Subscribe:

Pages

Wednesday, November 28, 2012

உறங்கும் அழகி...!

      
       எந்த ஒரு காட்சியையோ அல்லது ஒரு புகைப்படத்தையோ  பார்த்து உடனே வரைந்து பார்க்க தோன்றும்... அப்படி தோன்றிய உடனே அவற்றை இன்னும் கூர்ந்து கவனிப்பேன். ஒவ்வொரு அங்கமாக பார்த்து அதில் இருக்கும் அனைத்தையும் மனதில் உள்வாங்கிக்கொண்ட பிறகுதான் வரைய வேண்டும் என்ற முடிவுக்கு வருவேன். அப்படி பார்த்தவுடனே பிடித்து போனது தோழி ஒருவர் தந்த பெண் குழந்தையின் போட்டோ. கண்மூடி உறங்கும் அழகியாக தோன்றியது. அதிலும் அந்த குழந்தையின் தலைமுடி அவ்வளவு அழகாக இருந்தது. அதற்காகவே இதை வரைந்துப் பார்க்க வேண்டுமென நினைத்தேன். நினைத்த படி மூன்று மணி நேரத்தில் வரைந்ததுதான் இங்கே காணும் பென்சில் ஸ்கெட்ச்.

20 comments:

ரிஷபன் said...

ஆஹா அழகு உயிரோட்டமாய்

r.v.saravanan said...

எனக்கென்னமோ குழந்தையுடன் சேர்ந்து பொம்மையும் உறங்குவதாக தோன்றுகிறது அந்த அளவுக்கு ஈர்ப்புடன் இருக்கிறது ஓவியம்

வெல்டன் பிரியா

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் அருமை... வாழ்த்துக்கள்...

முடிகளும், கண்களும் Super...

வை.கோபாலகிருஷ்ணன் said...

உறங்கும் அழகி மிகவும் அருமையாக வரையப்பட்டுள்ளது. பாராட்டுக்கள்.

உயிரோட்டம் உள்ள ஓவியம்.

Bharathi Dhas said...

தலைப்பும் (உறங்கும் அழகி...!), ஓவியமும் ஒன்றை ஒன்று மிஞ்சுகிறது :-)

Beautiful Priya:-)

Menaga Sathia said...

புகைப்படம் அவ்வளவு அற்புதமா இருக்கு ப்ரியா....

Mahi said...

Cute!

Priya said...

நன்றி ரிஷபன்!

உண்மைதான் சரவணன் சார், குழந்தையுடன் சேர்ந்து பொம்மையும் உறங்குகிறதோ என்னவோ!

மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்!

தங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி கோபாலகிருஷ்ணன் சார்!

Priya said...

நன்றி பாரதி!

நன்றி மேனகா!

நன்றி மகி!

puduvaisiva said...

ஓவியத்தை ரசிக்கும் போது மனதிற்குள் இந்த பாடல் வரிகள் .....

"நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே . . .

கண்ணில் மணி போல மணியின் நிழல் போல
கலந்து பிறந்தோமடா - இந்த
மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும்
மறக்க முடியாதடா உறவை பிரிக்க முடியாதடா"

நன்றி பிரியா . . .

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_30.html) சென்று பார்க்கவும்...

நன்றி...

அப்பாதுரை said...

beautiful!

Raghu said...

வெரி நைஸ்! அந்த முகத்தில் தூக்கத்தை கொண்டு வர எவ்வளவு பொறுமையா வரைஞ்சிருப்பீங்கன்னு யோசிச்சு பார்க்கிறேன். ரியலி க்ரேட் ப்ரியா!

Priya said...

@puduvai siva... அழகான பாடல் வரிகள்.. இனி இந்த ஓவியத்தை பார்க்கும் போதெல்லாம் எனக்கும் இந்த பாடல் வரிகள் மனதிற்குள் வந்து செல்லும் என நினைகிறேன்.

@திண்டுக்கல் தனபாலன்... மிக்க நன்றி தகவல் தந்து சென்றதிற்கு!

நன்றி அப்பாதுரை!

மிக்க நன்றி ரகு!

Theepz said...

Fantastic!
Romba azhaga irukku...

http://creativearul.blogspot.in

Ahamed irshad said...

அருமைங்க ப்ரியா..

Dino LA said...

சிறப்பான பதிவு..

மாணவன் said...

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

கோமதி அரசு said...

கண்மூடிதூங்கும் காவியம்.
அழகு.

உங்கள் பழைய பதிவு ஓவியங்கள் எல்லாம் பார்த்தேன் அழகு.
கடவுள் வரைந்த ஓவியங்கள் மலர்களில் இறைவனை கண்டேன்.
வாழ்த்துக்கள்! விஜயன் அவர்கள் உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டு இருந்தார்கள்.

கோமதி அரசு said...

முன்பு கோலங்கள் பதிவில் உங்கள் சிக்கு கோலங்களை பார்த்து பாராட்டி இருக்கிறேன்.

Post a Comment