Subscribe:

Pages

Wednesday, September 30, 2009

நிழலா நிஜமா.....

நிழலா நான் நிஜமா
நிழலானால்
என்றுமே உன் அருகிலே.
நிஜமானால்
உன்னை விட்டு வெகுதூரமே….

நினைப்பதை
நிறைவேற்றுவது எளிது
நிழலில்.
ஆனால் நிஜமோ….
எதிர்பார்க்கவைத்து……
காத்திருக்கவைத்து……
ஏங்கவைக்கும்…………………

நிழலோ
கனவு காணவைக்கும்.
நிஜமோ
உன்னையே மறக்கவைத்துவிடும்.
வேண்டாம் அன்பே
வாழ்க்கையே மாற்றிவிடும்
நிஜம் - உன்னனவிட்டு
விலகியே இருக்கட்டும்.
நிழலாக என்றும்
உன் நினைவுகளில் !

Monday, September 28, 2009

வினா ???

«விடை தெரியா வினாக்கள்
ஓராயிரம் உன்னிடம்» என்றாய்
இன்று விடையளித்தபடி நான்
வினாக்களே இன்றி
என்றாவது அவற்றின்
ஆழம் தெரியுமானால்
அர்த்தம் புரியுமானால்
விடைகள் தேடிவரும்
வினாவாக வருவாயா…

Wednesday, September 23, 2009

இயற்கையின் அழகு !

இயற்கைதான் எத்தனை அழகு என வியக்கவைக்கும் இந்த இடம், பலவண்ணங்களில் என் கேமராவில் பதிவாகியது என் வீட்டு பால்கனியில் இருந்து.  ஒவ்வொரு முறையும் என் வீட்டிலிருந்து இதை நான் ரசிக்கும் போதெல்லாம் எனக்குள் தோன்றுவது வானம் அழகானது மட்டுமல்ல அதிசயமானதும்கூட !


Monday, September 21, 2009

உரிமையுடன்......

னவே கனவாகி போனதால்
இன்னும்கூட கனவிலே.....
இன்றும்கூட !
உரிமைகளை உரிமையுடன்
பறித்துக்கொண்டு
நீ செய்கின்ற செயல்களை
என்னவென்று சொல்ல ?
எப்படி வார்த்தைகள் கொண்டு எழுத ?
என்றாவது ஒருநாள்
உனக்கும் இதே கனவு
வருமாயின் நிச்சயம்
உணர்ந்துக்கொள்வாய்
இன்று என் நிலையை !

Friday, September 18, 2009

தேடல் !!!அப்படி என்னதான் இருக்கிறது
நம் இருவர்க்கும் இடையில் ?

பார்த்த முதல் நாளில் இருந்து
இன்றுவரை புதிதுப் போலவே !
வருடங்கள் பலவாகியும்
மாற்றங்கள் வாழ்வில் கொண்டும்
உள்ளம் மட்டும் மாறாமல்
அல்லது மாற்றிக்கொள்ள விரும்பாமல்
எதை எதிர்ப்பார்த்து
இத்தேடல் தொடர்கிறது !

பலமுறை நெருங்கிவர முயன்று
ஒவ்வொருமுறையும்
ஏதோ ஒரு காரணத்தால்
மீண்டும் மீண்டும் பிரிந்து
மனதால் மட்டும்
இன்னும் பிரியாமலே……
அப்படி என்னதான் இருக்கிறது
நம் இருவர்க்கும் இடையில் ?

சொல்லிவிடு
உனக்கு தெரிந்தால் !

Tuesday, September 15, 2009

கேட்டதில் ரசித்தது !!!

மீபத்தில் வெளிவந்த திரைப்படங்களில், நினைத்தாலே இனிக்கும் படத்தில் வரும் அழகாய் பூக்குதே பாடல் மட்டுமே இதயத்தை வருடிச்செல்லும் இசையுடனும், அழகான கவிதை வரிகளுடனும் அமைந்துள்ளது.  நான் மிகவும் ரசித்த அந்த பாடல்வரிகள் இதோ......


ழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே
அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே


ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்
அருகிலே பார்த்தும் மௌனம் பேசும்
காதலன் கை சிறை காணும் நேரம்
மீண்டும் ஓர் கருவறை
கண்டதாலே கண்ணில் ஈரம்


அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே !


கடவுளின் கனவில் இருவரும் இருப்போமே
ஒ ஹோ ஹோ ..
கவிதையின் வடிவில் வாழ்ந்திட நினைப்போமே
ஒ ஹோ ஹோ ..
இருவரும் நடந்தால் ஒரு நிழல் பார்ப்போமே
ஒ ஹோ ஹோ ..
ஒரு நிழல் அதிலே இருவரும் தெரிவோமே
ஒ ஹோ ஹோ ..
சில நேரம் சிரிக்கிறேன் சில நேரம் அழுகிறேன்
உன்னாலே ..


அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே ..


கருவறை நினைத்தேன் உயிர் வரை இனித்தாயே
ஒ ஹோ ஹோ ..
மறுமுறை நினைத்தேன் மனதினை வதைத்தாயே
ஒ ஹோ ஹோ ..
சிறு துளி விழுந்து நிறை குடம் ஆனாயே
ஒ ஹோ ஹோ ..
அரை கணம் நொடியில் நரை விழ செய்தாயே
ஒ ஹோ ஹோ ..
நீ இல்லா நொடி முதல் உயிர் இல்லா ஜடத்தை போல்
ஆவேனே ..


அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே ..

Monday, September 14, 2009

கேட்டுக்கொண்டே இருப்பேன்........

"நான் கேட்டுக்கொண்டே இருப்பேன்
காலம் முழுதும்
பேசுவது நீயானால்!" -  சொன்னது
நீயானதால்
எனக்கும் ஆசைதான்
பேசிக்கொண்டே...... இருந்திட.
கால நேரம் மறந்து
என் இன்பத் துன்பங்களையும்........
என் உணர்வுகளையும் உன்மைகளையும்.........
போதுமென உனக்கு
சலிக்கும் வரையிலாவது !!!

Wednesday, September 9, 2009

புதிராக ஒரு கனவு......

புரியாத புதிராக வருகிறது
உன்னைப் பற்றிய கனவு
ஒவ்வொன்றும்
ஒரு அழகான கவிதையாக !

கனவினாலே
நினைவுகளில் நிறைந்து
முத்தங்களால் ஆன கனவிது !

விலகி நிற்கும் உன்னை
நெருங்க வைக்கிறேன்
என் விழி பார்வையால்
இருந்தும் ஏதோ
தயக்கம் உனக்கு.

இம்முறை என்னுடையது போல்……
உனது சட்டையைப் பற்றி
இழுத்து அனைத்துக்கொள்கிறேன்
என் இதழ் ஸ்பரிசத்திற்காக
காத்திருந்த உனது ஏக்கத்தை
வெளியேற்றுகிறேன்
அழுத்தமான ஒரு முத்தம்
நீண்டு........ நீண்டுக் கொண்டே போகிறது……….
ஆழமான பார்வையுடன் !

காத்திருந்து கிடைத்ததில்
சந்தோஷம் உனக்கு !
பரிசாக நீயும் தந்தாய்
என் கண்களின்மேல்
கவிதையாய் ஒரு முத்தம் !

Tuesday, September 8, 2009

வலி தூரப் பயணம் !

விவரங்கள்
கண்முன் வலம் வரும்
காலம் முதலே
வரிகளை விடவும்
அதிகம்
வலிகளை வாசித்திருக்கிறேன் !


 நீ தந்த
இந்த பிரிவினைக் கூட
ஆத்திச்சூடி
படிக்கும்போதே
அனுபவித்திருக்கிறேன் !


"கால வண்டி
முன்னோக்கிச் செல்ல
பிரிவு சுமந்த மனம்
பின்னோக்கிச் செல்ல
என்ன முரண்பாட்டுப்
பயணமிது !"


எவ்வளவு தூரம் சென்றாலும்
புறப்பட்ட இடத்தில் வந்து
நிற்காமலா சென்றுவிடும்
பூமி உருண்டை என்பதைப்
புலப்படுத்தும் காலம் !


ஆட்டுக்கல்லினூடே
அகப்பட்ட
ஆட்காட்டி விரலாய்
பிழியப்பட்ட வலிகளை
நாட்காட்டி காகிதமாய்
கிழித்துப் போடுகின்றன
தொடர் பிரிவுகள் !


வேலிமுள் கிழிக்கிறதென்று
வழிமாற்றிக் கொள்வதில்லை
காற்று !


குழியில் போட்டு
புதைத்தாலும்
கிளை விடுவதையே
குறிக்கோளாய்
கொண்டிருக்கும்
விதை !


எத்தனை பிரிவுகள்
தொடர்ந்தாலும்
வழியெங்கும்
வலிகள் சுமந்து
சுகமாய்ச் செல்லும்
என்
வலி தூரப் பயணம் !

Monday, September 7, 2009

பெண் !?!

ணர்ச்சிகள் உறைந்த
பனிச் சிகரம் !
மர்மங்கள் நிறைந்த
புதினம் !
துன்பங்கள் துயில் கொள்ளும்
தூளி !
அதிசயங்கள் ஆயிரம் உடைய
ஆகாயம் !
வினாக்கள் கோடி கொண்ட
விடை !
பெண் !?!

Saturday, September 5, 2009

என்ன எதிர்ப்பார்க்கிறாய்........சிந்தித்தும் பதில்
கிடைக்கவில்லை
என்னிடம் மட்டும் உனக்கு
எதிர்ப்பார்ப்புகள்
ஏன் இவ்வளவு ?

எல்லாம் உடனிருந்தும்
ஏதோ ஒன்று இல்லாததுபோலவே……
எதையோ தேடிக்கொண்டு
என்னில்.............
மீண்டும்….. மீண்டும்….. தொலைந்துப்போகிறாய்.

ஒவ்வொன்றும் ஒவ்வொருவரிடமிருந்தும்
கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது உனக்கு
அன்பு பாசம் காதல் நட்பு…………
இருந்தும் என்ன எதிர்ப்பார்க்கிறாய்
என்னிடம் ?

தனித்தனியாக கிடைக்கின்ற
அத்தனையும் என்னிடமிருந்து
மொத்தமாக வேண்டுகிறாயா ?
இல்லை
தொலைந்த உன்னை
என்னில் தேடி கொண்டிருக்கிறாயா ?
இல்லை
என்னில் மட்டுமே
நீ முழூமையடைகின்றாயா ?

Thursday, September 3, 2009

உன் உயிரில் நான்...............
ண்கள் என்னை தேடுகின்றபோது
உன் விழிமலர நான் எதிரில் இல்லை !

ந்தோஷத்தை கொண்டாடுகின்றபோது
பகிர்ந்துக்கொள்ள நான் பக்கத்தில் இல்லை !

சோகங்களில் சோர்ந்து போகின்றபோது
ஆறுதலாக தலைகோதிட நான் அருகினில் இல்லை !

னிமையில் உணர்கின்றபோது
துணையாக நான் உன்னுடன் இல்லை !
றக்கமில்லா இரவுகளின்போது
மடிசாய்த்து தூங்கவைக்க நான் உன்னுடன் இல்லை !

சையை கவிதையை ரசிக்கின்றபோது
சுவாசமாக நேசிக்க நான் உன்னுடன் இல்லை !

பார்த்ததை படித்ததை பற்றி பேசவிரும்பும்போது
கருத்து பறிமாற்றத்திற்கு நான் உன்னுடன் இல்லை !

னதின் ஆர்வம் குறைகின்றபோது
உற்சாகத்திற்கு உயிர்கொடுக்க நான் உன்னுடன் இல்லை !

னால்
நீ நினைக்கும்போது மட்டும்
இதயத்தில்......
உணர்வுகளில்.........
உன் உயிரில் நான் இருப்பேன் !

Wednesday, September 2, 2009

மவுனமே ரசனையாய்......

சிக்கின்றேன் !
உன் கண்களை
உன் சிரிப்பினை
நீ பேசுவதை
இன்னும் நிறையவே…………

இதையெல்லாம் விட
இன்னும் அதிகமாக
ரசிக்கின்றேன்
நாம் பேசுகின்றபோது
நிலவும் சில நொடி
மவுனங்களை.

பல கோடி வார்த்தைகளில்
காணமுடியாத
அர்த்தத்தினை…
அழகினை……….
ஆழத்தை……….
ஒரு நொடி மவுனம்
உணரச்செய்கிறது.

எதிர்ப்பார்த்து
நிகழ்வதில்லை இம்மவுனம்.
பேச்சு தெளிவாகவே
இருந்தாலும்…
ஏதோ ஒன்று
தடுமாற செய்கிறது
நம்மிருவரையும்
ஒரே நேரத்தில் !

மவுனம் நிலவும்
அந்த ஒரு நொடி
எவ்வளவு
வார்த்தைகள் பேசும்…
எத்தனை
கவிதைகள் படைத்திடும்….
இன்னும்
என்னவெல்லாம் செய்யும்……..

உணர்வுகளே ரசனையாய்
பேசும் பொழுது
நமக்குள்ளே நிகழும் மவுனம்
ரசனையானதுதானே……….
ரசிக்கின்றேன்
இன்னும் அதிகமாக !

Tuesday, September 1, 2009

கனவுகளே இன்று கவிதையாய்.........

னவு என்பது ஒரு சிறிய வாழ்க்கை!
வாழ்க்கை என்பது ஒரு நீண்ட கனவு!

இவற்றிலிருந்தே ஆரம்பம்... என் முதல் பயணம்......
ர் நாள்
எங்கேயோ அழைத்து செல்கிறாய்
நீண்ட தூரம்
நடக்கமுடியவில்லை என்றேன்
என் கைப்பிடித்துக்கொள் என்றாய்
பிடித்து நடந்தேன்
உற்சாகத்தோடு……
அழகான கவிதையாய் !

ற்றொரு நாள்
ரம்யமான மாலை வேளை
மொட்டை மாடியில்
நீயும் நானும்.
வருடிச்செல்லும் தென்றல்
என் கூந்தலினை கலைக்க….
முகத்தில் விழுந்த முடியை
அழகாக விலக்கினாய்
உன் விரல்களால்……
ரசனையான கவிதையாய் !

ன்றொரு நாள்
எதையோ எதிர்பார்த்து
என் விரல்கள்
உனது விரல்களை
பிடித்தது மிக அழுத்தமாக
உடனே என்னை வசீகரிக்கும்
சிறிய புன்னகையுடன்
ஆழமான ஒர் பார்வை
பார்த்தாய் - அழகான
அந்த இரவு வெளிச்சத்தில்…..
அர்த்தமுள்ள கவிதையாய் !

ன்னொரு நாள்
இப்படி ஒன்று
கிடைக்காதா என்று
ஏங்கவைக்கும்
இதில்
யார் கொடுப்பது
யார் பெற்றுக்கொள்வது
தெரியவில்லை
இருந்தாலும் தொடர்கிறது
நீண்ட நேரம்
இதழ்களின் வழியே
உள்ளே நுழைந்து
உயிர் எங்கே என்று
தேடி செல்லும்
உ(எ)ன் முத்தம்……..
உயிருள்ள கவிதையாய் !

விதைக்கு
பொய் அழகாம்
என் கவிதையும் கூட – ஆனால்
பொய்யான நிஜம்
என் கனவுகளே
இன்று கவிதையாய் !