ஒரு வழியாக குளிர் குறைந்துவிட்டது... காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களினால் அழகாக இன்னும் அழகாக மெருகேற்றிக்கொண்டிருக்கும் இயற்கையினை, இறைவனால் வண்ணம் தீட்டப்பட்ட ஓவியங்களை ரசித்திட இருக்கண்கள் போதாது. ஊரெங்கும் மலர்ந்திருக்கும் மலர்களோ பல விதங்களில் பல வண்ணங்களில் அழகாய் காட்யளித்துக்கொண்டிருக்கிறது.
உங்கள் கண்களுக்கு விருந்தளிக்க போகும் கீழே மலர்ந்திருக்கும் படங்கள் சென்ற வாரத்தில் எடுத்தது. ஏதோ மலர் கண்க்காட்சியில் எடுத்தது என்று நினைப்பீர்களானால் தவறு! எங்கள் வீட்டில் இருந்து சுமார் பத்துகீமீ தொலைவிற்குள்ளே சாலைகளின் ஓரங்களில் மரங்களிலும், செடிகளிலும், மட்டுமல்லாமல் கொடிகளில் மலர்ந்தும், நிலத்தினில் படர்ந்தும் இருக்க... மனதை கொள்ளைக்கொள்ளும் இந்த மலர்களை மிகவும் ரசித்து படம் பிடித்தேன்.
என் வீட்டு பூந்தொட்டியில் மலர்ந்திருக்கும் மலர்கள்....
எழுத்துக்களை கோர்த்து வாக்கியங்களாக்குவதை விட வண்ணங்களை குழைத்து ஓவியங்களாக்குவதே மிக சுலபமானதாக இருக்கிறது எனக்கு.
எழுதுவதற்கு தேவைப்படும் நேரத்தைவிட வரைவதற்கு தேவையான நேரம் குறைவு என்பதாலும் எப்பொழுதும் குறையாத கலை ஆர்வம் தொடர்வதாலும் கடந்த சில நாட்களாக நிறைய வரைந்துக்கொண்டிருக்கிறேன்.
இறைவன் படைத்த ஓவியங்களோ அற்புதம்... அதற்கு நிகர் இல்லை என்பதால் அவற்றை ரசித்தபடியே இதோ நான் வரைந்த Magnolias roses(30x60cm)!