌ காதல் பாடல்களையும் ரெக்கார்ட் செய்தும் கொடுக்கலாம்.

 • காதல் உணர்வை தூண்டும் விதமாக எத்தனையோ பரிசுகளை இயற்கை நமக்கு கொடுத்திருக்கிறது. வானவில்லை காண்பது, மழையினை ரசிப்பது, நிலவொளி வெளிச்சத்தில் கடற்கரை மணலில் நடந்துச்செல்வது.... இப்படி ரம்மியமான சூழ் நிலைகளை இருவரும் சேர்ந்து ரசித்துப் பாருங்கள்.

 • மின்சாரமற்ற இரவினைக்கூட மெழுகுவத்தியின் வெளிச்சம் ரம்மியமானதாக மாற்றிவிடும். ஒருமுறையாவது அந்த ரம்மியமான வெளிச்சத்தில் எதிரெதிரே அமர்ந்து கண்ணோடு கண் நோக்கி பேசிப்பாருங்கள்... இதைவிட ரசனையான நிமிடங்கள் இருக்க முடியாது........ "The eyes are the window to the soul".

 • எப்பொழுதும் புன்னகைத்துப் பேசுங்கள்.... முடிந்தால் தனிமையில் நீண்ட தூரம் கைக்கோர்த்து நடந்துச்செல்லுங்கள்... நம் துனையின் விரல்களோடு விரல்கள் சேர்த்துப் பிடித்து கொண்டாலே போதும், “நான் இருக்கிறேன் உனக்கு” என்று சொல்லாமல் சொல்லும் ஒர் உணர்வை ஏற்படுத்தும்.

Monday, February 1, 2010

காதல்..... காதல்..... காதல்.....பிப்ரவரி தொடங்கிவிட்டது... இன்னும் சில தினங்களில் Valentine's Day!  உள்ளத்தில் காதல் உணர்வு பொங்க வாழும் அனைவருக்கும் ஒரு நாள் என்ன, எல்லா நாட்களுமே காதலர் தினம்தான். அதனால் இந்த மாத பதிவுகளில் வெறும் காதல்... காதல்... காதல் மட்டுமே.


Valentine's Day என்பது காதலர்களுக்கு மட்டுமல்லாமல் அன்பை பகிர்ந்துக்கொள்கின்ற அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் பொதுவானதாகத்தான் நினைக்கிறேன். என்னதான் காதலர்களோ, கணவ‌ன் மனைவியோ தினம்தினம் ஏதோ ஒருவகையில் அன்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாலும், தங்களின் காதலை மேலும் வளர்த்துக்கொள்ள...நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள‌... கொண்டாடி மகிழ்ந்திடும் நாளாகதான் பார்க்கிறேன்..... இந்த காதலர் தினத்தை.


காதலித்துக் கொண்டிருப்பவர்கள் மட்டுமல்ல, புதிதாக வாழ்க்கையை ஆரம்பித்த தம்பதியினரும், குழந்தைகள் பெற்ற கணவன் மனைவியும் கூட இந்த நாளை ஸ்பெஷலாக‌ மாற்றி பரிசுப் பொருட்கள் பரிமாறிக்கொள்ளலாம்.... இந்த ஒரு நாளிலாவது குடும்பப் பிரச்சனைகளை தூக்கி தூரப்போட்டுவிட்டு இருவரும் மனம் விட்டு பேசலாம். அழகாக அன்பை வெளிப்படுத்த ஐ லவ் யூ சொல்லி மகிழலாம்.


தம்பதிகளின் இல்லறம் நல்லறமாகப் பயணிக்க இருவருக்கும் இடையே உள்ள ரொமான்ஸ் பேட்டரி சார்ஜ் இற‌ங்காமல் இருக்க... தினச‌ரி கவனிப்பு முக மிக அவ‌சியம்!


ங்கு ப்ரெஞ்சு மக்களை பார்க்கும்போது எனக்கு ஆச்சிரியமாக இருக்கும். இவர்களுக்கும் குடும்பம் பிரச்சனைகள் என்று இருந்தாலும் எப்படி எப்போதும் ஜாலியாக ரொமான்டிக்காகவே இருக்கிறார்கள்! பிரான்ஸ் The land of Romance என்று கேள்விப்பட்டிருந்தாலும், இந்த நாட்டிற்கு வந்து பார்த்தபோதுதான் அது எவ்வளவு உண்மையென்று புரிந்தது. அவர்களது பேச்சில்(French), முத்தத்தில்(French Kiss) என்று எப்பொழுதும் ரொமான்ஸுதான்.

ந்த நாடும், நாட்டு மக்களும்தான் வெரி ரொமான்டிக் என்றால் ஹைலி ரொமான்டிகாக இருப்பது இவர்களது மொழி. நான் English Literature படித்தபோது உலகமொழிகள் சிலவற்றைப் பற்றியும் தெரிந்துக்கொள்ள முடிந்தது. French is a Romantic language என்று அப்பொழுது படித்திருக்கிறேன். அதிலும் phonetics வகுப்பு எடுக்கும் Mam ரொம்ப அழகாக ப்ரஞ்சு எழுத்துக்களின் sounds பற்றியும் அதன் accents & variations in pronunciation பற்றியும் சொல்லும் போது உண்மையிலேயே கேட்பதற்கு இனிமையாகத்தான் இருந்தது. அழகான மொழியாக இருந்தும் ஏனோ ஆர்வமில்லாததால் அப்போதே கற்று கொள்ளவில்லை. இங்கு வந்தபின்பு அந்த Romantic மொழியில் பேச ஆரம்பித்த பிற‌குதான் இத்தனை நாள் இந்த அழகிய மொழியினை தெரிந்துக்கொள்ளாமல் விட்டுவிட்டோமே என்று நினைத்துக்கொண்டேன்.


இதோ அந்த இனிமையான மொழியிலிருந்து சில ரொமான்டிக் வார்த்தைகள்........ நீங்களும் தெரிந்துக்கொள்ள!

Je t'aime !
          I love you.

Moi aussi, je t'aime !
                     I love you too.

Je t’aimerai toute ma vie !
                       I'll Love You Forever.

Je t'aimerai toujours ! 
             I will always love you.

Je t'adore !
               I adore you.

Tu es mon amour !
            You are my love.

Tu es ma joie de vivre !
                  You are the joy of my life.

Tu me plais beaucoup !
                I am very attracted to you.

Je rêve de toi !
                I dream of you.

Tu es magnifique !
                 You are amazing .

Je t'aime de tout mon cœur !
                   I love you with all my heart.

Tu es dans toutes mes pensées !
                       You are in all my thoughts.

Je veux etre avec toi !
                      I want to be with You.

Mon amour pour toi est éternel !
                       My love for you is eternal.

Tendres baisers !
             Love and kisses.