நானும் என் பங்குக்கு எல்லாம் முடித்து, இறுதியாக இன்று கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக ரவை கேக்கும் செய்தாகிவிட்டது. சுலபமான அந்த குறிப்பை கீழே கொடுத்துள்ளேன், ட்ரை பண்ணிபாருங்க!
தேவை :
சர்க்கரை - 500g
வெண்ணெய் - 250g
முட்டை - 8
வெண்ணிலா(பவுடராக) - 8g
பேக்கிங் சோடா - 10g
முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய்
ரம் - 15cl
செய்முறை :
- முந்திரி திராட்சை வெண்ணிலா சேர்த்து ரம்மில் ஒரு ஐந்து நாட்கள் முன்பே ஊறவைத்துக்கொள்ள வேண்டும்.

- முதலில் ரவையை உருக்கிய வெண்ணையில் ஐந்து அல்லது ஆறு மணி நேரம் முன்பே ஊற வைத்துவிடவும்.
- முட்டைகளை மஞ்சள் தனியாகவும் வெள்ளை தனியாகவும் பிரித்துக்கொண்டு, வெள்ளையை மட்டும் நன்றாக நுரைத்துவரும் வரை அடித்துக்கொள்ளவும்.
- மஞ்சள் முட்டையை நன்றாக அடித்துக்கொண்டு, அவற்றுடன் சர்க்கரை, வெண்ணெய், ஊறவைத்த முந்திரி திராட்சை ரம், மற்றும் வெண்ணிலா, பேக்கிங் சோடா, தட்டிய ஏலக்காய் சேர்த்து கலக்கவும்.
- இவற்றுடன் ரவை கொஞ்சம் வெள்ளை முட்டை கொஞ்சம், என்று இரண்டையும் மாற்றி மாற்றி சேர்த்து கலக்கவும்.
- இந்த கலவையை ஓவனில் சரியாக 45 நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து bake செய்து எடுத்தால் சூப்பரா ஒரு ரவை கேக் ரெடி!(நிச்சயமா இந்த கேக்கில் ரம் வாசனை வராது)!!!
கிறிஸ்துமஸ் கொண்டாடும் அணைவருக்கும்
என் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் !!!