எனக்கு பிடித்தவைகள் ஏராளமானவை என்றாலும் அவைகளில் ஒரு சில மட்டுமே நேசிக்கக்கூடியதாக இருக்கிறது. அப்படி மிகவும் நேசிக்கும் ஒன்று ஒளி. விழிகளின் வழியே எனக்குள் ஊடுருவி செல்பவைகளில் இவ்வொளி ஏனோ நீங்கா இடம்பிடித்து விடுகிறது. படர்ந்திருக்கும் இரவில் ஏற்றிவைக்கும் ஒரு சிறு ஒளி அந்த இடத்தையே அழகானதாக மாற்றிவிடுகிறது இல்லையா!
ஏன் எதற்காக தீபம் ஏற்றப்படுகிறது என்று அறியாமலே அதன் அழகுக்காக மட்டுமே விவரம் அறியாத வயதிலேயே கார்த்திகை தீபத்திருவிழாவினால் ஈர்க்கப்பட்டு எங்கள் வீட்டில் தீபம் ஏற்றும் பழக்கம் இல்லாதபோதும் அகல்விளக்குகளை வாங்கி வந்து வீட்டை தீபங்களால் அழகுபடுத்திக்கொள்ள ஆரம்பித்தேன். அதேப்போல் கிறிஸ்துமஸின் போதும் மெழுவத்தியினை கொண்டு அலங்கரிப்பது நான் மிகவும் நேசிக்கும் ஒன்று. சாதாரனமாக ஏற்றிவைக்கும் வத்தியுடன் கூடவே சில Christmas ornaments கொண்டு அலங்கரித்தால் இன்னும் அழகாக தோற்றமளிக்கும். இன்னும் கிரியேட்டிவாக செய்வதென்றால் இயற்கையாக கிடைக்கும் மலர்கள், இலைகள், சருகுகள், குச்சிகள் இவற்றில் எதைக்கொண்டு வேண்டுமானாலும் அலங்கரிக்கலாம். வெயில் பட்டவுடன் பூப்போல விரிந்து கிடக்கும் Pine cones கொண்டு அலங்கரிப்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. கிறிஸ்துமஸ் அலங்காரப்பொருட்களில் இதற்கு முக்கிய பங்குண்டு. பூக்களைப்போல காட்சியளிக்கும் இவைகளுக்கு பல நிறங்களில் வண்ணந்தீட்டி தற்பொழுது கடைகளில் விற்கப்பட்டு வருகிறது. மலைப்பகுதிகளுக்கும் அடர்ந்த காட்டுப்பகுதிகளுக்கும் சென்று வரும் பொழுதுகளில் மரங்களினின்று கீழே விழுந்துக்கிடக்கும் Pine conesகளை சேகரித்து வைத்துக்கொள்வேன். நான்காவது மற்றும் கடைசிப்படத்தில் இருப்பது அதைக்கொண்டு அலங்கரித்ததுதான்.
Artificial flowers, Pine cones, Christmas balls, paper garlands.... இவைகளுடன் சிறியது பெரியதுமாக வண்ண மெழுகுவத்திகள் கொண்டு நான் உருவாங்கிய Candle decorations........ புகைப்படங்களாக்கி உங்கள் முன் வைத்துள்ளேன். ஆர்வம் உள்ளவர்கள் இதேப்போல் மெழுவத்திகளை கொண்டு உங்கள் வீட்டினை அழகுப்படுத்திக்கொள்ளுங்கள். வீட்டின் உள்ளமைப்புக்கு ஏற்றார்போல தேவைப்படும் நிறங்களில் அலங்கரிப்பது கூடுதல் அழகைக்கொடுக்கும். ஒளியினால் உங்கள் வீட்டின் அறை அழகாக தோற்றமளிப்பதோடு உங்கள் உள்ளத்து அறைகளும் ரம்மியமாக மாறிவிடும்.




இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!
ஹேப்பி ஹாலிடேஸ்!!!!!