Subscribe:

Pages

Saturday, November 28, 2009

மருதாணி...எனும் கலை!

     சிறுமியாக இருந்த காலம்முதலே மருதாணியின் மீதி எனக்கு அப்படியொரு காதல். அப்பொழுதெல்லாம் அம்மாவிடம் இரண்டு கைகளையும் ஆசையோடுக் காட்டிக்கொண்டு, அவர்கள் எப்படியெல்லாம் வைக்கிறார்கள் என்று பார்த்துக் கொள்வேன். நன்றாக சிவக்க வேண்டுமே என்று நினைத்துக்கொண்டு இரவு முழுதும் கலைந்து விடக்கூடாதே என்று கைகளை அதிக அசைவில்லாமல் வைத்துக்கொண்டு தூங்குவேன். விடிந்ததும் கைகளை கழுவிக்கொண்டு வீட்டில் உள்ள அனைவரிடமும் காட்டி மகிழ்ந்த நாட்கள்தான் எத்தனையோ !!!


பின் நானே வைத்துக் கொள்ள ஆரம்பித்த பிறகு இதுவும் ஒருவிதமான கலை என்பதனை உணர்ந்துக் கொண்டேன்.


இப்பொழுது கிடைப்பதுப்போல் அப்போ ரெடிமேட் கோன்கள் கிடைக்காது என்பதால் தெரிந்தவர்களிடமும் தோழிகளிடமும் பெற்றுவந்த மருதாணி இலைகளை நானே அம்மியில் அரைத்து(இதற்காகவாது நான் அம்மியினை தொடுவதாக அம்மாவின் கமென்ட் கிடைக்கும்) வைத்துக்கொள்வேன். கோன்களில் கிடைக்க ஆரம்பித்த பிறகு, கூடவே அதற்கான வடிவங்களில் விதவிதமாக அச்சுகள் கிடைத்தது. ஆனால் அதை தவிர்த்து எப்போதும் நானே வடிவங்களை உருவாக்கி வரைந்துக்கொள்வேன்.


எனக்கு பிடித்தமானவைகளில் நான் இன்னும் தொடர்ந்து கொண்டு வருவது இந்த மருதாணி வரைந்துக்கொள்வதைதான். எத்தனை நாட்கள்தான் தாள்களிலும் கேன்வஸ் போர்டுகளிலும் வரைந்துக்கொண்டிருப்பது, அதான் மாறுதலாக என் கைகளிலும் வரைந்துகொண்டவை.....மருதாணியாக!

Tuesday, November 24, 2009

கொண்டாட்டம் ஆரம்பம் !

       கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் வேளையில் அதை வரவேற்கும் விதமாக இங்கு எண்ணற்ற தயாரிப்புகள் ஆரம்பமாகி உள்ளது. வீதியெங்கும் அலங்கரிக்கப்பட்டிருக்கும் வண்ண வண்ண மின்சார விளக்குகள், கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் வண்ணத்தோரணங்கள், பலவிதமான சாக்லெட் வகைகள், பரிசுப்பொருட்கள், நியூ கலக்ஷன்ஸ் ஆடைகள் என்று ஒரே கொண்டாட்டமாக உள்ளது.

          கிறிஸ்துமஸ் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது இந்த கிறிஸ்மஸ் ட்ரீதான். இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ கிடைக்கும் மரங்களை வாங்கிவந்து, அலங்கரிப்பதற்கென்றே விற்கப்படும் விதவிதமான வண்ணத் தோரணங்கள், சீரியல் லைட்ஸ் கொண்டு அதை அலங்கரிக்கப்படும் அழகே தனி! Sur un thème என ப்ரெஞ்சில் சொல்வதைப்போல ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு விதமாய் அதை அலங்கரிப்பது என்பது ஒரு அழகான கலை என்றே நினைக்கிறேன். வழக்கமான சிகப்பு மற்றும் கோல்டன் நிறங்களில் இருந்து, இன்று ரொம்ப வித்யாசமாக பல வண்ணங்களில் எல்லாம் அலங்கரிக்கப் படுகின்றன.....நீலம், வைலெட், ஆரஞ்சு என்று விதவிதமாய் இந்த ட்ரீயை அழகுப்படுத்த ஆரம்பித்திருப்பது பார்ப்பதற்கு நன்றாக இருக்கின்றது. எனக்கு பிடித்தது சிகப்பு மற்றும் வெள்ளி நிறங்கள்தான் என்றாலும், இந்த வருடம் என்னோட சாய்ஸ் நீலம்தான்.

Friday, November 20, 2009

இதயம் !!


முதல் முதலில்
என்னிடமிருந்து உனக்கும்


உன்னிடமிருந்து எனக்கும்

அன்பை சுமந்துச் சென்றவை !


அங்கே
ரசனை என்ற ஒன்றில்
இனைந்தது
இதயங்கள் இரண்டு !!


இங்கே
மாற்றிக்கொண்டது
வாழ்த்து அட்டைகளை
மட்டுமல்ல
நம் இதயங்களையும்தான் !!!

Tuesday, November 17, 2009

வண்ணங்களில் எண்ணங்கள் !

யற்கை காட்சிகளை வரையும்போது மட்டும் எனக்குள் எப்பொழுதும்  ஒரு நிறைவு உண்டு. ஒவ்வொருமுறையும் வரைந்து முடிக்கும் போது, ஏதோ நானே அந்த இடங்களுக்கு சென்றுவிட்டு வந்ததைப் போன்றொரு உணர்வு தோன்றும்.


அதிலும் ஒவ்வொரு கால நிலைக்கேற்ப வண்ணங்களை மாற்றி தன்னை அழகுப்படுத்தி கொள்ளும் இயற்கையை வரைவதென்றால் எனக்கு ரொம்ப பிரியம். அப்படி நான் அனுபவித்து வரைந்த ஓவியங்களில் சில.....இங்கே.
நான் நடத்திவரும் ஓவியக்கண்காட்சிகளில் நிறைய பேரால் கவரப்பட்ட  ஓவியங்களும் இது.



 

 

 

 

Saturday, November 14, 2009

குழந்தைகள் தினம் !!!

ங்கே தொலைக்காட்சியில் வரும் குடிநீர்  விளம்பரம் இது. இதை பார்க்கும் போதெல்லாம் நானும்  குழந்தையாகவே மாறிவிடுவதாக ஒரு உணர்வு. நாமும் சந்தோஷமாக, நம்மைச்சுற்றி இருப்பவர்களையும் சந்தோஷமாக வைத்துக்கொள்ள, மனதை எப்போதும் குழந்தையாகவே வைத்துக்கொள்ளலாமே...

இன்று குழந்தைகள் தினத்திற்காக... நீங்களும் பார்த்து ரசித்திட......

Thursday, November 12, 2009

நீ நீயாக……





ன் கண்களின் தேடல்கள்
என்னிடமே !

ன் இதழின் புன்னகைகள்
உன்னிடமே !

ன் நினைவுகளின் உறைவிடம்
என்னிடமே !

ன் கனவுகளின் நிறைவிடம்
உன்னிடமே !

மொத்தத்தில்
நீ... நீயாக இருப்பதும்
என்னிடமே !
நான்... நானாக இல்லாமல் போவதும்
உன்னிடமே !

Monday, November 9, 2009

மெழுகுச்சிலையில்... உயிர் வாழ்பவர்கள் !

பாரிஸில் நான் பார்த்த மீயூஸியங்களில், எனக்கு மிகவும் பிடித்த ஒன்று Wax Work Museum (French : Musée Grevin). கிட்டதட்ட 300 உலகளவில் பிரபலமானவர்களின் மெழுகுச் சிலை இங்கேதான் உள்ளது.


இங்கே  ஒருசில பிரபலங்கள் இறந்தும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் என்றே சொல்லத் தோன்றியது. எப்படியாவது இவர்களுடன் ஒரு புகைப்படமாவது எடுத்துக்கொள்ள முடியுமா என்றால், இங்கே அது நிறைவேறுகிறது. என்னவோ அவர்களே நேரில் இருப்பதாக எண்ணி, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஒரு நீண்ட வரிசையே காத்திருந்தது. நானும் எனக்கு பிடித்தமானவர்களுடன் எல்லாம் புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.


         சுற்றிப் பார்த்துக் கொண்டே வரும் போது, ஒரு வாலிபன் மிகவும் அழகாக, ஸ்டைலாக நின்றுக்கொண்டிருந்தான். யார் இவன்? எந்த நாட்டைச் சேர்ந்தவன்? எந்த துறையில் இவன் பிரபலம்?...இப்படி தொடர்ந்தெழுந்த கேள்விகளுக்கு பதில் தேடும் முன்னே, புன்னகையால் அவன் பதிலளித்தான்.


      அட, இவன் சிலை இல்லை. இருந்தும்  சந்தேகத்துடன் நெருங்கி சென்றுப் பார்த்தபோது, சிரித்துக்கொண்டே அவன் சொன்னான், « நான் இங்கே வேலை செய்பவன் » என்று. அவன் புன்னகைக்க சிறிது தாமதித்திருந்தாலும், நிச்சயம் அவனையும் photo எடுத்திருப்பேன்  ஒரு விஐபியா இல்லைனாலும், ரொம்ப ஸ்மார்டாக இருந்ததிற்காக.


ஆசை ஆசையாய் எடுத்த சில புகைப்படங்கள்………




இதில் யார் சிலை, யார் சுற்றி பார்பவர்கள்.... சற்றே குழப்பம்தான்.










சிலைகளின்  நடுவிலே நடமாடும் மனிதர்களும் ! 


கண்களின் நிறம், ஸ்கின் கலர் டோன் மற்றும் முடியின் நிறம், அதன் தன்மை இப்படி சிலையின் உருவாக்கம் பற்றிய விளக்கங்களோடு கூடிய காட்சியகம்.



Leonardo da Vinci... உலகப் புகழ்பெற்ற ஓவியங்களின் உரிமையாளர் !









    
இங்கேயும் நம் கலாச்சாரத்தை எடுத்துக்காட்டிட...ஒரு பெண் !


அன்பே உருவான அன்னை தெரெசா !














My heart will go on……(Titanic) பாடலின் மூலம் நம் இதயங்களை கொள்ளைக்கொண்ட பாடகி Celion Dion !













Michael Schumacher... எனக்கு பிடித்த விளையாட்டு வீரர் !














Jackie Chan சிலையை...சுற்றிக்கூட சிறுவர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது !












 
 
Marilyn Monroe... இறந்தும் இளமையோடு !
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 




அட, இங்கேயும் நம் ஷாருக்கான்... இவருக்கும் தான்  எத்தனை வெளி நாட்டு ரசிகர்கள் !














Michael Jackson... ஏனோ இவரைப் பார்க்க மட்டும் சற்று பாவமாக இருந்தது !



சிலை வடிவில் கூட, அழகில் சிறிதேனும் குறைவில்லாமல் நடிகை Monicca Bellucci !
















இவை அத்தனைக்கும் பெருமை சேர்க்கும் விதமாக நம்ம காந்தி தாத்தா !


















னக்கு என்னவோ அவைகளை வெறும் மெழுகுச் சிலைகளாக பார்க்க முடியவில்லை. அவ்வளவு நேர்த்தியாக உருவாக்கியுள்ளார்கள். நெருங்கிச் சென்று சிலைகளின் கண்களைப் பார்த்தப்போது, அவைகள் என்னுடன் பேசுவதாகவே எனக்கு தோன்றியது. அவ்வளவு உயிரோட்டத்துடன் அமைந்திருந்தது.

Thursday, November 5, 2009

உலக அதிசயங்களில்...ஒன்றான

சில மாதங்களுக்கு முன்பு…  தலைநகரம் Parisக்கு செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது (நான் வசிப்பதோ பாரிஸில் இருந்து 850 கி.மீ தொலைவில்). பாரிஸ் என்றாலே நினைவிற்கு வருவது உலக அதிசயங்களில் ஒன்றான Eiffel Tower தான், தினமும் பலாயிரக்கணக்கான சுற்றுலாவாசிகளைக் கொண்டது. சென்ற வாரம் நமது சன்டிவி செய்திகளில் கூட ஒரு கேள்வி கேட்டிருந்தார்கள் "உலகிலே அதிக கட்டணம் வசூலிக்கப்படும் சுற்றுலா தளம் எது ?" என்று. "Eiffel Tower" தானாம். இருந்தாலும் கூட, பல நாட்டு மக்களை அங்கே பார்க்கமுடிந்தது.

என்ன, நம்ம தாஜ்மகால் மாதிரி மனதை தொடுமளவிற்கு இதற்கு flashback இல்லைனாலும், மிக பிரமாண்டமாய் வீற்றிருக்கும் இது ஒரு அதிசயம்தான் !

பகலில் மட்டுமே பார்த்த டவரை இரவில் பார்க்க வேண்டும் என்ற என் நீண்ட நாள் ஆசை இம்முறை  நிறைவேறியது. பலவண்ண விளக்குகளோடு, இரவில் பார்க்க ரொம்ப அழகாக இருக்கும் என்று பலர் சொல்ல கேள்விப்பட்டதுண்டு. நேரில் கண்டபோதோ பிரமித்து நின்றேன்...வியந்தேன், அவ்வளவு அழகு ! அந்த இரவில்கூட அத்தனை பேர், அதன் அழகினை ரசிக்க !

முயன்றவரை அந்த மொத்த அழகினையும் கேமராவில் கொண்டுவர முயற்சி செய்து, கடைசியில் கிடைத்தது இவைகள்தான்.




Monday, November 2, 2009

வேண்டும்.....ஒரு ஊடல் !



கோபம் தனிந்து
பார்க்கும் கொஞ்சலான
உன் பார்வைக்காகவே…..

மொத்த காதலையும் சேர்த்து
இதமாக இறுக்கும்
உன் அனைப்பிற்காகவே…..

ஆழமான உறவினை உணர்த்தும்
இதழ்கள் ஈரமாக கிடைக்கும்
உன் முத்தத்திற்காகவே……

நான்
வேண்டாம் வேண்டாமென
பொய்கோபம் காட்டி
உன்னை தள்ள
நீயோ
வேண்டும் வேண்டுமென
என்னை இழுத்து
புரியும் காதலுக்காகவே…..

வேண்டுகிறேன்
தினம் தினம்
உன்னுடன் ஒரு ஊடல் !